இந்தியா

சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின்போது, 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் திட்டமான ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தை மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தது தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
புதுடெல்லி: டில்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை அந்த மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என அது கூறியது.
புதுடெல்லி: நேப்பாளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 157 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள ஜாஜர்கோட், ரூகம் ஆகிய மாவட்டங்களில் வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் இடிந்து விழுந்தன.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிணையில் விடுவிக்கப்படும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறை தொடங்கியுள்ளது.
அய்ஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 40 தொகுதிகள் உள்ளன. மிசோரம் சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரே கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.