You are here

இந்தியா

‘கச்சத்தீவு தாரை வார்ப்புக்கு அதிமுகவும் காரணம்’

ஈரோடு: கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு திமுக மட்டுமல்லாமல் அதிமுகவும் காரணம் என்று மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் குற்றம் சாட்டியிருக்கிறார். செய்தியாளர்களிடம் பேசிய திரு ராதா கிருஷ்ணன், “கடந்த 1974ல் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது திமுக அரசு இருந்தது. அப்போது நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக உள்நோக்கத்துடன் வெளி நடப்பு செய்தது. தாரை வார்ப்புக்குக் காரணமாக இருந்துவிட்டு தற்போது மீட்க வேண்டும் என்று பேசு கின்றனர்,” என்றார்.

‘சுவாதியை ராம்குமார் கொல்லவில்லை’

சென்னை: சுவாதியை ராம்குமார் கொல்லவில்லை என்று அவனுடைய தந்தை பரமசிவன் தெரிவித்துள்ளார். “எனது மகன் ராம்குமார் கல்லூரி தேர்வில் 5 பாடங்களில் தோல்வி அடைந்ததால் சிறப்பு வகுப்பில் சேர சென்னைக்குச் சென்றான். “இந்த நிலையில் சில நாட் களுக்குப் பின் திரும்பிய அவன், செலவுக்குப் பணம் வேண்டும் என்று கேட்டான். அப்போதுதான் நள்ளிரவில் காவல்துறையினர் வந்து ‘ராம்குமார், ராம்குமார்’ என்று கூப்பிட்டனர். “சத்தம் கேட்டு எனது மகன் தான் கதவைத் திறந்தார்.

மத்தியப் பிரதேசத்தில் தொடர் மழை; மக்கள் அவதி

போபால்: மத்­தி­யப் பிர­தே­சம் மாநி­லத்­தின் பல மாவட்­டங் களில் கடந்த 48 மணி நேர­ம் தொடர்ந்து பெய்­து­ வ­ரும் கன­மழை­யால் ரேவா மற்­றும் சட்னா மாவட்­டங்களின் பல பகு­தி­கள் வெள்­ளக்­கா­டாகக் காட்­சி­ய­ளிக்­கின்றன. குறிப்­பாக சட்னா மாவட்­டத்­தில் கடந்த 24 மணி­நே­ரத்­தில் 9 அங்­கு­லத்­துக்­கும் அதி­க­மான மழை பெய்­த­தால் இங்­குள்ள பல கிரா­மங்கள் துண்­டிக்­கப்­பட்டு வெள்­ள­நீ­ரில் தீவு­களைப்­போல் காணப்­படு­கின்றன.

விமானத்தின் முன்சக்கரம் உடைந்து விபத்து: சென்னையில் பரபரப்பு

சென்னை: தனியார் விமானத்தின் முன்சக்கரம் வெடித்து ஏற் பட்ட விபத்து காரணமாக சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. எனினும் அந்த விமானத்தில் இருந்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பெங்களூருவில் இருந்து சென்னை வந்த தனியார் விமானம் தரையிறங்கும்போது அதன் முன்சக்கரம் உடைந்தது. சென்னையில் பலத்த காற்று வீசியதால் விமானம் நிலை தடுமாறி இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப் படுகிறது. விமான ஓடுதளத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.2016-07-08 06:00:00 +0800

திமுகவை அழிக்கச் சதி நடக்கிறது: ஸ்டாலின் புகார்

தஞ்சை: கொள்கலன் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.570 கோடி ரொக்கப் பணம் யாரு டையது என்ற உண்மை விரைவில் தெரிய வரும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுகவை ஒழிக்க ஒருசிலர் சதித்திட்டம் வகுத்துள்ள தாகக் குற்றம்சாட்டினார். திமுகவை ஒழிக்க நினைத்தவர்கள் அரசியலில் அனாதைகளாக்கப்பட்டுப் போனதாகக் குறிப்பிட்ட அவர், திமுகவுக்கு வெற்றி யும் தோல்வியும் ஒன்றுதான் என்றார். “சட்டப்பேரவைத் தேர்தல் நடப்பதற்கு சில நாட்க ளுக்கு முன்னதாக திருப் பூரில் 3 கொள்கலன்களில் கொண்டு செல்லப்பட்ட பணம் பிடிபட்டது.

போலிஸ் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ஊரையே காலி செய்த 8 கிராம மக்கள்

திருச்சி: காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு அஞ்சலி மணப் பாறை அருகே எட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஊரையே காலி செய்துவிட்டு வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். இது திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துவரங்குறிச்சி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் முத்தாளம்மன் கோவில் அமைந் துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான திருவிழா குறித்து அண்மையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. அப்போது இருதரப்பினர் மத்தி யில் வாக்குவாதம் மூண்டு, அது பின்னர் மோதலில் முடிந்தது. இது தொடர்பாக இருவரை போலிசார் விசாரணைக்காக தடுத்து வைத்தனர்.

திருநள்ளாறு அருகே பழங்கால நகைகள் கண்டெடுப்பு

காரைக்­கால்: திருநள்ளாறு அருகே அகலங்கண் மேலத்தெருவில் கிராம கழிவுநீர்த் தொட்டி கட்டு வதற்கு 5 அடி ஆழத்தில் நேற்று முன்தினம் பள்ளம் தோண்டப் பட்டது. அப்போது சிறிய சிலை­கள் மற்­றும் ஆப­ர­ணங்கள், செப்புப் பானை ஒன்றில் சாமி உருவம் பதித்த செப்புத் தகடு, பீடம், குடுவை, வளையல் போன்ற 20க்கும் மேற்பட்ட பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த சாமி சிலைகள் 400 முதல் 500 கிராம் எடையுள்ளவை. சுமார் 6 அடி ஆழம் தோண்­டிய போது சிறிய குடம் போன்ற உலோ கம் தட்­டுப்­பட்­டது.

திருவாரூர் மாவட்டத்தில் சோழர்கால சமணர் சிற்பம்

முத்­­­துப்­­­பேட்டை: திரு­வா­ரூர் மாவட்­டம், முத்­­­துப்­­­பேட்டை அருகே தில்லை­­­வி­­­ளா­­­கத்­­­தில் பிற்­­­கால சோழர் காலத்தைச் சேர்ந்த சம­­­ணர் சிற்­­­பம் கண்­­­டெ­­­டுக்­­­கப்­­­பட்­­­டுள்­­­ளது. தில்லை­­­வி­­­ளா­­­கத்­­­தில் பழமை­­­யான பெரிய அய்­­­யனார் கோயில் உள்­­­ளது. இந்தக் கோயில் குட முழுக்கு கடந்தாண்டு நடந்தது. இதற்­­­காக திருப்­­­பணி செய்­­­த­­­போது கோயில் அருகே சிதைந்த நிலை­­­யில் சிறிய சிலை ஒன்று கண்­­­டெ­­­டுக்­­­கப்­­­பட்­­­டது. இந்தக் கற்­­­சிலை குறித்­­­து தொல்­­­லி­­­யல்­­­துறை ஆய்­­­வா­­­ளர் மன்னை பிர­­­காஷ் நேற்று முன் தினம் ஆய்வு செய்­­­தார்.

தேர்தலில் கைப்பற்றப்பட்ட ரூ.42 கோடியைத் திருப்பித்தர மறுப்பு

சென்னை: சட்டமன்றத் தேர்தலின்போது வேட்பாளர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களிடம் பறிமுதல் செய்த 42 கோடி ரூபாயைத் திருப்பித் தர வருமான வரித்துறை மறுத்துள்ளது. அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது வருமான வரித் துறையினர் எப்போதும் இல்லாத வகையில் தீவிர சோதனை மேற் கொண்டனர். அதில் 42 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். அதிமுக பிரமுகர் உட்பட மொத்தம் 24 பேரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட் டது. பணம் எப்படி வந்தது என்பதற்கு அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ஆனாலும், வரி ஏய்ப்பு நடந்திருப்பது தெரியவந்துள் ளது.

11 சிறுவர்கள் கடத்தல் எனப் புகார்

சென்னை: தனியார் காப்பகத்தில் இருந்த 11 குழந்தைகள் கடத் தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. தாம்பரத்தில் இயங்கி வந்த அந்தக் காப்பகத்திற்கு உரிய அங்கீகாரம் இல்லா ததால் அண்மையில் மூடப்பட்டது. அங்கிருந்து 32 குழந்தைகள் மீட்கப்பட்டு வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், காப்பகத்தின் பதிவு ஆவணங்களில் அங்கு 41 குழந்தைகள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 9 சிறுவர்கள், 2 சிறுமிகளின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Pages