You are here

இந்தியா

இபிஎஸ் அரசு தப்புமா, ஓபிஎஸ் கை ஓங்குமா

முதல்வர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்), முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டமன்றத்தில் கிட்டத் தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) தலைமையிலான அரசு தப்புமா அல்லது எதிர்பாராத முடிவு ஏற்படுமா என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும். ஆளும் கட்சியாகக் கருதப் படும் அதிமுக இரண்டாகப் பிளவு பட்டு உள்ளதால் புதிய முதல்வர் தமது பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட் டதைத் தொடர்ந்து தமிழக சட்ட மன்றம் இன்று முற்பகல் 11 மணிக்குக் கூடவிருக்கிறது. இபிஎஸ் அரசாங்கத்துக்கு 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

சிறைக்கு வர வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா உத்தரவு

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா தரப்பு ஆதர வாளரான எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அந்த சூட்டோடு சிறையில் இருக்கும் சசிகலாவைச் சந்தித்து வாழ்த்துப்பெற எடப்பாடி பழனிசாமி பெங்களுரு செல்வார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இந்தப் பயணம் கைவிடப்பட்டதாக பின்னர் வெளி யான தகவல்கள் தெரிவித்தன. இதன் தொடர்பில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தாம் பெங்களூரு செல்லவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதன் பின்னணியை ஆராய்ந்த தில் சசிகலாவே இப்போதைக்கு சிறைக்கு வந்து தம்மைச் சந்திக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

சசிகலா, தினகரன் நீக்கம் - மதுசூதனன் அறிவிப்பு

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளர், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து வி.கே. சசி கலாவை நீக்குவதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் நேற்று அறிவித்தார். முன்னதாக அதிமுகவின் அவைத் தலைவரான மதுசூதனன், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்ததால் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா அறிவித் திருந்தார். இதற்குப் போட்டியாக மது சூதனன் நேற்று அதிரடி அறி விப்பை வெளியிட்டார்.

புதுவை கடலில் எண்ணெய்ப் படலம்

புதுவை கடலில் எண்ணெய்ப் படலம்

சென்னை கடற்பகுதியில் பாதிப்பு ஏற்படுத்திய எண்ணெய்ப் படலம் தற்போது புதுவை கடற்பகுதி வரை பரவியுள்ளது. காற்றின் போக்கினால் இப்படலம் புதுவை வரை பரவி இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று வீராம்பட்டினம் கடற்கரையில் திட்டுத்திட்டாக எண்ணெய்ப் படலம் காணப்பட்ட காட்சி இது. இதனால் புதுவை மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். படம்: ஊடகம்

ஓபிஎஸ் அணியின் பத்து எம்எல்ஏக்களின் பதவி பறிபோகும் ஆபத்து

சென்னை: கட்சி கொறடாவின் உத்தரவுக்கு எதிராக செயல்படும் பட்சத்தில் பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை இழக்க நேரிடும் எனத் தெரிய வந்துள்ளது. அதே சமயம் கொறடா உத்த ரவை ஏற்று நம்பிக்கை வாக் கெடுப்பில் அவர்கள் அனைவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க அறவே வாய்ப் பில்லை என்றும் கூறப்படுகிறது. அதிமுக பொதுச்செயலர் சசிகலா அண்மையில் அக்கட்சி யின் சட்டப்பேரவை குழுத் தலைவ ராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

திருநாவுக்கரசர்: ஜெயாவைக் காப்பாற்றிய கடவுள்

சென்னை: சிறைவாசம் அனுபவிக்காத வகையில் முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற ஜெயலலிதாவைக் கடவுள் காப்பாற்றி விட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கக் கூடாது என்றும் குழம்பிய குட்டையில் பாஜக மீன் பிடிக்க முயற்சிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். “சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வுக்கும் சேர்த்துதான் தண்டனை வழங்கப்பட் டுள்ளது. “அவர் உயிரோடு இல்லை. கடவுள் காப்பாற்றி விட்டார்.

பலாத்காரம் செய்தவரின் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ கர்ப்பிணிக்கு உத்தரவு

அகமதாபாத்: பாலியல் பலாத் காரம் செய்த ஆடவரின் குடும் பத்தினருடன் கர்ப்பிணி பெண்ணை சேர்த்து வாழவைக் கும்படி ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த போலிசாருக்கு குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. கர்ப்பிணிப் பெண் ஒருவர், தன்னைப் பலாத்காரம் செய்த குற்றவாளியைத் தான் நேசிப்ப தாகவும் அவருடைய குழந்தையை நல்ல முறையில் பிரசவிக்க விரும்புவதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த உத்தரவைப் பிறப்பித்தது நீதிமன்றம்.

‘சிறையிலிருந்து விரைவில் வருவேன்’

பெங்களூர்: கவலைப்படாமல் இருங்கள். சிறையில் இருந்து விரைவில் விடுதலையாகி வெளியே வருவேன் என்று கணவர் நடராஜனுக்கு சசிகலா ஆறுதல் கூறினார். நான்காண்டு சிறைத் தண்டனையுடன் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்ற சசிகலாவுக்கு உறவினர்களைச் சந்திக்க 15 நிமிடம் அவகாசம் தரப்பட்டது. அப்போது சசிகலாவும் அவரது கணவர் நடராஜனும் கண் கலங்கினர். சில விநாடிகளுக்குப் பிறகு கணவரை அணைத்த வாறு “எனது சொந்த முயற்சியால் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவேன், கவலைப்படத் தேவையில்லை என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பாருங்கள்,” என்று துக்கத்துடன் அழுதவாறு கூறினார்.

காரை பின்தொடர்ந்து ஓடிவந்த சசிகலா ஆதரவாளர்கள்

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக நேற்று மதியம் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார் அதிமுக பொதுச் செயலர் சசிகலா. அவரை அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் கண்ணீர் மல்க வழியனுப்பினர். அப்போது சில தொண்டர்கள் அவரது காரின் இருபுறமும் முன் பக்கமும் ஓடியபடியே அவரை வாழ்த்தி முழக்கமிட்டனர். எனினும் சிறிது தூரம் சென்றதும் தன்னைப் பின்தொடர வேண்டாம் என சசிகலா அவர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் தொண்டர்கள் வழிவிட அவரது கார் பெங்களூரு நோக்கி வேகமாகப் புறப்பட்டுச் சென்றது. படம்: சதீஷ்

விரைவில் தேர்தல்: ஸ்டாலின் நம்பிக்கை

 திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடை பெற வாய்ப்புள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் (படம்) தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற திமுக இளையரணி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், தேர்த லுக்கு திமுகவினர் தயாராக வேண்டும் என்றும் அறிவுறுத்தி னார். தமிழக அரசியல் களம் பர பரப்பாக உள்ள நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற இருந்ததாக தகவல் வெளியானது.

Pages