You are here

இந்தியா

மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்தும் படிக்கமுடியாமல் சாக்கு தைக்கும் மாணவி

ஆட்டையாம்பட்டி: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி யில் எம்பிபிஎஸ் பயில இடம் கிடைத்தும் ஏழ்மையின் காரண மாக வருடாந்திர கல்விக் கட்ட ணம் செலுத்தமுடியாத நிலையில் மாணவி ரோஜா குடும்பத்தினர் பரிதவித்து வரும் நிலையில், மருத்துவ படிப்புக்கு தமிழக முதல்வர் நிச்சயம் உதவுவார் என்று மாணவியின் குடும்பத் தினர் நம்பிக்கை தெரிவித் துள்ளனர். தந்தைக்கு உதவியாக இப்போது கிழிந்த சாக்கு தைக் கும் பணியில் ஈடுபட்டு வரு கிறார் ரோஜா. சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி, பனமரத்துப்பட்டி திரு வள்ளுவர் வீதியைச் சேர்ந்த கிழிந்த சாக்கு வியாபாரம் செய்து வரும் சங்கர்- திலகவதி தம்பதியரின் மூத்த மகள் ரோஜா.

பட்டுப்புடவை வடிவமைப்பு; காஞ்சிப் பெண்ணுக்கு தேசிய விருது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியின் மனைவி பத்மா, (45). இவர் பல ஆண்டுகளாக பட்டுப்புடவை நெசவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் நெய்த பட்டுப்புடவை தேசிய அளவில் சிறந்த வடிவமைப்புக்கான பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் அடுத்த மாதம் நடைபெறும் விழாவில் பத்மாவுக்கு மத்திய கைத்தறி ஜவுளித்துறை அமைச்சகம் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.

ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் தடைபட்ட மின்சாரம்

இந்தியாவின் ஹைதராபாத் நக ரில் உள்ள அரசு மருத்துவ மனையில் ஒரே நாளில் 21 நோயாளிகள் மரணமடைந்த சம் பவம் அதிர்ச்சியையும் சர்ச் சையையும் ஏற்படுத்தி உள்ளது. சுமார் 1,200 படுக்கைகளுடன் கூடிய காந்தி மருத்துவமனை யில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த மரணச் சம்ப வத்திற்கு மின்தடை காரண மாகச் சொல்லப்படுகிறது. அன்றைய தினம் பிற்பகல் மூன்று மணியளவில் திடீரென்று மின்தடை ஏற்பட்டதாகவும் சிறிது நேரத்தில் மீண்ட மின்சாரம், மறுபடியும் போவதும் வருவது மாக இருந்தது என்றும் மருத்து வர்கள் தெரிவித்தனர்.

நினைவிடத்தில் அப்துல் கலாம் சிலைக்கு எதிர்ப்பு

கடந்த ஆண்டு ஜூலையில் மரணமடைந்த முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் உடல் ராமேசுவரம் அருகே பேய்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நாளை மறுதினம் அவரது முதலாமாண்டு நினை வஞ்சலி கடைப்பிடிக்கப்படுகிறது. அப்துல் கலாமுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு அன்றைய தினம் அடிக்கல் நாட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வரு கின்றன.

பிரதமர் மோடி படம்: தமிழிசை வலியுறுத்து

தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை: மெட்ரோ ரயில் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறாதது ஏன்? என்று தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் மோடி தனது படம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பமாட்டார் என்றாலும், மத்திய அரசு உதவியுடன் கூடிய திட்டங்களை மக்கள் மத்தியில் தெரியப்படுத்த பிரதமர் படம் அவசியம் என்று கூறியுள்ளார். “இனி இந்த மாதிரியான செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்,” என்று தமிழிசை கூறியுள்ளார்.

அண்ணா நூலகப் பராமரிப்பு: அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

அண்ணா நூற்றாண்டு நூலகம்

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு உத்தரவிடப்படும் பட்சத்தில், அந்நடவடிக்கைக்குரிய செலவுகளை தமிழக அரசுதான் வழங்க வேண்டி வரும் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் மனோன்மணி யம் என்பவர் அண்ணா நூற் றாண்டு நூலகம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என புகார் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக உயர்நீதிமன் றத்தில் பொதுநல மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.

கங்கைக் கரையில் திருவள்ளுவர்

பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஆர்வலருமான தருண் விஜய்

டேராடூன்: வட இந்தியாவில் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ அம்மாநிலத்தின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஆர்வலருமான தருண் விஜய் பகீரத முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அங்குள்ள சிலர் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் ஹரித்துவார் பூங்காவில் திருவள்ளுவர் சிலை கீழே கிடத்தி வைக்கப் பட்டிருந்தது.

‌ஷீலா தீட்சித் 600 கி. மீட்டர் தூரம் பேருந்தில் சூறாவளி சுற்றுப் பயணம்

ஷீலா தீட்சித்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் எப்படியாவது ஆட்சியைக் கைப் பற்றிவிட வேண்டும் என்ற துடிப் பில் காங்கிரஸ் கட்சி நேற்று தேர் தல் பிரசாரத்தைத் தொடங்கியது. அம்மாநிலத்தில் நடைபெறும் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள 78 வயது ‌ஷீலா தீட்சித் 600 கிலோ மீட்டர் தூர மூன்று நாள் பேருந்துப் பயணத்தைத் தொடங்கினார்.

காபூலில் இந்தியப் பெண் மீட்பு

காபூலில் கடத்தப்பட்ட ஜுடித் டிசவுசா. ஏஎஃப்பி

புதுடெல்லி: காபூலில் கடந்த மாதம் கடத்தப்பட்ட இந்தியப் பெண் மீட்கப்பட்டுள்ளார். அனைத்துலக அறக்கட்டளை ஒன்றில் பணியாற்றிய 40 வயது ஜுடித் டிசவுசாவை சில போராளி கள் கடத்தியதாக சந்தேகிக்கப்படு கிறது. இந்நிலையில் நேற்று டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவலில் ஜுடித் டிசவுசா பத்திரமாக மீட்கப் பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் உதவிய ஆப்கன் அதிகாரிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

தேர்தல் முடிந்தும் ஊதியம் பெறாத கணக்காளர் அலுவலக ஊழியர்கள்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 41 நாட்கள் பணியாற் றிய மத்திய தலைமைக் கணக்காளர் அலுவலக ஊழியர்களுக்கு இதுவரை அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலர் துரைபாண்டியன், தேர்தல் ஆணையமும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியும் இவ்விஷயத்தில் தலையிட்டு ஊதியத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தேர்தல் பணிக்காக ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.22 ஆயிரம் வரை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

Pages