You are here

இந்தியா

வெடிகுண்டுகள் - திமுகவினரிடம் விசாரணை

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை நகரில் கடந்த நான்கு நாட்களாக வெடிகுண்டு பதற்றம் நீடிக்கிறது. கடந்த சனிக்கிழமை பின்னிரவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. அச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்தில் மதுரை பனகல் ரோட்டில் அரசு பொது மருத்துவ மனை அருகே உள்ள அதிமுக அலுவலகத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகளும் நாட்டு வெடிகுண்டு களும் வீசப்பட்டன.

நூற்றுக்கணக்கில் கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன் பட்டினம் கடற்பகுதியில் ஏராள மான திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது. இந்தோனீசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் காரண மாக திமிங்கிலங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படு கிறது. எனினும் நிபுணர்கள் இதை உறுதி செய்யவில்லை.

உயிர் பிழைத்தது அண்ணா நூலகம்: கருணாநிதி நிம்மதி

உயிர் பிழைத்தது அண்ணா நூலகம்: கருணாநிதி நிம்மதி சென்னை: கடந்த திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அண்ணா நூலகம் சென்னை உயர்நீதிமன்றத் தலையீட்டால் தற்போது உயிர் பிழைத்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், அண்ணா நூலகம் உருக் குலைந்திருக்கிறது என்ற உண்மையை மறைப்பதற்கில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்த் மதுரையில் போட்டியிட வேண்டும்: நிர்வாகிகள் வலியுறுத்து

மதுரை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மதுரை தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சித் தொண்டர்கள் விரும்பு வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மதுரை அவரது சொந்தத் தொகுதி என்பதால் அங்கு தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என அக்கட்சி நிர்வாகிக ளும் கருத்து தெரிவித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல் வேறு கட்சிகளும் கூட்டணி அமைப்பது தொடர்பான நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளன.

சேவல் சண்டையில் புரளும் ரூ.100 கோடி பந்தயப் பணம்

கோதாவரி: இந்த ஆண்டு பொங் கல் விழா சமயத்தில் நடைபெற உள்ள சேவல் சண்டைப் போட்டி யில் பந்தயப் பணம் மட்டும் சுமார் ரூ.100 கோடியைத் தாண்டிப் புர ளும் என எதிர்பார்க்கப்படுவ தாக சேவல் சண்டைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர். ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண் டும் மகர சங்கராந்தியை முன் னிட்டு அதிகளவில் சேவல் சண்டை போட்டி நடத்தப்படும்.

திமுகவில் இணைய நாஞ்சில் சம்பத் முடிவு

சென்னை: அதிமுக துணை கொள்கை பரப்புச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத் மீண்டும் திமுக வில் இணைய முடிவு செய்தி ருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதிமுக, திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. மதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலராக இருந்த நாஞ்சில் சம்பதுக்கு அக்கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அக்கட்சியில் இருந்து விலகினார்.

பழனி கோவிலில் குவியும் போலி தங்கம், வெள்ளி காணிக்கைகள்

பழனி: கோவிலில் காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் தங்கம், வெள்ளி முலாம் பூசிய தகடுகளை விற்பனை செய்து நடைபாதையோர வியாபாரிகள் ஏமாற்றி வருவது அம்பலமாகி உள் ளது. இதையடுத்து அத்தகைய வியாபாரிகளை இனம்காண பழனி காவல்துறை நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

ஆடைக் கட்டுப்பாட்டுக்கு இடைக்காலத் தடை

தமிழ்நாட்டின் கோவில்களில் ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்த இந்து அறநிலையத் துறை பிறப்பித்த உத் தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நேற்று இடைக்காலத் தடை விதித்தது. கோவிலுக்கு வருவோர் பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும் என்ற கட்டுப்பாடு ஏற்கெனவே தமிழகத்தில் உள்ளது. ஆனால், அது நடைமுறையில் இல்லை என்றும் கோவில்களுக்கு வரும் ஆண்களும் பெண்களும் ஜீன்ஸ் காற்சட்டை, அரைக்கால் சட்டை, டி=சட்டை லெக் கின்ஸ், ஆகியவற்றை அணிந்து வரு கிறார்கள் என்றும் குறைகூறப்பட்டு வந்தது.

ஜல்லிக்கட்டுக்கு முன்பதிவு தொடங்கியது

மஞ்சுவிரட்டு

மதுரை: மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி களைக் கண்டு ரசிப்பதற்காக வெளிநாட்டவர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக் கட் டைக்காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு சுற்றுலாத்துறை அவர் களை அழைத்துச் செல்கிறது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாததால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கனிமொழிக்கு தமிழில் வாழ்த்து அனுப்பிய பிரதமர் மோடி

 நாடாளுமன்ற மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழியின்

சென்னை: தி.மு.க மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை குழுத் தலைவருமான கனிமொழியின் பிறந்தநாள் கடந்த செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கனிமொழிக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழிலேயே வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

“அன்புள்ள கனிமொழி, உங்கள் பிறந்த நாளன்று என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடை கிறேன்.

Pages