You are here

இந்தியா

சுவாமிக்கு மோடி கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் ரகுராம் ராஜன், நிதி அமைச்சக உயர் அதிகாரிகள் மீதான சுப்பிரமணியம் சுவாமியின் குற்றச்சாட்டுகள் பொருத்த மற்றவை, முன்னுக்குப் பின் முரணானவை என்று பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜனின் தேசபக்தியை சந்தேகிக்கவேண்டாம் என்று கூறி யுள்ள பிரதமர் மோடி, கடந்த சில வாரங்களாக சர்ச்சையை ஏற் படுத்திய இந்த விவகாரத்தில் முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார்.

ஏடிஎம்களில் பணம் போடும் நிறுவனத்தில் ரூ.12 கோடி கொள்ளை

மும்பை: மராட்டிய மாநிலத்தில் வங்கி ஏடிஎம்களில் பணம் போடும் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகத்தில் நேற்று அதிகாலை புகுந்து 12 கோடி ரூபாயை கொள்ளை அடித்துச் சென்ற நபர்களை போலிசார் தேடி வருகின்றனர். மராட்டிய மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள டீன் ஹாத் நாக்கா பகுதியில், வாகனங்களில் சென்று அரசு வங்கிகளுக்குச் சொந்தமான ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது.

என்ஐஏ அதிகாரி கொலை; முக்கிய குற்றவாளி கைது

புதுடெல்லி: என்ஐஏ அதிகாரி தன்சில் அகமது டெல்லி அருகே சாலையில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட பரபரப்பு வழக்கு தொடர்பாக, 35 வயது மதிப்புள்ள குற்றவாளியை காசியாபாத்தில் வைத்து போலிசார் கைது செய்துள்ளனர். குற்றவாளி யிடமிருந்து 9 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவரான முனீர், இதற்கு முன்பு மேலும் 2 கொலை வழக்குகளிலும் தொடர்புடை யவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு: முதலிடம் பிடித்த மாணவி கைது

சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவி ரூபி ராய். படம்: ஊடகம்

பாட்னா: பீகாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில், கலைத் துறை பாடப்பிரிவில் 500-க்கு 444 மதிப்பெண் பெற்று ரூபி ராய் என்ற மாணவி முதலிடம் பெற்றது மோசடி என தெரிய வந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப் பட்டார். இந்நிலையில், இந்தத் தேர்வு முறைகேட்டு விவகாரத்தில் ஈடுபட்டதாக பீகார் பள்ளித் தேர்வு வாரிய முன்னாள் செயலாளர் ஹரிகர் நாத் ஜா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முதல்வருக்கு முத்தம் தந்த இளம்பெண்

முதல்வருக்கு முத்தம் தந்த இளம்பெண்

பெங்களூரு: பெங்களூரு வில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவர், கர்நாடக முதலமைச் சருக்கு முத்தம் கொடுத்த காணொளியை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. குரூபா சமுதாய மக்களின் மாநில அளவிலான நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற் றது. இதில் முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்றார். அப்போது, முதலமைச்சர் சித்தராமையா அருகில் நின்றிருந்த இளம்பெண், யாரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சருக்கு முத்தம் (படம்) கொடுத்தார். அந்த முத்தத்தை நிராகரிக்காமல் சித்தராமையா புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டார்.

மைசூருவில் கோலாகலமாக நடந்து முடிந்த மகாராஜாவின் வாரிசு திருமணம்

மைசூருவில் கோலாகலமாக நடந்து முடிந்த மகாராஜாவின் வாரிசு திருமணம்

மைசூரு மகாராஜாவின் வாரிசு யதுவீரின் திருமணம் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. அரண்மனையில் பாரம்பரிய முறைப்படி நடந்த விழாவில் ராஜ ஸ்தான் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவரும் தோழியுமான திரி‌ஷிகா குமாரியை யதுவீர் கரம் பி டித்தார். மைசூரு மன்னரின் வாரிசாக தத்தெடுக்கப்பட்டு பட்டாபிஷேகம் செய்யப்பட்ட யதுவீர், அமெரிக்காவில் படித்தவர். வேத மந்திரங்கள் முழங்க நடை பெற்ற இந்த திருமண விழாவில் மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மைசூர் அரண்மனையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் திருமணச் சடங்குகள் தொடங்கின.

வெளிநாட்டினரை ஈர்க்க புதிய வகை விசா வழங்க ஏற்பாடு

புதுடெல்லி: வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் சுற்றுலா, வணிகம், மருத்துவம், மாநாடு, சினிமா படப்பிடிப்பு என எல்லா நோக்கங்களையும் உள்ளடக்கிய நீண்டகால ஒன்றிணைந்த விசா வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான யோசனையை மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தப் புதிய வகை விசா அதிகபட்சமாக 10 ஆண்டு காலம் வரை செல்லுபடியாகத்தக்க விதத்தில் அமையக்கூடும். அதேநேரத்தில் இந்த விசாவின் கீழ் இந்தியாவில் நிரந்தரமாக தங்கிவிடவும் முடியாது; வேலை செய்யவும் முடியாது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே விரைவில் இந்த விசா அமலுக்கு வரலாம்.

அனைத்துலக ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டில் உறுப்பினரானது இந்தியா

புதுடெல்லி: அனைத்துலக ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப் பாட்டில் இந்தியா உறுப்பினரானது. ரசாயன ஆயுதங்கள், தொழில் நுட்பங்கள், அணுசக்தி உள்ளிட்ட வற்றின் ஏற்றுமதியைக் கட்டுப் படுத்தும் அனைத்துலக அமைப் பான ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் (எம்டிசிஆர்) இந்தியா இணைந் துள்ளது. இந்த அமைப்பில் சேர்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

ஆடு வீட்டுக்குள் புகுந்ததால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர்

சிலாநகர்: 24 வயது ஆடவர் ஒருவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று அண்டை வீட்டுக்காரரின் வீட்டுக்குள் புகுந்ததால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் உத்தரப்பிரதேசத் தில் உள்ள சிலாநகர் கிராமத்தில் நடந்துள்ளது. சம்சுதீன் வளர்த்து வந்த ஆடு, அண்டை வீட்டுக் காரரான ஜாவத் வீட்டுக்குள் புகுந்ததால் ஆத்திரமடைந்த ஜாவத், துப்பாக்கியை எடுத்து சம்சுதீனை சுட்டுக்கொன்றார்.

அமித் ஷா: காங். ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது

உத்தரகாண்ட்: மன்மோகன் சிங் தலைமையில் 10 ஆண்டு காலம் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியில் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஊழல்கள் நடைபெற்றதாக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். “காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2ஜி ஊழல், ஹெலிகாப் டர் ஊழல், நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் என ஏராள முறை கேடுகள் நடைபெற்றன,” என்றார் அமித் ஷா.

Pages