You are here

இந்தியா

விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டியில் பிரேமலதா

பிரே­ம­லதா

தமிழ்­நாட்­டின் வரும் சட்­ட­மன்றத் தேர்தல் பெண்­களின் பலத்­துக்­குப் பலப்­ப­ரீட்சை­யாக அமைந்­துள்­ளது. நடிகர் விஜ­ய­காந்த் 2005 செப்­டம்ப­ரில் தேமுதிக கட்­சியைத் தொடங்­கி­ய­தில் இருந்து அவ­ருக்­கும் கட்­சிக்­கும் பக்­க­ப­ல­மா­கத் திகழ்ந்து வந்த பிரே­ம­லதா, இந்தத் தேர்­த­லில் நேர­டி­யா­கக் கள­மி­றங்க­வுள்­ளார். விஜ­ய­காந்த் தமது ரசி­கர்­ மன்றங்களைக் கட்­சி­யாக வளர்த்து, தமிழ்­நாட்­டின் முக்கிய கட்­சி­களுக்கு மிரட்­ட­லாக உரு­வெ­டுக்க முக்கிய பங்காற்­றி­ய­வர் இரு மகன்களுக்­குத் தாயான பிரே­ம­லதா.

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி: தேமுதிக - மநகூ மல்லுக்கட்டு

தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக தலைவர் வைகோ

வலைமேல் வலை வீசி ஒருவழி யாக விஜயகாந்தின் தேமுதிக வைத் தன்பக்கம் கொண்டுவந்த மக்கள் நலக் கூட்டணி (மநகூ) இப்போது கையைப் பிசைந்து வருகிறது. தேமுதிக வந்ததும் இனி அக்கூட்டணி ‘கேப்டன் விஜயகாந்த் அணி’ என அழைக்கப்படும் என குரல்கள் கிளம்ப, அதை ஏற்க இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மறுத்தனர். இதை அடுத்து, தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி என்று அழைக்கலாம் என்று சொல்லி, அந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டப்பட்டது. இந்த நிலையில், அந்தக் கூட்டணியில் அடுத்த தலைவலி ஆரம்பமாகியுள்ளது.

கோல்கத்தா மேம்பால விபத்து: ஐவர் மீது கொலைக் குற்றச்சாட்டு

பாலம் இடிந்து விழுந்ததும் இவர் இடிபாடுகளுக்குள் காணப்பட்டார். ராய்ட்டர்ஸ்

கோல்கத்தா: கோல்கத்தா மேம்பாலத்தைக் கட்டி வந்த ‘ஐவிஆர்சிஎல்’ என்ற கட்டுமான நிறுவனம் இந்த விபத்தை ஆண்டவனின் செயல் என்று கூறியுள்ள நிலையில், இந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஐவரை கைது செய்த போலிசார் அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். நேற்று முன்தினம் பிற்பகல் ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.

பெண்கள் இலவச சிகிச்சை பெற 21 மருத்துவமனைகள்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள், கிராமங்களில் தாய், சேய் நல விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தாய், சேய் நல விடுதிகள் பிரசவ மருத்துவமனைகளாகவும் செயல்படுகின்றன. ஆனால், தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படும் வகையில் புதிதாக இலவச மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பெண்கள் இங்கு வந்து தைரியமாக தங்களது உடல் பாதிப்புகளை எடுத்துச் சொல்லி சிகிச்சை பெற முடியும். அதற்கு ஏற்ப மருந்துப் பொருட் களும் பெற்றுக்கொள்ளலாம்.

மதுவுக்கு எதிராகப் பேசிய ஆறு பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு

டாஸ்மாக் கடை. கோப்புப்படம்

திருச்சி: மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய 6 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் திருச்சியில் இம்மாநாடு நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட ஆறு பேரும் மதுவால் தமிழகம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப் பிட்டதுடன், பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் வலியுறுத்திப் பேசினர். இந்நிலையில் மாநாடு முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் 6 பேர் மீதும் வழக்குப் பாய்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரானைட் முறைகேடு: புகாரில் சிக்கிய நீதிபதியிடம் விசாரணை

சென்னை உயர்நீதிமன்றம். கோப்புப்படம்

மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளி யாகக் குற்றம்சாட்டப்பட்ட பி.ஆர்.பழனிச்சாமியை குறிப்பிட்ட இரு வழக்குகளில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார் மேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி. இதையடுத்து அவர் பி.ஆர்.பி நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் மேலூர் காவல்துறை அதிகாரி பரமசிவமும் மகேந்திர பூபதி மீது புகார் தெரிவித்து மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தடையை மீறி கடற்கரைக் குளியல்

சென்னை மெரீனா கடற்கரை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் மாலை வேளையில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. கடற்கரையில் குளிப்பதற்கு காவல்துறை தடைவிதித்துள்ள போதிலும், ஏராளமானோர் அச்செயலில் ஈடுபடுகின்றனர். வெயில் காலம் என்பதால் போலிசும் கண்டு கொள்வதில்லை. படம்: சதீஷ்

மக்கள் நலக் கூட்டணியின் களைகட்டும் தேர்தல் பிரசாரம்

மக்கள் நலக் கூட்டணியின் களைகட்டும் தேர்தல் பிரசாரம்

கூட்டணி அமைக்கும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் அடுத்தக்கட்டமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. நேற்று முன்தினம் பாளையங்கோட்டையில் மக்கள் நலக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது செண்டை மேளத்துடன் பட்டாசுகளையும் வெடித்து தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தலைவர்களுக்கு ஆளுயர ரோசாப்பூ மாலைகளும் அணிவிக்கப்பட்டன. படம்: தகவல் ஊடகம்

மின்துறை அமைச்சருக்கு தமிழிசை பதிலடி

தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை: தமிழக அரசு மீது குற்றம் சாட்டுவதற்கு மத்திய அமைச்சருக்கு உரிமை இருக்கிறது என தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது மின் தடை இல்லாததற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து கூடுதலாக தென் மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதே காரணம் என அவர் செய்தியாளர்களிடம் பேசு கையில் குறிப்பிட்டார். “தமிழக முதல்வரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் இருவரும் இதற்குப் பதில ளித்திருக்கிறார்கள்.

தமிழக அரசு மீது முத்தரசன் புகார்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன்

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகம் அமைதி காத்தது தவறு என்றும் இதற்காக தமிழக அரசைக் கண்டிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், காவிரி நதிநீர் பங்கீடு குறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குகளில் விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் விவசாயிகள் நலன் கருதி உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Pages