You are here

இந்தியா

கோவையில் செல்வ சிந்தாமணி குளத்தை தூய்மைப்படுத்திய சமூக ஆர்வலர்கள்

தூய்மை இந்தியா திட்டம் குறித்து தற்போது அதிகம் பேசப்படாவிட்டாலும், அந்த நல்ல காரியத்தை ஒருசிலர் தொடர்ந்து செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் கோவையில் உள்ள செல்வ சிந்தாமணி குளப் பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. காலை 6 மணிக்குத் தொடங்கிய இப்பணி மூன்று மணி நேரம் நீடித்ததில், மூன்று சிறிய ரக டிரக் வாகனங்கள் நிறையும் அளவுக்கு குப்பைக்கூளங்கள் அகற்றப்பட்டன. சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். படம்: தகவல் ஊடகம்

மதுக் கடைகள் குறைந்தாலும் வருவாய் குறையவில்லை

சென்னை: தமிழகத்தில் மதுக் கடை களை மூட வலியுறுத்திப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஆண்டைக் காட்டி லும் நடப்பாண்டில் மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.1,149 கோடி வருவாய் கிடைத்துள் ளது. அரசு வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண் டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதன் எதிரொலியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக் கடைகள் மூடப்பட்டன,

என்னை விமர்சிக்கும் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது: தினகரன்

சென்னை: முதல்வர் பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை யில் இடம்பெற்றுள்ள அமைச்சர் களை நீக்கும் அதிகாரம் தமக்கு மட்டுமே உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள் ளார்.

சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து சசிகலா நடராஜன் தான் முடிவு செய்வார் என்றார். வழக்குகளைச் சந்திக்க தாம் அஞ்சவில்லை என்று குறிப்பிட்ட அவர், சிபிஐ மட்டு மன்றி அனைத்துலக காவல் துறையான இன்டர்போல் விசார ணைக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

இனி புறப்பாடு விண்ணப்பம் தேவை இல்லை

சென்னை: இனி வெளிநாடு களுக்குச் செல்வோர் விமான நிலையங்களில் புறப்பாடு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஜூலை 1ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இது நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

எனினும் ரயில், கப்பல், சாலை மார்க்கமாக வெளிநாடு செல்வோர் புறப்பாடு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியது அவசியம். அவர்கள் குடியேற்ற சோதனைச் சாவடிகளில் புறப்பாடு விண்ணப்பத்தை வழக்கம் போல் பூர்த்தி செய்ய வேண்டும் என மத்திய அரசின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியே திரும்பிப் பார்க்கும்: அமைச்சர் பேச்சு

அமைச்சர் செங்கோட்டையன்

மதுரை: முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக சிலர் தொடர்ந்து கூறி வருவதை பொய்யாக்கும் வகையில் அதிமுகவினர் செயல்பட வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி உள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், விரைவில் நடைபெற இருக்கும் எம்ஜிஆர் நாற்றாண்டு விழாவின் போது ஒட்டுமொத்த டெல்லியும் அதிமுகவை திரும்பிப் பார்க்கும் என்றார். இந்த நிகழ்வில் அமைச் சர் திண்டுக்கல் சீனிவாசனும் பங்கேற்றார்.

கிரிக்கெட் போட்டியை ரசித்துப் பார்த்த மு.க.ஸ்டாலின்

படம்: தகவல் ஊடகம்

தனது தந்தையை கருணாநிதியைப் போலவே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வம் உடையவர். குறிப்பாக கிரிக்கெட் போட்டியை ரசித்துப் பார்ப்பவர். நேற்று முன்தினம் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை தனது குடும்பத்தாருடன் அவர் தொலைக்காட்சியில் ரசித்துப் பார்த்துள்ளார். அவர் தன் பேரக் குழந்தைகளுடன் தொலைக்காட் சியை பார்க்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை திமுக வினர் மிகுந்த ஆர்வத் துடன் தங்களுக்கிடையே பகிர்ந்து வருகின்றனர். படம்: தகவல் ஊடகம்

தரம் குறைந்த 187 பால் மாதிரிகள்: அரசு அறிக்கையில் தகவல்

சென்னை: ஆய்வுக்கு அனுப்பப்பட்ட 187 பால் மாதிரிகள் தரம் குறைந்தவை என தெரிய வந்துள் ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஓர் அறிக்கையை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக பரவலாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும் பால் மாதிரிகள் தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அண்மையில் தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். கலப்படப் பாலை அருந்துவோரின் உயிருக்கே ஆபத்து விளைவ தாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

கள்ள நோட்டு அச்சடித்த ஆப்பிரிக்கர் கைது

குமரி: கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட ஆப்பிரிக்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ரோப் எடிசன் என்ற பெய ருடைய, கானா நாட்டைச் சேர்ந்த அந்நபர், நேற்று முன்தினம் பெங் களூருவில் இருந்து கன்னியாகுமரி வழியாக திருவனந்தபுரத்துக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டி ருந்தார். இந்நிலையில் தமிழக, கேரள எல்லைப் பகுதியான அமரவிளை யில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே அப்பேருந்து தடுத்து நிறுத்தப்பட்டது.

துணை அதிபர் பதவியை பெற பேரம் பேசும் அதிமுக

முன்னாள் இந்திய தலைமை நீதிபதியும் தற்போதைய கேரள மாநில ஆளு நருமான பி.சதாசிவம்

இந்திய அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் வேளையில் தமிழகத்தில் ஆட்சி புரியும் (பிளவுபட்ட) அதிமுக பேரத்தில் இறங்கி இருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவிக் கின்றன. ஒன்றுபட்ட அதிமுகவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவை களிலும் 49 உறுப்பினர்கள் உள் ளனர். இவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி தினகரன் என்று மூன்று வெவ்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அதிபர் தேர்தலுக்கு இவர்கள் அனை வரும் ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் நிலையில் உள்ளனர். பாஜக நிறுத்தும் அதிபர் வேட்பாளர் வெற்றிபெற இந்த 49 உறுப்பினர்களின் ஆதரவு அவசி யம் தேவை.

இந்திய ராணுவத் தகவல்களை திருடும் தொலைபேசி நிலையங்கள்

இந்தியாவை வேவு பார்க்க மகாராஷ்டிர மாநிலத்தில் இயங்கி வந்த சட்டவிரோத தொலைபேசி நிலையங்கள் போலிஸ் படையின் கண்ணில் சிக்கியதைத் தொடர்ந்து இருவர் கைது செய்யப்பட்டுள் ளனர். அம்மாநிலத்தின் லாட்டூர் என் னும் பகுதியில் அதுபோன்று மூன்று சட்டவிரோத தொலைபேசி நிலையங்கள் நடத்தப்பட்டு வந்த தாகவும் அவை பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல் களை அனுப்பி வந்ததாகவும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இந்திய ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களை பாகிஸ்தா னுக்கு அனுப்புவதை அந்நிலையங் கள் முக்கிய வேலையாகச் செய்து வந்தன.

Pages