You are here

இந்தியா

பலமான கூட்டணி: தமிழிசை நம்பிக்கை

தமிழிசை சௌந் தரராஜன்

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக பாஜக பலமானதொரு கூட்டணியை அமைக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந் தரராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், இந்தக் கூட்ட ணியானது கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியை விட பலமானதாக இருக்கும் எனவும் கூறினார்.

வாசன்: பேரவைத் தேர்தலுக்காக வெற்றிக் கூட்டணி அமைப்போம்

ஜி.கே.வாசன்

சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா வெற்றிக் கூட்டணியை அமைக்கும் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மீனவர் பிரச்சினை தொடர் கதையாக உள்ளது என்றார்.

“பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கையிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டரை தமிழக அரசு வழங்க வேண்டும்,” என்றார் வாசன்.

பொங்கல் விழா கொண்டாடிய கல்லூரி மாணவிகள்

கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கொண்டாட்டம்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அக்கல்லூரி மாணவிகள் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளை ஆடினர்.

தாவணி அணிந்த மாணவிகள், பொங்கல் வைத்து மகிழ்ந்ததுடன், பொங்கல் பானைகளைச் சுற்றி வந்து, கும்மியடித்து ஆடினர். இந்த நிகழ்வு தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். படம்: சதீஷ்

நீதிமன்றத்தில் முன்னிலை ஆன அனிருத்

கோவை: ஆபாசப் பாடல் விவகாரம் தொடர்பில் இசையமைப்பாளர் அனி ருத் கோவை காவல் துறையினர் முன்பு முன் னிலையானார். பின்னர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார். ஆபாசப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு, அனிருத் இருவருக்கும் நேரில் முன்னிலையாக வேண்டுமென கோவை போலிசார் அழைப்பாணை அனுப்பினர். எனினும் நேரில் முன்னிலையாக அவகாசம் தேவை என சிம்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. கனடாவில் இருந்ததால் அனிருத் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில் திங்கட்கிழமை கோவை வந்த அனிருத், தனது வழக்கறிஞருடன் கோவை காவல் நிலையத்தில் நள்ளிரவு 12 மணியளவில் முன்னி லையாகி எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்தார்.

நக்மா: மோதல் வேண்டாம்

தமிழக மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலர்

சென்னை: கோஷ்டி மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மகளிர் காங்கிரசாருக்கு அக்கட்சியின் பொதுச்செயலரும் நடிகையுமான நக்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் மகளிர் காங்கிரஸ் சார்பில் விவசாய தொண்டர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், மோதல் போக்கை கடைபிடிக்காமல் கட்சி யினர் இணக்கமாகச் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.

இலங்கை ஆளுநர்: அவகாசம் தேவை

இலங்கை மாகாண ஆளுநர் லோகேஸ்வரன் (இடது).

காஞ்சிபுரம்: இலங்கையில் தமிழர் வாழ்வு மேம்பட அவகாசம் தேவை என மேற்கு மாகாண ஆளுநர் லோகேஸ்வரன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், இலங்கையில் தமிழர்கள் சக குடிமக்களாக வாழ அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக் கைகளை துரித கதியில் மேற் கொண்டு வருவதாகக் கூறினார். “இலங்கையின் மேற்கு மாகா ணத்தில் அனைத்து இன மக்க ளும் உள்ளனர். அங்குள்ள தமிழ் மக்களுக்கு கல்வி, தொழில் துறைகளில் பல்வேறு பிரச்சினை கள் உள்ளன. எனவே தமிழரான என்னை ஆளுநராக நியமித்துள்ள னர். தமிழர் ஒருவரை நீதிபதியாக வும் நியமித்தனர்,” என்றார் லோகேஸ்வரன்.

 

இலங்கை மாகாண ஆளுநர் லோகேஸ்வரன் (இடது).

16 மாதத்திற்குப் பின் கட்சி அலுவலகம் சென்ற ஜெயா

சென்னை: எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 16 மாதங்களுக்குப் பின்னர் நேற்று அதிமுக தலைமை அலுவல கத்திற்கு வருகை தந்த அவர், பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்த ஜெயலலிதா, கர்நா டகா உயர் நீதிமன்றத் தீர்ப்பை யடுத்து விடுதலையானார்.

வெடிகுண்டுகள் - திமுகவினரிடம் விசாரணை

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை நகரில் கடந்த நான்கு நாட்களாக வெடிகுண்டு பதற்றம் நீடிக்கிறது. கடந்த சனிக்கிழமை பின்னிரவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் மதுரை பனகல் ரோட்டில் அரசு பொது மருத்துவ மனை அருகே உள்ள அதிமுக அலுவலகத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகளும் நாட்டு வெடிகுண்டு களும் வீசப்பட்டன.

நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன் பட்டினம் கடற்பகுதியில் ஏராள மான திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது. இந்தோனீசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரண மாக திமிங்கிலங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படு கிறது. எனினும் நிபுணர்கள் இதை உறுதி செய்யவில்லை.

உயிர் பிழைத்தது அண்ணா நூலகம்: கருணாநிதி நிம்மதி

உயிர் பிழைத்தது அண்ணா நூலகம்: கருணாநிதி நிம்மதி சென்னை: கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அண்ணா நூலகம் சென்னை உயர்நீதிமன்றத் தலையீட்டால் தற்போது உயிர் பிழைத்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்ணா நூலகம் உருக் குலைந்திருக்கிறது என்ற உண்மையை மறைப்பதற்கில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Pages