You are here

இந்தியா

வாராக் கடன் ரூ.9.53 லட்சம் கோடி

மும்பை: இந்தியாவில் வங்கிகளின் மூலம் வழங்கப்பட்ட வாராக் கடன்களின் அளவு கடந்த ஜூன் மாதம் வரை யில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.9.53 லட்சம் கோடி (145.56 பில்லியன் டாலர்) அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆசியாவின் 3வது பெரிய பொருளியலைக் கொண் டிருக்கும் இந்தியாவில் வாராக்கடன்களைக் கட்டுப்படுத்த இதுவரை எந்தப் பெரிய நடவடிக்கைகளும் இல்லை.

மனைவி 18 வயதுக்குக் கீழ் இருந்தால் பாலியல் உறவு குற்றமாகும்

புதுடெல்லி: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பில் 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளைத் திருமணம் செய்து அவருடன் உறவு கொண்டால் பாலியல் பலாத்கார மாகக் கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள் ளது. இதன்படி திருமணமானாலும் 18 வயதுக்குக் கீழ் உள்ள மனைவி யிடம் உடலுறவு கொள்வது சட்டப் படி குற்றமாகும். திருமணமாகி ஓராண்டிற்குள் கணவர் மீது மனைவி புகார் கொடுத்தால் அது பாலியல் பலாத்காரமாகக் கருதப் படும் என்றும் நீதிமன்றம் கூறியது. குழந்தை திருமணத்தைத் தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் நேற்று இந்தத் தீர்ப்பை வழங்கி யுள்ளது.

பண விவகாரத்தில் மாறு வேடத்தில் சென்றதாக தகவல்; முதல்வர் தரப்பு கடும் அதிர்ச்சி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: பரோலில் வெளி வந்துள்ள சசிகலாவை மூன்று அமைச்சர்கள் ரகசியமாக சந் தித்துப் பேசியதாக வெளியான தகவலால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறப்படு கிறது. இதையடுத்து அதிருப்தியில் உள்ள அக்குறிப்பிட்ட மூன்று அமைச்சர்களையும் முதல்வர் தரப்பு சமாதானப்படுத்தி உள்ளதா கவும் தகவல் வெளியாகியுள்ளது. தன் கணவரின் உடல்நிலையை காரணம் காட்டி பெங்களூரு சிறையில் இருந்து ஐந்து நாள் பரோலில் வந்துள்ளார் சசிகலா.

தீபாவளி: அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி: அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புத்தாடைகள், புதுப் பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து சென்னையில் உள்ள துணிக் கடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் விற்பனையகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக தியாகராய நகர், புரசைவாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மாலை வேளைகளில் போக்குவரத்து மக்கள் கூட்டத்தால் நிலைகுத்திப் போகிறது. இத்தகைய பகுதிகளில் காவல்துறையினர் தங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர். படம்: சதீஷ்

வேலு நாச்சியார் மேடை நாடகத்தை திரைப்படமாக தயாரிக்கும் வைகோ

வேலு நாச்சியார் நாடகத்தைப் பார்வையிடும் வைகோ, நடிகர்கள் விஷால், நாசர். படம்: தகவல் ஊடகம்

சென்னை: மதிமுக பொதுச்செயலர் வைகோ, வேலு நாச்சியார் நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது அவர் தயாரிக்கும் முதல் படம். கண்ணகி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ள அவர், திரைப்படங்கள் மீது தமக்கு மிகப் பெரிய காதல் உண்டு எனக் கூறியுள்ளார். “எனது சினிமா காதலை வெளியில் காட்டிக் கொண்டதில்லை. வேலு நாச்சியார் கதையைத் திரைப்படமாக தயாரிப்பது எனது மிகப்பெரிய கனவு,” என்று வைகோ தெரிவித்துள்ளார். வேலு நாச்சியார் மேடை நாடகம் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டு அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

கேரள கோயிலில் தடைகளை உடைத்து மந்திரங்களை ஓதிய முதல் தலித் அர்ச்சகர்

படம்: இந்திய ஊடகம்

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மணப்புரம் சிவன் கோயிலில் முதல் தலித் அர்ச்சகரான யது கிருஷ்ணன் கருவறைக்குள் நுழைந்து பூசை களைத் தொடங்கியபோது அவரது சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான வர்கள் ஆரவாரத்துடன் துள்ளி குதித்தனர். அம்மாநிலத்தில் அர்ச்சகர் களாக நியமிக்கப்பட்ட பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினர்களில் யது கிருஷ்ணனும் ஒருவர். இவர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அண்மையில் கேரள அரசின் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம், 62 பேரை அர்ச்சகர்களாக நியமித்தது.

திருநங்கை ஆவேசம்: என்னால் எதிரிகளை சுட்டு வீழ்த்த முடியும்

மணிஷ் கிரி. படம்: இந்திய ஊடகம்

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய மணிஷ் குமார் கிரியை கப்பல் மாலுமி பொறுப்பிலிருந்து இந்திய கடற்படை நீக்கியுள்ளது. இதனால் ஆவேசமடைந்துள்ள அவர், என்னாலும் எதிரிகளைச் சுட்டு வீழ்த்த முடியும் என்று கூறியுள்ளார். கடந்த 2010ல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மணிஷ் கிரி, ஐஎன்எஸ் இக்ஸிலா கப்பற்படைத் தளத்தில் மாலுமியாக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு விடுமுறைக்குப் பிறகு பணிக்குத் திரும்பிய அவரிடம் வித்தியாச மான மாற்றங்கள் தென்பட்டன. சேலை அணிந்தும் அவர் வலம்வந்தார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரிடம் விசார ணை நடத்தினர்.

போராடித் தோற்றது இந்தியா

புதுடெல்லி: கொலம்பியா அணிக்கு எதிரான 17 வயதிற்குட் பட்டோருக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் வெற்றிக் காக போராடிய இந்திய அணி 1–2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. டெல்லியில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, கொலம் பியாவை எதிர்கொண்டது. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் கொலம்பியா அணி 49வது நிமிடத்தில் முதல் கோல் போட்டது. அந்த அணி வீரர் ஜூயன் பெனாலோசா இந்தக் கோலை அடித்தார். 82வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் ஜீக்சன் பதில் கோல் திருப்பினார். இதன் மூலம் உலகக் கிண்ணப் போட்டியில் கோல் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா

பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத திருவிழா கமுதி அருகே சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. அங்குள்ள முதல்நாடு கிராமத்தில் முப்பிடாதி அம்மனுக்கு கோவில் உள்ளது. இக்கோவில் அருகே பெண் ஒருவரின் நினைவாக அமைந்துள்ள பீடத்துக்கு ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பூசை செய்து திருவிழாவும் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் இறுதி நாளான பெளர்ணமி தினத்தன்று, அந்தப் பீடத்துக்கு ஆண்கள் ஒன்றுகூடி கைக்குத்தல் பச்சரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தையும், 50 கிடாய்களைப் பலியிட்டும் படையல் வைத்தனர்.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா

பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டுமே வழிபடும் விநோத திருவிழா கமுதி அருகே சனிக்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. அங்குள்ள முதல்நாடு கிராமத்தில் முப்பிடாதி அம்மனுக்கு கோவில் உள்ளது. இக்கோவில் அருகே பெண் ஒருவரின் நினைவாக அமைந்துள்ள பீடத்துக்கு ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பூசை செய்து திருவிழாவும் கொண்டாடுகிறார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் இறுதி நாளான பெளர்ணமி தினத்தன்று, அந்தப் பீடத்துக்கு ஆண்கள் ஒன்றுகூடி கைக்குத்தல் பச்சரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தையும், 50 கிடாய்களைப் பலியிட்டும் படையல் வைத்தனர்.

Pages