You are here

இந்தியா

படிக்கட்டுப் பயணத்தால் மோதல்: பிளேடால் அறுத்த மாணவர்கள்

கரூர்: படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களைப் பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் கண்டித்ததையடுத்து, ஆவேசமடைந்த மாணவன் ஒருவன் ஓட்டுநரின் கழுத்தில் பிளேடால் அறுத்த சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூரில் இருந்து தினமும் மூலிமங்கலம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்தில் நேற்று முன்தினம் பயணம் செய்த அரசுப் பள்ளி மாணவர்கள் சிலர் நீண்ட நேரம் படிக்கட்டிலேயே நின்றிருந்தனர். இதையடுத்து அவர்களை மேலே ஏறி வரும்படி நடத்துநர் ராஜேந்திரன் கண்டிக்க, வாக்குவாதம் முற்றியது. அப்போது ராஜேந்திரனை மாணவர்கள் தாக்க, அவரை மீட்க முயன்றார் ஓட்டுநர் சிவக்குமார்.

சீனாவுக்கு கடத்தப்பட இருந்த 3.5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்

புதுக்கோட்டை: சீனாவுக்கு கடத்த திட்டமிட்டிருந்த 3.5 டன் செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர், இது தொடர்பாக சிலருக்கு வலைவீசி உள்ளனர். நேற்று முன்தினம் புதுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கைமீண்டான் கிராமத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அக்கிராமத்தில் இருந்த கிடங்கில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. மேலும் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 10 மூட்டை பீடி தயாரிக்கும் இலைகளையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வெள்ளத்தில் உடைந்த பாலம்; பள்ளத்தில் விழுந்த பேருந்து

திருச்சி: அரியலூர் அருகே செந்துறை - ஆர்.எஸ். மாத்தூர் வழிப்பாதையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. எனவே போக்குவரத்து வசதிக்காக நிண்ணியூர் காட்டு ஓடையில் தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்துவருகிறது. கடந்த புதன்கிழமை (ஆக.9) இரவு 8 முதல் 10 மணி வரை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நிண்ணியூர் தற்காலிகப் பாலம் உடைந்து வெள்ளத் தில் அடித்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டது.

மின்சாரத்தை உணவாக சாப்பிடும் அபூர்வ மனிதர்

நரேஷ்குமார். படம்: ஊடகம்

முசாபர் நகர்: ‘மனித விளக்கு’ என்று தன்னைத் தானே செல்ல மாக கூறிக்கொள்ளும் ஆடவர் ஒருவர் மின்சாரத்தில் இருந்து தனக்கு சக்தி கிடைப்பதாகவும் மின்சாரம் பாய்ந்து கொண் டிருக்கும் வயர் களைத் தொடு வதால் அது தன்னைப் பாதிப்பது இல்லை என்றும் கூறியுள்ளார். “மின்சாரத்தை அரை மணி நேரம் கையில் பிடித்துக்கொண் டிருந்தால் போதும். பசி எடுக் காது. வீட்டில் உணவு இல்லாத தருணங்களில் எனக்கு எப் பொழுது எல்லாம் பசிக்கிறதோ அப்போது எல்லாம் மின்சாரம் ஓடிக்கொண்டிருக்கும் வயர் களைப் பிடித்து வாயில் வைத்துக் கொள்வேன். அரை மணி நேரத்தில் உணவு உண்ட திருப்தி எனக்கு ஏற்பட்டுவிடும்.

பதவி விலக தயாராக இருக்கும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு தமிழகத்தில் அக்கட்சியை ஆட்சிப் பொறுப்பிலிருந்தே அகற்றிவிடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த தும் அதிமுகவில் அதிகார யுத்தம் தலைதூக்கி விட்டது. ஜெயலலிதாவுக்குப் பின் சசிகலா தான் என்று ஆதரித்தோர்கூட, சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர். சசிகலா வெளியில் இருந்தபோதே அதிமுக வில் அவரது குடும்பம் ஆதிக்கம் செலுத்து வதாகக் கூறி, அங்கிருந்து வெளியேறிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தனக்கென ஒரு தனி அணியை உருவாக்கி, தானே உண்மையான அதிமுக என முழங்கி வருகிறார்.

வெளிநாட்டு சிறைகளில் 7,620 இந்தியர்கள்

புதுடெல்லி: வெளிநாடுகளில் உள்ள சிறைகளில் இந்தியர்கள் 7,620 பேர் அடைக்கப் பட்டுள்ளதாக வெளியுறவு இணையமைச் சர் எம்.ஜே. அக்பர் தெரிவித்துள்ளார். மக்களவையில் உறுப் பினர்களின் வினாவுக்கு விடையளித்த அவர், உலகின் பல்வேறு நாடுகளில் 86 சிறைகளில் இந்தியர்கள் 7,620 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக வும் இவர்களில் 50 பேர் பெண்கள் என்றும் தெரிவித்தார்.

காவல் அதிகாரி இடமாற்றத்துக்கு ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்த இருவர் கைது

புதுடெல்லி: காவல்துறை அதிகாரி இடமாற்றத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ராஜன்குமார், அருண் திவாரி ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லியில் காவல்துறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பனய் சிங் மீனா. டெல்லி ஆர்.கே.புரத்தில் அரசு அதிகாரி காமேஷ்வர் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தவர் ராஜன்குமார். இவர் தன்னை ஒரு அரசு அதிகாரி என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் காவல்துறை இன்ஸ்பெக்டர் பனய் சிங் மீனா, தான் விரும்பிய ஒரு இடத்துக்கு இடமாற்றம் பெற்றுத் தருவதற்காக ராஜன்குமாரிடமும் அருண் திவாரி என்பவரிடமும் ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார்.

ராஜீவ் கொலைக் கைதிகளை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் அவர்களை நல்லெண்ண அடிப்படை யில் விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடை பெற்றது. இந்த மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று பதிலளித்த மத்திய அரசு, குற்றவாளிகள் இருவரையும் விடுதலை செய்ய முடியாது எனத் தெரிவித்து உள்ளது.

800 கிலோ போதைப்பொருள் மீட்பு

சென்னை: சென்னை கொத்தவால் சாவடியில் 50 மூட்டை களில் கடத்தப்பட்ட 800 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மினி வேனில் கடத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் வாகன சோதனையின்போது பிடிபட்டன. இது குறித்து சரவணன் என்ற தனியார் கிடங்கு உரிமையாளரைக் கைது செய்து கொத்தவால் சாவடி போலிசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர்.

இணையும் அதிமுக பிரிவுகள்

ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி. கோப்புப் படம்

அதிமுக அணியின் இரு பிரிவுகளான முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பிரிவு, தற் போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரிவு ஆகியவை மீண்டும் ஒரு தலைமையின்கீழ் இணைந்து ஒன்றுபட்ட அதி முகவாக வலம் வர உள்ளதாக இந்திய செய்தித் தகவல்கள் கூறுகின்றன. இதற்கு முன்னோடியாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழி யும் தற்பொழுது பெங்களுர் சிறையில் இருப்பவருமான சசி கலாவால் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்ட டிடிவி தினகரனுக்கு கட்சி யில் எந்தப் பதவியும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி அறி வித்துள்ளார்.

Pages