You are here

சிங்க‌ப்பூர்

தென்னிந்திய வெள்ள நிவாரண நிதி

தென்னிந்திய வெள்ள நிவார ணத்துக்கு குடியரசின் 69 பள்ளி வாசல்களில் நடத்தப்பட்ட நிதி திரட்டில் மொத்தம் $98,216 சேர்ந் தது. கடந்த டிசம்பர் 18 முதல் 24ஆம் தேதிவரை நிதி திரட்டு இடம் பெற்றது. நன்கொடை திரட் டுக்கு ஏற்பாடு செய்த ரஹ்மத் தான் லில் அலாமின் அறநிறுவ னம், அந்தத் தொகைக்கான மாதிரி காசோலையை நேற்று மெர்சி ரிலீஃப் மனிதாபிமான அமைப்பிடம் ஒப்படைத்தது.

ஹலிமா: இதயத்திலிருந்து பேசுக; நீங்கள் மக்களின் முதல் பிரதிநிதி

நாடாளுமன்ற நாயகரின் முன்னிலையில் பதவி பிரமாணப் பற்றுறுதி

சிங்கப்பூரின் 13வது நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 89 பேர், தொகு தியில்லா உறுப்பினர்கள் இருவர் என மொத்தம் 91 உறுப்பினர்கள் நேற்று தங்கள் பதவிப் பிரமாணப் பற்றுறுதியை எடுத்துக் கொண் டனர். நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு மன்றத்தின் மணி அடித்ததும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்துக்குள் நுழைந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.

இரு சிறார் அறநிறுவனங்களுக்குத் திரண்ட $75,000 நிதி

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனும் அவரது துணைவியாரும்

ஷாங்ரிலா ஹோட்டலில் கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட SG50 DipCharity Bazaar எனப்படும் அரசதந்திர அறப்பணி சந்தையில் 75,000 வெள்ளி திரட்டப்பட்டது. சிங்கப்பூரின் பொன்விழாவை முன்னிட்டு 40 நாடுகளின் தூதரகங்களிலிருந்து அரசதந்திரிகள் ஒன்று சேர்ந்து இரு சிறார் அறநிறுவனங்களுக்கு நிதி திரட்டினர்.

$34பி. கட்டுமான ஒப்பந்தங்கள்

34 பில்லியன் வெள்ளி வரையிலான கட்டுமான ஒப்பந்தங்கள்

இவ்வாண்டில் 27 பில்லியன் வெள்ளியிலிருந்து 34 பில்லியன் வெள்ளி வரையிலான கட்டுமான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கட்டட, கட்டுமான ஆணையம் தெரிவித் துள்ளது. அவற்றில் 65 விழுக்காடு ஒப்பந்தங்கள் அரசாங்கத் துறை யால் வழங்கப்படும் என்று கூறப் படுகிறது.

இந்த முன்னுரைப்பு உண்மை யாகும் பட்சத்தில் 2002ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவே அரசாங்கத் துறை வழங்கும் ஆக அதிகமான கட்டுமான ஒப்பந்தங்கள் ஆகும். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட கட்டுமான ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ஏறத்தாழ 27.2 பில்லியன் வெள்ளி.

டாக்சி ஓட்டுநரை உதைத்த பயணிக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை

படம்: ஏசியாஒன்

டாக்சி ஓட்டுநரை உதைத்து அவருக்குக் காயம் விளைவித்த குற்றத்துக்காக ஆடவர் ஒருவருக்கு ஐந்து வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதியன்று சுவா சூ காங் செண்ட்ரலில் உள்ள புளோக் 210க்குப் பக்கத்தில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் 26 வயது கேரி கோ கூன் வெய் அந்த டாக்சி ஓட்டுநரைத் தாக்கினார்.

அன்றிரவு மதுபானம் அருந்தியிருந்த கோ, தமது காதலியுடன் டாக்சியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் டாக்சியில் வாந்தி எடுத்தார். இதைப் பார்த்த டாக்சி ஓட்டுநரான 41 வயது திரு அலெக்ஸ் இங் கெங் தியோங் அவரிடம் ஒரு பிளாஸ்டிக் பையைக் கொடுத்தார்.

விமான மறுபதிவு கட்டணம் நீக்கம்

சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜகார்த்தா பயணிகள்.

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்கு தலை அடுத்து விமானம் மூலம் ஜகார்த்தாவிலிருந்து கிளம்பிச் செல்பவர்களுக்கும் அங்கு செல் பவர்களுக்கும் மறுபதிவு கட்ட ணத்தைச் சில விமானச் சேவை கள் நீக்கியுள்ளன. இந்த ஏற்பாடு அடுத்த சில வாரங்களுக்கு நடப்பில் இருக்கும் என்று தெரிவிக் கப்பட்டது.

சிங்கப்பூர் திட்டத்துக்கு யுனெஸ்கோ விருது

பௌதிக மாதிரி வடிவமைப்புத் திட்டம் ஒன்றில் சிங்கப்பூருக்கு ஐநாவின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) விருது கிடைத்துள்ளது. கல்வியில் தகவல், தொடர்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுவது அடையாளம் காணப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைப்பட்ட OSP@SG திட்டம் மாணவர்களுக்குப் பௌதிகப் பாடத்தில் உதவும் வகையில் இருவழி தொடர்பு மாதிரிகளை வழங்குவதாக அமைச்சு கூறியது.

அரசாங்கத்தின் ஐந்து முக்கிய இலக்குகள்

சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாம்

அடுத்த ஐந்தாண்டு கால ஆட்சியில் சிங்கப்பூர் அரசாங்கம் ஐந்து முக்கிய இலக்குகளை நிறைவேற்ற வேண்டியிருப்பதாக அதிபர் டோனி டான் கெங் யாம் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் முடிந்து நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் நேற்று 13வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்று உரையாற்றியபோது அதிபர் டோனி டான் இவ்வாறு பேசினார்.

ஜூரோங் பறவைப் பூங்காவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பிரதமர்

ஜூரோங் பறவைப் பூங்கா

ஜூரோங் பறவைப் பூங்காவைப் பற்றிய தமது நினைவுகளைப் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். 1988ஆம் ஆண்டில் ஃபூஜி பருந்து மையத்தைத் திரு லீ திறந்து வைத்தார். அப்போது பருந்து ஒன்று தமது கையில் உட்கார்ந்திருப்பதைக் காட்டும் புகைப்படத்தை அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

மண்டாய் திட்டத்தை ஒட்டி சிங்கப்பூரில் உள்ள வனவிலங்கு பூங்காக்களில் கிடைத்த அனுபவங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ளுமாறு பொதுமக்களை சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் கேட்டுக்கொண்டிருந்து.

30,000 வெள்ளி ரொக்கம் உரியவரிடம் வந்து சேர்ந்தது

முஹம்மது ஃபைரோஸ்

பதற்றமும் நம்பிக்கையின்மையும் நிறைந்திருந்த நாணய மாற்று வணிகர் திரு முஹம்மது ரஃபிக்கின் மனநிலை இரண்டே மணி நேரத்தில் நிம்மதியும் நன்றி உணர்வும் மிக்கதாக மாறியது. இந்தத் திருப்பத்திற்கு அவர் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் டோனி வாங்கிற்கு நன்றி செலுத்துகிறார். திரு ரஃபிக்கின் ஊழியர் $30,000 ரொக்கத்தைத் தொலைத் திருந்தார். அப்பணத்தை மறுபடியும் பார்க்க முடியாமல் போய்விடுமோ என்று திரு ரஃபிக் பெரும் கவலை அடைந்தார்.

Pages