You are here

இந்தியா

அதிபர் தேர்தல்: தமிழக அரசுக்கு ராமதாஸ் தெரிவித்த யோசனை

சென்னை: விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலைப் பயன்படுத்தி தமிழகத்துக்குப் பயன் அளிக்கும் இரு மசோதாக்களுக்கு அதிபரின் ஒப்புதலை தமிழக அரசு உடனடியாகப் பெறவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அதிபர் தேர்தலில் வெற்றி பெற தமிழகத்தின் ஆதரவு நிச்சயம் தேவை என சுட்டிக்காட்டியுள்ளார். “இந்த வாய்ப்பை பயன்படுத்தி மருத்துவக் கல்லூரி சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றிக்கொள்ள தமிழக ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்,” என ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

இருசக்கர வாகனத்தில் முதல்வர் காரை துரத்திய மாணவர்கள் கைது

சென்னை: இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வது, வளைந்து நெளிந்து சென்று சக வாகனமோட்டிகளுக்கு இடையூறு செய்வது ஆகியவை கல்லூரி மாணவர்கள் மத்தியில் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து தனது வீடு நோக்கிச் சென்ற போது, அவரது வாகன அணி வகுப்பை மூன்று கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தனர். இதைக் கண்டு பாதுகாப்பு வாகனங்களில் வந்த போலிசார், மூவரையும் ஓரமாகச் செல்லுமாறு எச்சரித்துள்ளனர். எனினும் மாணவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.

முதல்வர் பழனிசாமி மீது வழக்கு: தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தது தொடர் பான குற்றச்சாட்டின் அடிப்படை யில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள போதிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இது வரை வழக்குப் பதிவு செய்யப்பட வில்லை. இதையடுத்து புதிய வழக்கை பதிவு செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறி ஞர் வைரக்கண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.

நிர்வாகிகளைச் சந்திக்கும் தினகரன்

சென்னை: அதிமுகவைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டிடிவி தினகரன், அடுத்த கட்டமாக மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கத் தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக நேற்று முன்தினம் தேனி மாவட்ட நிர்வாகிகளை எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் சந்தித்த அவர், நேற்று எல்எல்ஏ வெற்றிவேல் தலைமையில் வடசென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தினகரனின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் முதல்வர் எடப்பாடி தரப்புக்கே கடும் நெருக்கடி நிலவி வருகிறது.

வீண் மோதல் பாஜகவுக்கு சாதகமாகும்: சசிகலா கடிதம்

சென்னை: அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் கட்சியையும் ஆட்சியையும் தக்க வைத்துக்கொள்ள முடியும் எனத் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு சசிகலா நடராஜன் சிறையில் இருந்தபடி கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள தமது குடும்பத்தாரையும் தீவிர ஆதரவாளர்களையும் அந்த வழக்குகளில் இருந்து விடுவிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தினகரனுக்கு அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு

கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. இது குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை காந்திபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் கட்சி அலுவலகம் அருகே இரு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் சில நிமிடங்கள் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர் திடீரென அலுவலகத்தின் மீது சில பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.

மலைக்குன்றை ஆக்கிரமிக்க முயற்சி: நித்தியானந்தா சீடர்கள் வெளியேற்றம்

தி.மலை: கிரிவலப் பாதையையொட்டி அமைந்துள்ள மலைக் குன்றை ஆக்கிரமிக்க முயன்றதாக நித்தியானந்தாவின் சீடர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பவழக்குன்று என்று குறிப்பிடப்படும் பகுதியில் சுமார் 5 ஏக்கர்பரப்பளவை ஆக்கிரமித்து நித்தியானந்தா சீடர்கள் ஆசிரமம் அமைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் அதிகாரிகள் போலிசாருடன் சென்று ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள குடிசைகள், பொருட்களைஅப்புறப்படுத்தினர். நித்தி யானந்தா சீடர்களும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி மீண்டும் இடிந்து விழுந்தது

சென்னை: கட்டட இடிப்புப் பணியின் போது சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. கடந்த வாரம் இப்பணியின் போது இதே போல் ஒருமுறை கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒரு தொழிலாளர் பலியானார். இதையடுத்து நிறுத்திவைக்கப்பட்டிருந்த கட்டட இடிப்புப் பணி நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. அப்போது கட்டடத்தின் மற்றொரு பகுதி இடிந்து விழுந்ததால் பெரும் புகை மண்டலம் மூண்டது. உயிரிழப்பு ஏதுமில்லை என்றாலும், இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தானில் பெண்ணைக் கெடுத்தார்; மயிலாடுதுறைக்குப் போய் பதுங்கினார்

ராஜஸ்தான் ரயில்வே ஊழியர் ராம்ராஜ் மீனா. படம்: தமிழக ஊடகம்

மயிலாடுதுறை: ராஜஸ்தான் மாநிலம் கரோலி மாவட்டத்தில் சென்ற ஆண்டு ஓடும் ரயிலில் இளம்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். இது தொடர்பாக ராஜஸ்தான் ரயில்வே ஊழியர் ராம்ராஜ் மீனா, 30, என்பவரை போலிஸ் தேடிவந்தது. அவர் நாகை மாவட்டம், மயிலாடுதுறை பகுதியில் பதுங்கி இருப்பதாக ராஜஸ்தான் மாநில சிறையில் நளினி உண்ணாவிரதம் போலிசுக்கு ரகசிய தகவல் கிடைக்க, அவர்கள் தமிழ்நாட்டு போலிஸ் உதவியை நாடினர். மயிலாடுதுறை ரயிலடி பகுதியில் ராம் ராஜ்மீனா தங்கி இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து தனிப்படை போலிஸ் மாறுவேடத்தில் சென்று ராம்ராஜ் மீனாவை கைது செய்து ராஜஸ்தான் போலிசாரிடம் ஒப்படைத்தது.

பெங்களூருவில் ரகசியமாக ஒரு சந்திப்பு

சென்னை: ரகசியமாக பெங்களூரு சென்ற டிடிவி தினகரன், பரப்பன அக்ரஹாரா சிறையில் சுதாகரனை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் நலம் விசாரித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ள சசிகலாவை அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் தினகரன் கடந்த 5ஆம் தேதி சந்தித்தார். 60 நாட்கள் பொறுமை காக்குமாறு சசிகலா அறிவுறுத்தி உள்ளதாக பிறகு தினகரன் செய்தியாளர்களி டம் தெரிவித்தார்.

Pages