You are here

இந்தியா

ரகசிய இடத்தில் பத்திரமாக ‘பத்ரா’

 ‘பத்ரா’

சென்னை: நான்காவது மாடி யிலிருந்து வீசி எறியப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பிய ‘பத்ரா’ என்று பெயரிடப்பட்ட பெண் நாய் (படம்) நேற்று முன்தினம் இரவு ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டது. சென்னை குன்றத்தூர் மருத்துவக் கல்லுரியின் நான் காவது மாடியிலிருந்து வீசி எறியப்பட்டதில் காயமடைந்த அந்நாயை விலங்கு நல ஆர்வலர் ஆண்ட்ரூ ரூபின் என்பவர் மீட்டார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பத்ராவை புகைப்படம் எடுக்க வும் பார்ப்பதற்காகவும் ஏராள மானோர் வருகின்றனர்.

‘மதுக்கடையை அகற்றும் வரை ஓயமாட்டோம்’

பெண்களைக் கைது செய்யும் போலிசார். படம்: ஊடகம்

சென்னை: சென்னை பட்டினப் பாக்கம் பேருந்து நிலையம் அருகே கடந்த ஒன்பது ஆண்டு களாக ‘டாஸ்மாக்’ மதுக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ‘டாஸ்மாக்’ கடையின் ‘பார்’ மூடப்பட்டது. இதையடுத்து குடிமகன்கள் சாலையோரமாகவும் பேருந்து நிலையத்திலும் மதுக் குடிக்கத் தொடங்கினர். நாளடைவில் அந்தப் பகுதியே ஒரு திறந்த வெளி ‘பார்’ போல மாறியது.

விஜயகாந்த்: செம்மரக் கடத்தலில் அதிமுக பிரமுகருக்கு தொடர்பு

சென்னை: செம்மரக்கட்டை கடத்தல் விவகாரத்தில் அதிமுக பிரமுகருக்குத் தொடர்புள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டி உள்ளார். அனைத்துலக செம்மரக்கட்டை கடத்தல் கும்பலுடன் திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சித் தலைவரான அதிமுகவைச் சேர்ந்த பார்த்திபனுக்கு தொடர்புள்ளதை ஆந்திர மாநில காவல்துறை கண்டுபிடித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். “பார்த்திபனை ஆந்திர போலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் தமிழக காவல்துறை ஆளும் கட்சிக்கு சாதகமாக இதனைக் கண்டுகொள்ளவில்லை.

கேரள மாநிலத்தவர் 16 பேர் மாயம்

பெண்கள், குழந்தைகள் உட்பட 16 பேர் கேரளாவின் காசர்கோடு, பாலக்காடு மாவட்டங்களில் இருந்து மாயமாகி இருப்பதால் அவர்கள் சிரியா, ஈராக் நாடு களுக்குச் சென்று ஐஎஸ் இயக்கத்துடன் இணைந்திருக் கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. காணாமல் போன சிலரிடம் இருந்து ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவளிக்கும் விதமாகவும் அச்சம் தரும் வகையிலும் அவர்களின் உறவினர்களுக்கு வந்த குறுஞ்செய்திகளைப் பார்க்கும்போது அந்தச் சந்தே கம் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சகோதரருடன் சேர்ந்து மகனை அடித்துக் கொன்ற தாய் கைது

காரைக்குடி: காதல் திருமணம் செய்த இளையரை அவரது தாயும் மாமாவும் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட ஹரிஹரன் (23 வயது), தனது கல்லூரியில் படித்த ரம்யாவை காதலித்து மணந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந் தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் காதலை எதிர்த்தனர். எதிர்ப்பை மீறி திருமணம் நடந்தது. இந்நிலையில் கருத்து வேறு பாடு காரணமாக காதல் தம்பதியர் பிரிந்தனர். இதையடுத்து ரம்யா தாய் வீட்டிற்குச் செல்ல, ஹரிஹரனும் தன் பெற்றோர் வீட்

வெளிநாட்டு வேலை என கூறி ரூ.2 கோடி மோசடி

வேலூர்: சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி இரண்டு கோடி ரூபாய் வரை சுருட்டிய ஏமாற்றுப் பேர்வழியை வேலூர் போலிசார் கைது செய்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 46 வயதான வேல்ராஜ் என்ற அந்த ஆடவர், வேலூர் மாவட்டம் ஆம்பூ ரில் தங்கியிருந்து இந்த மோசடியைச் செய்துள்ளார். ரெட்டித்தோப்பு என்ற பகுதியில் வீடு எடுத்து தங்கிய வேல்ராஜ், தனது வீட்டின் முன்பகுதியில் அலுவலகம் அமைத்துள்ளார். பின் னர் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக துண்டுப் பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்துள்ளார்.

400 போதை சாக்லேட்கள் பறிமுதல்

சென்னை: பள்ளி மாணவர்களைக் குறிவைத்து போதை சாக் லேட்கள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், சென்னையில் புதிய போதை சாக்லேட் சிக்கியுள்ளது. ‘போலா முனாக்கா’ என்றழைக்கப்படும் இந்த சாக்லேட்டை வாங்கிச் சாப்பிட்டதன் காரணமாகவே அண்மையில் 13 வயது மாணவன் உயிருக்குப் போராடி வருகிறான். ஆவடி பகுதியில் 400 ‘போலா முனாக்கா’ சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை எங்கிருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன, அதன் முகவர்கள் யார் என்பன போன்ற விவரங்களை போலிசார் மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

லதா ரஜினிகாந்த் மீது புகார்; விளக்கம் கேட்கும் நீதிமன்றம்

லதா ரஜினிகாந்த்

சென்னை: தவறான ஆவணங்கள், போலி நிறுவனம் உருவாக்கியதன் தொடர்பில் லதா ரஜினிகாந்த் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. அவருக்கு கடன் வழங்கிய ‘ஆட்பீரோ’ என்ற நிறுவனம் அவருக்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்துள்ளது. கோச்சடையான் திரைப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் முரளி மனோகர், ‘ஆட்பீரோ’ நிறுவனத்தின் அபிர்சந்த் நஹாரி டம் ரூ. 14 கோடியே 90 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதற்கு முரளி மனோகர் தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்துக் கையெழுத்திட்டிருந் தார். இதற்காக சில சொத்து களின் ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.

ரணில் விக்ரமசிங்க: தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது

 இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க

கொழும்பு: தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்து வருகிறது. இருப்பினும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க (படம்), தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

ஜெர்மனி தொழில்நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப்பில் ரயில் பெட்டிகள் தயாரிப்பு

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலை. படம்: இந்திய ஊடகம்

சென்னை: மின்சார ரயில், டீசல் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டி களைத் தயாரிக்கும் சென்னை ஐசிஎஃப் ரயில் தொழிற்சாலை, அடுத்த கட்ட முயற்சியாக ஜெர் மனி நிறுவனமான எல்எச்பியுடன் இணைந்து அந்நாட்டுத் தொழில் நுட்பத்துடன் ரயில் பெட்டிகளைத் தயாரித்து வருகிறது. மேலும் முக்கிய விரைவு ரயில்களில் இந்தப் புதிய வகை ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. மும்பை நகருக்குத் தேவையான மின்சார ரயில்கள் தயாரிக்கும் பணியை அது முடுக்கிவிட்டுள்ளது.

Pages