சிங்க‌ப்பூர்

இல்லப் பணிப்பெண்ணை, ‘நீ ஒரு குப்பை’, ‘நீ மனிதரே அல்ல’ என்றெல்லாம் வசைபாடியதையும் தலைமுடியை இழுத்து, அறைந்து, குத்தி துன்புறுத்தியதையும் நீதிமன்றத்தில் சிங்கப்பூர் மாது ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சட்டவிரோத சூதாட்டத்திற்கு எதிராக டிசம்பர் 10ஆம் தேதி எடுக்கப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் 21 சந்தேக நபர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குறைந்த வருமானக் குடும்பங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள் எளிதில் நன்கொடை வழங்கலாம். இதற்காக எட்டு எம்ஆர்டி நிலையங்களிலும் இரண்டு பேருந்து நிலையங்களிலும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2023 டிசம்பர் 11 முதல் 2024 ஜனவரி 31 வரை இந்த வசதி இருக்கும்.
கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையல், ஆன்டிஜன் ரேப்பிட் டெஸ்ட் எனப்படும் ஏஆர்டி பரிசோதனைக் கருவி தொகுப்பை பொதுமக்கள் வாங்கிப் பதுக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
சுகாதாரப் பராமரிப்பில் மருந்தகங்கள் மற்றும் தனியார் மருத்துவர்களின் பங்கு, நோயாளிகள் சிகிச்சைக்காக முதலில் செல்லும் இடம் என்பதையும் தாண்டி அவர்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் ஒன்றாக உருமாறியுள்ளது.