You are here

இந்தியா

மத்திய அரசின் நியாயமற்ற செயல்: ஜெயலலிதா குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் ஜெயலலிதா

சென்னை: பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தியது நியாயமற்ற செயல் என தமிழக முதல்வர் ஜெய லலிதா விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், வரி உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “உலகச் சந்தையில் நிலவும் பெட் ரோலியப் பொருட்களின் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங் கள் பெட் ரோல், டீசல் ஆகியவற்றின் விலை களைக் குறைக்கவில்லை.

மல்லர் கம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவர்

அகில இந்திய அளவில் பல்கலைக் கழகங்களுக்கு இடையே பஞ்சாபில் நடந்த மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டி யில் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவர் ஆதித் யன் தங்கப் பதக்கம் வென்றார். இவ்விளையாட்டில் தமிழ்நாட்டில் தங்கப் பதக்கம் வென்ற முதல் நபர் இவர்தான். மல்லர் கம்பம் என்பது ஒரு மரத்தை நட்டு வைத்து, அது முழுவதும் விளக் கெண்ணெய்யைத் தடவி வைப்பார்கள்.

அதன் அடிப்பகுதியில் இருந்து உச்சி வரை சென்று ஆசனம், கரணம் போன்ற வீர, தீரச் செயல்கள் செய்வதாகும். படம்: இணையம்

தடையை மீறி ஜல்லிக்கட்டு

காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளபோதும் அந்தத் தடையை மீறி சில இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமத்தில் நேற்று முன்தினம் சனிக் கிழமை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. அங்குள்ள மாரியம்மன் திடலில் 65 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டதாக வும் அவற்றை அடக்கும் முயற்சியில் 40 ஆடவர்கள் பங்கெடுத்ததாகவும் சொல்லப்பட்டது.

விமான நிறுவன நிர்வாகியை அறைந்த ஆந்திர எம்.பி. சென்னையில் கைது

ஆந்திர  நாடாளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி

ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகியைத் தாக்கியதற்காக ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினர் மிதுன் ரெட்டி (படம்) சென்னை விமான நிலையத் தில் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரெட்டி ஏர் இந்தியா நிறுவனத்தில் நிர் வாகியாகப் பணியாற்றும் திரு ராஜசேகர் என்பவரின் கன்னத்தில் அறைந் ததாகக் கூறப்பட்டது.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது: வைகோ

மதிமுக பொதுச்செயலர் வைகோ

மதுரை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கணித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலக் கூட்டணி யானது தமிழக அரசியலில் பிரமிக்கத்தக்க மகத்தான திருப்பத்தை ஏற்படுத்தப் போகி றது என்றும் தெரிவித்தார்.

பட்டம் விடும் திருவிழா: பொதுமக்கள் குதூகலம்

வட மாநிலங்களில் பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. புனே உட்பட பல்வேறு நகரங்களிலும் நரேந்திர மோடி, ‘பாகுபலி’ திரைப்படத்தின் படங்கள் கொண்ட பட்டங்களின் விற்பனை படு ஜோராக நடைபெற்றது. நரேந்திர மோடி, பாகுபலி, பேட்மேன், ஆங்கிரி பேர்ட், ஸ்பைடர் மேன் பட்டங்களும் குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்தன. பொங்கல் பண்டிகையை வட மாநிலங்களில் பட்டம் பறக்கவிட்டு கொண்டாடுகின்றனர்.

பெட்ரோல் விலை: தலைவர்கள் கண்டனம்

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட தற்கு திமுக தலைவர் மு.கருணா நிதி கடும் கண்டனம் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் 5 முறைக்கு மேல் கலால் வரி மத்திய அரசால் உயர்த்தப் பட்டதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

திருவள்ளுவர் நாளையொட்டி ஒரு ரூபாய்க்கு தேநீர் விற்ற பெரியவர்

தஞ்சாவூர்: திருவள்ளுவர் நாளை முன்னிட்டு பெரியவர் ஒருவர் தனது கடையில் ஒரு ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்தார். அவர் கடந்த பல ஆண்டுகளாக இவ்வாறு செய்து வருவது தெரியவந்துள்ளது. பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார் என்ற அம்முதியவர் அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். தமிழ்ப் பற்றாளரான இவர் திருக்குறள் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர்.

இதனால் தன்னுடைய பெயருக்கு முன்பு திருக்குறள் தங்கவேலனார் என்று சேர்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கிறார். தனது தேநீர்க் கடையின் முன்பு பலகையில் தினமும் ஒரு திருக்குறளை எழுதி அதற்கான விளக்கத்தையும் எழுதி வைக்கிறார்.

ஜல்லிக்கட்டுத் தடையை எதிர்த்து தென்தமிழகத்தில் கொந்தளிப்பு

ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் நேற்று ஐந்தாவது நாளாகப் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசு வழங்கிய அனுமதி நீடித்திருந்தால் அலங்கா நல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டியது. தடை காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியதோடு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் நடந்த பொங்கல் விழாக் கொண்டாட்டம்

மும்பையில்  கூட்டுப் பொங்கல்

தைப் பொங்கலான வெள்ளிக்கிழமையன்று மும்பையில் அங்கு வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் பொங்கல் வைத்து கொண்டாடி வழிபட்டனர்.

படம்: ஏஎஃப்பி

Pages