You are here

இந்தியா

800,000 பேருடன் அமைதிப் பேரணி

மும்பையில் சுமார் 800,000 பேர் கலந்துகொண்ட பிரம்மாண்ட அமைதிப் பேரணி நடந்தது. இதனால் மும்பையின் பல பகுதிகளில் வாகன, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் 10,000 போலிசார் ஈடுபட்டனர். அரசு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு, விவசாய விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி மராத்தா கிராந்தி மோர்ச்சா அமைப்பினர் நடத்திய இந்தப் பேரணியை அடுத்து அவர்களது முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒப்புதல் அளித்தார். படம்: ஏஎஃப்பி.

சென்னையில் துப்பாக்கி விற்றவர்கள் கைது

சென்னை: சட்ட விரோதமாக துப்பாக்கி விற்றவர்களை சென்னை போலிசார் கைது செய்து உள்ளனர். சென்னை வாலாஜா சாலை யில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சில நபர்கள் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை செய்வதாக ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு போலிசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலிசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கி விற்க முயன்ற வியாசர்பாடியைச் சேர்ந்த கோபிநாத், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த முருகன், மதுராந்தகத்தைச் சேர்ந்த குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோரை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வுப் பிரிவு போலிசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

கழுதை மூலம் பொருட்களைக் கொண்டுசெல்லத் தடை

மதுரை: சதுரகிரி மலைக்கு பொருட்களைக் கொண்டுசெல்ல கழுதைகளைப் பயன் படுத்த மதுரை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள சதுரகிரி மலைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடு ருவலைத் தடுக்க கண்காணிப்பு கோபுரம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விருதுநகரைச் சேர்ந்த முருகன் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், “சதுரகிரி வனப்பகுதி சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக விளங்கி வரு கிறது. இங்கு கண்காணிப்பு கோபுரக் கட்டுமானப் பணிக்கு வீட்டு விலங்கினமான கழு தையைப் பயன்படுத்தி பொருட் கள் கொண்டு செல்லப்படுகிறது.

அதிகாரி சகாயத்துக்கு ஜி.ராமகிருஷ்ணன் ஆதரவு

சென்னை: அதிகாரி சகாயத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து இப்போது வரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பது மிகப்பெரிய வெட்கக்கேடு என்று கூறியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். சகாயத்துக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள அவர், கிரானைட் முறைகேட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பைத் தவறிழைத்த நிறுவனங்கள், உடந் தையாக இருந்த அதிகாரிகள் என அனைவரிடமிருந்தும் தமிழக அரசு வசூலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர், இரு அமைச்சர்கள் பதவி விலக டிராபிக் ராமசாமி வலியுறுத்து

சென்னை: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முதல்வர் பழனிசாமியும் இரு அமைச்சர்களும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வலியுறுத்தி உள்ளார். இதற்காகத் தமிழகம் முழுவதும் தாம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “கொள்ளையடிக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. இதற்கு மத்திய அரசு உதவுகிறது,” என்றார் டிராபிக் ராமசாமி.

நீர் சேகரிப்பு: தமிழக அரசை இடித்துரைத்த உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: தமிழக அரசு நீர் சேகரிப்பில் போதுமான கவனம் செலுத்தவில்லை என உச்ச நீதிமன்றம் இடித்துரைத்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசா ரணையின் போது, மேட்டூர் அணை போன்ற பெரிய நீர்த்தேக்கங்கள் இருக்கும் பொழுது, அவற்றில் அதிக அளவில் நீர் தேக்கி வைக்க ஏன் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என நீதிபதிகள் தமிழக அரசுத் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக கடந்த 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு தொடர்பான வழக் கில் தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் மனுக்கள் தாக்கல் செய்துள் ளன.

தாக்க வந்ததாக கருதப்பட்டவருக்கு உதவிக்கரம் நீட்டிய பன்னீர்செல்வம்

தேனி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தாக்கும் நோக்கில் கத்தியுடன் வந்ததாகக் கருதப்பட்ட சோலைராஜன் மீது வழக்குப் பதியாமல் போலிசார் விடுவித்தனர். விசாரணை யில் அவர் அத்தகைய நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை எனத் தெரியவந்தது. அவர் தன் மகளின் திருமணத்துக்காக உதவி கேட்கவும் பன்னீர்செல்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் மட்டுமே எண்ணி இருந்ததாக சோலைராஜனின் மனைவி கூறினார்.

ஏரியைப் பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கட்சராயன் ஏரியை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக ஏரியில் தூர் வாரும் பணிகளைப் பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி வழங்குவதில் கௌரவப் பிரச்சினை ஏதுமில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கட்சராயன் ஏரியைத் திமுகவினர் பல நாட்களாகத் தூர் வாரிவந்த நிலையில், அப்பணியைப் பார்வையிட அங்கு சென்றார் ஸ்டாலின். எனினும் இடையிலேயே அவர் தடுத்து நிறுத்தப்படவே, நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏரியைப் பார்வையிட அனுமதிக்க வேண்டுமென நேற்று உத்தரவிட்டது.

அணை கட்டுவதே இருதரப்புக்கும் நல்லது: கர்நாடகா திட்டவட்டம்

சென்னை: கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவியதன் காரணமாகவே காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை நிலவுகிறது என அம்மாநில விவசாயத்துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை விளையும் என்றார். மேகதாதுவில் அணை கட்டப்போவது உறுதி என்றும் அந்நிலைப்பாட்டில் மாற்றம் ஏதுமில்லை எனவும் கவுடா திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

விவசாயிகளை வஞ்சிக்கும் அரசுகள்: திருமா புகார்

தஞ்சை: மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சாடினார். கதிராமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்தில் விவசாயத்தை யும் விவசாயிகளையும் ஒட்டுமொத்தமாக அழிக்க நினைப்பதாகவும் புகார் எழுப்பினார். இதையெல்லாம் தமிழக அரசு கண்டுகொள்ள வில்லை என்று குறிப்பிட்ட அவர், தமிழக அரசு எதிர்ப்பைத் தெரிவிப்பது போன்று செயல்பட்டு, மத்திய அரசின் திட்டங்க ளுக்கு ஜால்ரா போட்டு வருவதாக விமர்சித்தார்.

Pages