இந்தியா

புதுடெல்லி: டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவைப் பிணையில் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மணீஷ் சிசோடியா சிறையில் உள்ளார். மணீஷ் சிசோடியா மீதான வழக்கை ஆறு மாதத்திலிருந்து எட்டு மாதத்துக்குள் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஸியாபாத்: 19 வயது பல்கலைக்கழக மாணவியான கீர்த்தி சிங்கிடமிருந்து அவரது கைப்பேசியைத் திருடன் பறித்தபோது அவர் ஆட்டோவிலிருந்து விழுந்து படுகாயம் அடைந்து மாண்டார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்தது.
அமராவதி: ஆந்திராவின் விசாகப்பட்டின நகரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பாலசாவுக்குச் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் தண்டவாளத்தில் சமிக்ஞைக்காக நின்றுகொண்டிருந்தது.
கொச்சி: கேரளா குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையுடன் இந்தியாவின் தேசிய புலனாய்வுத்துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
டோஹா: கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டு இந்தியர்களை விடுதலை செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.