இந்தியா

தமிழ்நாட்டின் ஆம்பூரைச் சேர்ந்த மகேஷ் குமார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் (யுஏஇ) ஃபாஸ்ட்5 அதிர்ஷ்டக் குலுக்கலின் மாபெரும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தின் முதற்கட்டமாக, ஆளில்லா மாதிரி விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) சனிக்கிழமை காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் டெல்லி, காசியாபாத் மற்றும் மீரட் நகரங்களை இணைக்கும் ஆர்ஆர்டிஎஸ் எனப்படும் வட்டார விரைவு போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் முதற்கட்டமாக துஹாய் முதல் சாஹியாபாத் இடையேயான 17 கி.மீ தூர ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்து அதில் பயணம் மேற்கொண்டார்.
ஹைதராபாத்: “தெலுங்கானாவில் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏராளமான நிலங்களைக் குவித்து வைத்திருக்கும் செல்வந்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையேதான் போட்டி,” என்று காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
புதுடெல்லி: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜகவில் வசுந்தரா ஓரம்கட்டப்படுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.