சிங்க‌ப்பூர்

கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையல், ஆன்டிஜன் ரேப்பிட் டெஸ்ட் எனப்படும் ஏஆர்டி பரிசோதனைக் கருவி தொகுப்பை பொதுமக்கள் வாங்கிப் பதுக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதாரப் பராமரிப்பில் மருந்தகங்கள் மற்றும் தனியார் மருத்துவர்களின் பங்கு, நோயாளிகள் சிகிச்சைக்காக முதலில் செல்லும் இடம் என்பதையும் தாண்டி அவர்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் ஒன்றாக உருமாறியுள்ளது.
இணையவழி பொய்யுரைக்கும் சூழ்ச்சித்திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின்படி (பொஃப்மா), எதிர்க்கட்சி அரசியல்வாதியான கென்னத் ஜெயரத்னம் நடத்தும் ‘டிஆர்எஸ்’ என்ற இணையத்தளமும் அவருடைய ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், லிங்க்ட்இன் ஆகிய சமூக ஊடக கணக்குகளும் பண ரீதியாக பயன்பெற தடுக்கப்பட்டுள்ளன.
மின் வாகனங்களுக்கு மின்னேற்றச் சேவை (சார்ஜிங்) வழங்கும் நிறுவனங்களுக்கான பதிவு, உரிமம் ஆகிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மின்னேற்ற சேவையை வர்த்தக ரீதியில் வழங்கும் நிறுவனங்களுக்கு செலவு அதிகரித்துள்ளது. எனவே அதில் ஒரு பங்கை வாடிக்கையாளர்களான வாகன ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்நிறுவனங்களில் சில தெரிவித்துள்ளன.
ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே விரைவுச்சாலையில் சிற்றுந்திலிருந்து குதித்து மோட்டர்சைக்கிளோட்டி ஒருவருக்கு மரணம் விளைவித்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட ரஷ்ய நாட்டவர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டார்.