இந்தியா

புதுடெல்லி: மனிதர்களின் நலனுக்காக மட்டுமே விண்வெளி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: சிபிஐயின் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
விஜயவாடா: ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த ஊழலால், அரசுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
புனே: இணைய விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு ரூ.1.5 கோடி வென்ற காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புபல்பள்ளி: இந்தியாவிலேயே கே.சந்திரசேகர ராவ் முதல்வராக இருக்கும் தெலுங்கானாதான் ஆக அதிக ஊழல்கள் தலைவிரித்தாடும் மாநிலமாக உள்ளது என்று ராகுல் காந்தி சாடியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.