You are here

இந்தியா

ஜல்லிக்கட்டுத் தடையை எதிர்த்து தென்தமிழகத்தில் கொந்தளிப்பு

ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் நேற்று ஐந்தாவது நாளாகப் போராட்டம் நடத்தப்பட்டது. மத்திய அரசு வழங்கிய அனுமதி நீடித்திருந்தால் அலங்கா நல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டியது. தடை காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியதோடு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் நடந்த பொங்கல் விழாக் கொண்டாட்டம்

மும்பையில்  கூட்டுப் பொங்கல்

தைப் பொங்கலான வெள்ளிக்கிழமையன்று மும்பையில் அங்கு வாழும் தமிழர்கள் ஒன்றிணைந்து கூட்டுப் பொங்கல் வைத்து கொண்டாடி வழிபட்டனர்.

படம்: ஏஎஃப்பி

ஜல்லிக்கட்டு கிராமங்களில் பதற்றம்; போலிஸ் குவிப்பு

மதுரை: உச்ச நீதிமன்றத் தடையால் இந்த ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொங்கலன்று (நேற்று) அவனி யாபுரம், மாட்டுப்பொங்கலன்று (இன்று) பாலமேடு, நாளை அலங்கா நல்லூர் என்று வரிசையாக ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.

மத்திய அரசு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவால் வாடிவாசல், பார்வையாளர் மேடை அமைப்பது உட்பட பல பணிகள் அதிகாரிகள் முன்னிலையில் தீவிரமாக நடந் தன. உச்ச நீதிமன்றத் தடையால் அனைத்துப் பணிகளும் உடனே நிறுத்தப்பட்டன. ஜல்லிக்கட்டு நடை பெறும் பகுதிகளில் மூன்று நாட் களாக மறியல், உண்ணாவிரதம், கடையடைப்பு என போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஐந்து லட்சம் பயணிகளால் சென்னையில் கடும் நெரிசல்

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் நேற்று தொடங்கியது. நான்கு நாள் பண்டிகையான பெங்கல் திருநாளை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராள மானோர் கடந்த 9ஆம் தேதியில் இருந்தே தங்கள் சொந்த ஊருக்கு புறப்படத் தொடங்கிவிட்டனர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலை யம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் நான்கு ஆண்டுகளில் 9,948 கொலைகள்

2016-01-15 06:00:00 +0800

சென்னை: தமிழகத்தில் கொலைகளும் கொள்ளைச் சம்பவங்களும் பெருகிவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையில் 9,948 படுகொலைகளும் ஒரு லட்சம் கொள்ளை, திருட்டு நிகழ்வுகளும் நடந்துள்ளதாக அவர் பட்டியலிட்டுள்ளார்.

“மதுரையில் அமைச்சரின் அலுவலகத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதற்கான காரணம் என்னவாக இருந்தாலும், சட்டம் ஒழுங்கு முறையாகப் பராமரிக்கப் படவில்லை என்பதையே இந்த நிகழ்வு வெளிப்படுத்துகிறது. கொலை, கொள்ளைச் சம்பவங் களைக் கட்டுப்படுத்த காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

பலமான கூட்டணி: தமிழிசை நம்பிக்கை

தமிழிசை சௌந் தரராஜன்

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழக பாஜக பலமானதொரு கூட்டணியை அமைக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந் தரராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், இந்தக் கூட்ட ணியானது கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியை விட பலமானதாக இருக்கும் எனவும் கூறினார்.

வாசன்: பேரவைத் தேர்தலுக்காக வெற்றிக் கூட்டணி அமைப்போம்

ஜி.கே.வாசன்

சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமாகா வெற்றிக் கூட்டணியை அமைக்கும் என அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழக மீனவர் பிரச்சினை தொடர் கதையாக உள்ளது என்றார்.

“பல ஆண்டுகளாக நீடிக்கும் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கையிடம் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். காணாமல் போகும் மீனவர்களைக் கண்டுபிடிக்க ஹெலிகாப்டரை தமிழக அரசு வழங்க வேண்டும்,” என்றார் வாசன்.

பொங்கல் விழா கொண்டாடிய கல்லூரி மாணவிகள்

கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா கொண்டாட்டம்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அக்கல்லூரி மாணவிகள் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகளை ஆடினர்.

தாவணி அணிந்த மாணவிகள், பொங்கல் வைத்து மகிழ்ந்ததுடன், பொங்கல் பானைகளைச் சுற்றி வந்து, கும்மியடித்து ஆடினர். இந்த நிகழ்வு தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். படம்: சதீஷ்

நீதிமன்றத்தில் முன்னிலை ஆன அனிருத்

கோவை: ஆபாசப் பாடல் விவகாரம் தொடர்பில் இசையமைப்பாளர் அனி ருத் கோவை காவல் துறையினர் முன்பு முன் னிலையானார். பின்னர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார். ஆபாசப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு, அனிருத் இருவருக்கும் நேரில் முன்னிலையாக வேண்டுமென கோவை போலிசார் அழைப்பாணை அனுப்பினர். எனினும் நேரில் முன்னிலையாக அவகாசம் தேவை என சிம்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. கனடாவில் இருந்ததால் அனிருத் முன்னிலையாகவில்லை.

இந்நிலையில் திங்கட்கிழமை கோவை வந்த அனிருத், தனது வழக்கறிஞருடன் கோவை காவல் நிலையத்தில் நள்ளிரவு 12 மணியளவில் முன்னி லையாகி எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்தார்.

நக்மா: மோதல் வேண்டாம்

தமிழக மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலர்

சென்னை: கோஷ்டி மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மகளிர் காங்கிரசாருக்கு அக்கட்சியின் பொதுச்செயலரும் நடிகையுமான நக்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் மகளிர் காங்கிரஸ் சார்பில் விவசாய தொண்டர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், மோதல் போக்கை கடைபிடிக்காமல் கட்சி யினர் இணக்கமாகச் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.

Pages