You are here

இந்தியா

அரசாங்கத் திட்டங்களை வேக வேகமாக நிறைவேற்றி ஆதாயம் காண்பதில் அதிமுக முனைப்பு

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசின் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தி ஆதா யம் காண்பதில் அதிமுக முனைப் பாக உள்ளதெனக் கூறப்படுகிறது. நீண்டகாலமாக நிறைவேற்றப் படாமல் கிடப்பில் கிடக்கும் திட் டங்களை எல்லாம் தேர்தல் அறி விப்பு வருமுன்னர் நிறைவேற்று வதிலும் அதிமுக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த வகையில், அண்மைக் காலமாக அடுத்தடுத்து அரசாங்கத் திட்டங்கள் அறிமுகம் கண்டு வரு கின்றன. நேற்று முன்தினம் மட்டும் இரண்டு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

ஹரியானா கும்பல் சென்னையில் பல கோடி மோசடி

வங்கி அதிகாரி பேசுவது போல பல வாடிக்கையாளர் களிடம் பேசி, கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்த கும்பல் ஹரியானா மாநிலத்தில் பிடிபட்டுள்ளது. ஏழு பேர் கொண்ட அந்தக் கும்பல், சென்னை யில் வங்கிக் கணக்கு வைத்துள்ளோரின் விவரங் களைத் திரட்டி அவர்களின் கடன்பற்று அட்டை மற்றும் கடன் அட்டைகள் மூலம் மோசடி நடத்தி வந்துள்ளது. தங்களது வங்கிக் கணக் கிலிருந்து திடீர் திடீரென பணம் மறைவதாக 400க்கு மேற்பட்டோர் புகார் தெரி வித்ததைத் தொடர்ந்து போலிசார் நடவடிக்கையில் இறங்கினர்.

சுயநல அரசியல் நடத்துகிறார் ஜெயலலிதா - விஜயகாந்த்

விஜயகாந்த்

விஜயகாந்த் கடும் விமர்சனம் சென்னை: முதல்வர் ஜெயலலிதா வுக்கு மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதல்வருக்கு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் என கூறியுள்ளார். ஜெயலலிதா கடமை தவறி, சுயநல அரசியலும் ஆட்சியும் நடத்துவதாக விமர்சித்துள்ள அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அதிமுக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருவதாகச் சாடினார்.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 இடம்

கோப்புப்படம்

கூட்டணி சேர்ந்து போட்டியிட முன்வந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களை மட்டுமே ஒதுக்க திமுக தயாராக இருப்பதாக ஊடகச் செய்தி ஒன்று குறிப்பிட்டு உள்ளது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவோடு கூட்டு சேர்ந்த காங்கிரசுக்கு 63 இடங்கள் ஒதுக் கப்பட்டன. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த கே.வி. தங்கபாலு இந்த இடங்களை விடாப்பிடியாகக் கேட்டுப் பெற்றார். ஆனால், தமிழகத்தில் காங் கிரஸ் கட்சி வளர்ச்சி பெறராத நிலையில், வாசன் தலைமையிலான ஒரு பகுதியினரும் பிரிந்து சென்று விட்டனர்.

9 மாத உச்சத்தில் தங்கம்

தங்கத்தின் விலை நேற்று முன் தினம் ஒன்பது மாதத்தில் இல் லாத உச்சத்தைத் தொட்டது. ஜனவரி மாத இறுதியிலிருந்தே ஏறி வந்த தங்கத்தின் விலை தொடர்ந்து ஆறாவது நாளாக சனிக்கிழமை உயர்ந்தது. இந்த ஆறு நாட்களில் மட்டும் இந்தியச் சந்தையில் 620 ரூபாய் உயர்ந் தது. உலகச் சந்தையில் ஓர் அவுன்ஸ் தங்கத்தின் விலையில் 1.5 விழுக்காடு உயர்வு கண்டு $1,173.50 ஆனது. இந்தியத் தலைநகர் டெல்லி யில் ஆபரணமல்லாத சொக்கத் தங்கத்தின் விலை 30 ரூபாய் உயர்ந்து பத்து கிராம் 27,700 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

மோசடிப் புகார்: குஜராத் முதல்வருக்கு நெருக்கடி

குஜராத் முதல்வர் அனந்தி பென் படேல்

காந்திநகர்: குஜராத் முதல்வர் அனந்தி பென் படேல் நில மோசடி யில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இதையடுத்து அனந்தி பென் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதனால் குஜராத் முதல்வருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின்னர், பாரதிய ஜனதா தலைமை அனந்தி பென்னை முதல்வராக்கியது.

ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் பலி

 குஜராத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து 37 பேர் பலி

அகமதாபாத்: குஜராத்தில் அரசுப் பேருந்து நதியில் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நவ்சாரி நகரிலிருந்து உகாய் பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பேருந்து. பூர்ணா நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்றபோது அப்பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தில் இருந்து ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் 37 பேர் பலியாகி உள்ளனர். படம்: ஊடகம்

காவல்துறை சங்க நிர்வாகிக்கு ரூ.20 லட்சம் லஞ்சம்: சரிதா புதுத் தகவல்

சரிதா நாயர்

திருவனந்தபுரம்: காவல் நிலையங்களில் சூரிய மின்தகடுகள் அமைப்பதற்காக காவல்துறை சங்க நிர்வாகிக்கு 20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சரிதா நாயர் தெரிவித்துள் ளார்.

நேற்று முன்தினம் சூரிய மின்தகடு முறைகேடு குறித்து விசாரித்து வரும் விசாரணை ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்த அவர், மாநில போலிஸ் சங்க நிர்வாகி அஜித் கேரளா வில் மாநில அனைத்து காவல் நிலையங்களிலும் சூரிய மின் தகடு அமைக்க உதவி செய்வதாகவும் கூறினார். “இதையடுத்து நான் அவர்களின் சங்கத்திற்கு ரூ.20 லட்சம் பணம் நன் கொடையாக கொடுத்தேன்,” என்று சரிதா தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வருவாரா, மாட்டாரா என குழம்பும் பாஜக

சென்னை: கூட்டணி குறித்து விஜயகாந்த் தொடர்ந்து மவுனம் காத்து வருவதால் அவர் வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் எல்லா கட்சிகளையுமே சூழ்ந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருப்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டு விரைவாக தேர்தல் பிரசாரத்தை தொடங்க பாஜக மேலிடம் விரும்புகிறது. இதற்காக கொச்சியில் தமி ழக நிர்வாகிகளுடன் பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். கடந்த தேர்தலில் பாஜக அணியில் தேமுதிகவும் பாமகவும் இடம்பெற்று இருந்தன.

பெங்களூரு விரைவு ரயில் தடம் புரண்டது

ஜோலார்பேட்டை: வேலூர் மாவட் டம், ஜோலார்பேட்டை அருகே நேற்று காலை கன்னியா குமரி=- பெங்களூரு ஐலாண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சோமநாயக்கன்பட்டி - பச்சூர் ரயில் நிலையங்களுக்கு அருகே இந்த விபத்து நடந்தது. விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த பகுதி பெங்களூரு ரயில்வே நிர்வாகத்துக்கு உட்பட்டது என்ப தால் பெங்களூரு பிரிவு ரயில்வே மேலாளர் சம்பவ இடம் வந்தார். தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

Pages