You are here

இந்தியா

ராணுவ வீரர்களுடன் மோடி

படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பள்ளத்தாக் கில் நடைபெற்ற ராணுவ வீரர் களின் தீபாவளி கொண்டாட்டத் தில் பங்கேற்று உரையாற்றினார். கடுமையான சூழ்நிலையில் வீரர்கள் செய்யும் தியாகத்தைப் பாராட்டிய திரு மோடி, ராணுவ வீரர்களைத் தனது குடும்பமாகக் கருதுவதாகக் கூறினார். “இவ்வாண்டின் தீபாவளியை நான் எனது குடும்பத்துடன் கொண்டாட விரும்பினேன். அதனால்தான் இராணுவ வீரர் களிடையே கொண்டாடிக் கொண் டிருக்கிறேன். ராணுவ வீரர்களை எனது குடும்பமாகக் கருது கிறேன். தீபாவளி போன்ற நன்னா ளில் வீரர்கள் மத்தியில் நேரத்தை செலவிடும்போது அவர்களும் புதிய உத்வேகம் பெறுகின்றனர்.

புதுடெல்லியில் திபெத்திய பெண் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லியில் திபெத்திய பெண் ஆர்ப்பாட்டம்

சீன அதிபர் ஸி ஜின்பிங் இரண்டாவது தவணைக்குத் தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதனன்று புதுடெல்லியில் சீன தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திபெத்திய பெண்ணை இந்திய போலிசார் தடுத்து நிறுத்துகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

மும்பையில் திருவள்ளுவர் சிலை திறப்பு

மும்பை: மும்பை நகரில் முதல் முறையாக திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது. முல்லுண்டி என்ற பொது இடத்தில் நிறுவப்பட்டுள்ள 11 அடி உயர திருவள்ளுவர் முழு உருவச்சிலையை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று முன்தினம் திறந்து வைத்தார். இதற்கு மும்பை தமிழ்த் தொழில் வர்த்தக சபை, ‘நேஷனல் எஜுகேஷன் சொசைட்டி’, சரஸ்வதி வித்யா பவன் குழுமங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.வரதராஜன், சர்தார் தாராசிங் எம்எல்ஏ ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கோல்கத்தா கட்டடத்தில் தீ

கோல்கத்தா: கோல்கத்தாவில் ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள ஜீவன் சுதா என்ற 19 மாடி கடைத் தொகுதியில் நேற்றுக் காலை தீ விபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் அனைவரும் வெளி யேற்றப்பட்டனர். இதே கட்டடத்தில்தான் எல்ஐசி அலுவலகம், வங்கி, நிதி நிறு வனங்கள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் செயல்படு கின்றன. காலை 10.20 மணியள வில் 16வது தளத்தில் மூண்ட தீ, மளமளவென்று மற்ற இடங்களுக் கும் பரவியது. இதனால் ஊழியர்கள் அனை வரும் அவசர அவசரமாக வெளி யேற்றப்பட்டனர். இதற்கிடையே தகவலறிந்து 10 வாகனங்களில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவிலும் தலித் அர்ச்சகர்கள்

பெங்களூரு: கேரளாவில் அண்மையில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இதைப் பின்பற்றி கர்நாடகாவிலும் தலித் சமூகத்தினர் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவர் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து மூன்று நாளில் 5 லட்சம் பேர் பயணம்

சென்னை: கடந்த மூன்று தினங்களில் மட்டும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஐந்து லட்சம் பேர் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் மேற்கொண் டுள்ளனர். இதனால் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தைவிட இந்த ஆண்டு சற்றே கூடுதலாக இருந்தது. கடந்த 14ஆம் தேதி முதல் ஏரா ளமானோர் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்ற வண்ணம் இருந்தனர். இதையடுத்து தமிழக அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்கியது. சென்னையின் ஐந்து பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டன.

நாவடக்கம் இல்லாமல் பேசுகின்றனர் பாஜக தலைவர்கள் - தா.பாண்டியன்

சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயனை எந்த மாநி லத்துக்கும் செல்ல விடமாட்டோம் என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேசி யுள்ளது ஆணவத்தின் உச்சக் கட்டம் என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா. பாண்டியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், பொன். ராதாகிருஷ்ணனின் சவாலை ஏற்றுக்கொள்ளத் தயார் என்றார். இதுபோன்று நாவடக்கம் இல்லாமல் தொடர்ந்து பேசி வந் தால் தமிழகத்துக்கு வரும் பாஜக தலைவர்களை நடமாடவிடப் போவதில்லை என எச்சரிக்கை விடுத்த அவர், பாஜக தலைவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் கறுப்புக் கொடி காட்டப்போவதா கவும் தெரிவித்தார்.

11 ஆண்டுகளில் பாஜகவின் சொத்து மதிப்பு 627% உயர்வு

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சி அந்நாட்டின் பணக் கார அரசியல் கட்சியாக உரு வெடுத்துள்ளது. கடந்த 2004=05 நிதியாண்டில் ரூ.122.93 கோடியாக இருந்த பாஜகவின் சொத்து பதினொரு ஆண்டுகளில் 627% கூடி ரூ.893 கோடியாக (S$187 மி.) உயர்ந்தது. அதே காலகட்டத்தில், இரண்டா வது பணக்காரக் கட்சியாக இருக்கும் காங்கிரசின் சொத்து மதிப்பு ரூ.167.35 கோடியிலிருந்து ரூ.758.79 கோடியாக (S$158 மி.), அதாவது 353.41% அதிகரித்தது.

மனிதர்களைக் கொன்ற புலி மின்சாரம் தாக்கி மரணம்

படம்: ஏஎஃப்பி

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் கிராம மக்களைக் கொன்று சாப்பிட்டு வந்த புலி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இந்த மாதத்தின் முற்பகுதியில் ஒரு மாதை இந்த இரண்டு வயது புலி அடித்துக் கொன்று சாப்பிட் டதைத் தொடர்ந்து புலியைச் சுட்டுக் கொல்ல வெள்ளிக்கிழமை அன்று மகாராஷ்டிர நீதிமன்றம் உத்தரவிட்டது. வனத்துறை அதிகாரிகள் புலியைத் தேடி வந்தநிலையில், புலி இறந்துள்ளது. காட்டுப் பன்றிகளை ஊருக்குள் வராவிடாமல் தடுக்கும் நோக்கத் தில் கிராம மக்கள் அமைத்துள்ள மின்சார வேலியின் மின்சாரம் தாக்கி நேற்று முன்தினம் புலி இறந்தது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு

தமிழ் நாட்டின் பள்ளி மாணவர் களுக்கு விபத்துக் காப்பீடு வழங் குவது குறித்து அரசாங்கம் பரி சீலப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் துள்ளார். “இந்தியாவிலேயே முதல்முறை யாக பள்ளி மாணவர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கும் திட்டம் தமிழகத்தில் விரைவில் கொண்டு வரப்படும். இந்த திட்டம் தற்போது முதல்வர் பழனி சாமியின் பரிசீலனையில் உள்ளது,” என்றார் அமைச்சர் செங்கோட்டையன். இந்தக் காப்பீடு அரசாங்க பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தானா அல்லது அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படுமா என்பது குறித்து அவர் விவரிக்கவில்லை.

Pages