You are here

சிங்க‌ப்பூர்

பேருந்தில் சிக்கி இந்தோனீசியப் பெண் மரணம்

பேருந்தில் சிக்கி இந்தோனீசியப் பெண் மரணம்

டோ டக் அவென்­யூ­வில் நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் பொதுப் பேருந்­தில் சிக்கி 29 வயது இந்தோனீசியப் பெண் மர­ணம் அடைந்தார். பிற்­ப­கல் 12.30 மணிக்கு குமாரி வின்னி பிரா­டிவி என்ற அந்தப் பெண் மதிய உணவு சாப்­பி­டச் சென்ற­போது இந்த விபத்­தில் சிக்கி­ய­தா­கக் கூறப்­படு­கிறது. இந்த விபத்து தொடர்­பாக 50 வயது பேருந்து ஓட்­டு­நர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். பேருந்து வலது பக்கம் வளை­யும்­போது குமாரி பிரா­டிவி பேருந்­தில் சிக்­கி­ய­தாக நம்பப்­படு­கிறது. சம்ப­வம் அறிந்து பிரா­டி­வி­யின் தாயார் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து சிங்கப்­பூ­ருக்கு வந்­துள்ளார்.

1எம்டிபி தொடர்பிலான விசாரணை: வங்கி அதிகாரி வேலையிலிருந்து விலகினார்

மலே­சி­யா­வின் பிரச்­சினைக்­ கு­ரிய 1எம்டிபி தொடர்­பி­லான வங்கிக் கணக்­கு­களைக் கையாண்ட­தா­கக் கூறப்­படும் தனியார் வங்கி அதிகாரி வேலை­யி­லி­ருந்து வில­கி­விட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. சுவிட்­சர்­லாந்து தனியார் வங்­கி­யான பிஎஸ்ஐ சிங்கப்­பூ­ரில் யாக் யேவ் சீ என்ற அந்த அதிகாரி மூத்த உதவித் தலைவ-ராக பணி­யாற்றி வந்தார். தற்போது 1எம்டிபி தொடர்­பில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்­ற­வி­யல் விசா­ரணையை அவர் எதிர்­நோக்­கு ­கிறார். “தற்போது வங்­கி­யில் அவர் இல்லை,” என்று பிஎஸ்ஐ வங்­கி­யின் பேச்­சா­ளர் ஒருவர் தெரி­வித்­தார்.

நிதி அமைச்சர்: விவேகமான வரவுசெலவுத் திட்டம்

நிதி அமைச்­சர் ஹெங் சுவீ கியட்

நிதி அமைச்­சர் ஹெங் சுவீ கியட் மார்ச் 24ஆம் தேதி ஆண்டு வர­வு­செ­லவு திட்­டத்தை நாடா­ளு­மன்றத்­தில் தாக்கல் செய்கிறார். பொரு­ளி­ய­லில் தீவிர கவனம் செலுத்­தும், ‘விவேக வர­வு­செ­ல­வுத் திட்­ட­மாக’ இது இருக்­கும் என அமைச்­சர் கூறியுள்­ளார். இந்த ஆண்டின் வர­வு­செ­ல­வுத் திட்டம் புதிய அர­சாங்கத்­தின் முதல் வர­வு­செ­ல­வுத் திட்டம் என்­ப­தால், கடந்த அர­சாங்கத்­தின் ­போது கிடைத்த லாபம் சேமிப்­பில் சேர்க்­கப்­படும். எனவே, நிதித்­துறை­யில் விவே­க­மாக நடக்க வேண்டும் என்ற அமைச்­ச­ரின் கருத்து ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­க வில்லை என ஆய்­வா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளுக்கு ஏப்ரலில் பதிவு

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளுக்கு ஏப்ரலில் பதிவு

கல்வி அமைச்­சின் பாலர் பள்­ளி­களில் 2017ஆம் ஆண்­டுக்­கான மாணவர் பதிவு ஏப்ரல் மாதத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளது. 2012 ஜனவரி 2ஆம் தேதி முதல் 2013 ஜனவரி முதல் தேதி வரையில் பிறந்த சிங்கப்­பூர் குடி­யு­ரிமை அல்லது நிரந்த­ர­வா­சத் தகு­தி­யுள்ள மாண­வர்­களுக்­கான பதிவு இது. ஏப்ரல் 2 சனிக்­கிழமை, ஏப்ரல் 4 திங்கட்­கிழமை ஆகிய இரு நாட்­களும் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரையில் எட்டு நிலை­யங்களில் பதிவு நடை­ பெ­றும் என்று கல்வி அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது.

வேலையிட மரணங்கள் அதிகரிப்பு

வேலையிட மரணங்கள் அதிகரிப்பு

வேலை­யி­டங்களில் நேர்ந்த விபத்­துக்­க­ளால் காயமடைந்­தோ­ரின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு குறைந்­தி­ருந்தா­லும் வேலையிட மர­ணங்கள் உயர்ந்­துள்­ளன. 2014ஆம் ஆண்டு வேலையிட மர­ணங்கள் 60ஆக இருந்தன. ஆனால் சென்ற ஆண்டு அந்த எண்­ணிக்கை 66ஆக உயந்த­தாக வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரக் கழ­கத்­தின் ஆண்ட­றிக்கை தெரி ­விக்­கிறது. சென்ற ஆண்டு வேலை­யி­டத்­தில் காய­முற்­றோர் எண்­ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டை­வி­டக் குறைந்­துள்­ளது. சென்ற ஆண்டு 12,285 பேர் வேலை­யி­டத்­தில் காய­முற்­ற­தா­க­வும் அதற்கு முந்தைய ஆண்டில் அந்த எண்­ணிக்கை 13,535ஆக இருந்த­தா­க­வும் அறிக்கை குறிப்­பிடுகிறது.

உலகிலேயே அதிக வாழ்க்கைச் செலவினம் உள்ள நாடு சிங்கப்பூர்

உலகிலேயே அதிக வாழ்க்கைச் செலவினம் உள்ள நாடு சிங்கப்பூர்

உல­கி­லேயே வாழ்க்கைச் செல­வி­னம் அதி­க­முள்ள நாடாக, 116 புள்­ளி­களு­டன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சிங்கப்­பூர் விளங்­கி ­வ­ரு­கிறது. இதை­ ‘இஐயூ’ எனப்­படும் பொரு­ளி­யல் புலனாய்­வுப் பிரிவு தெரி­விக்­கிறது. இரண்டாம் நிலையில் 114 புள்­ளி­களு­டன் ஸ`ரிக், ஹாங்காங் ஆகிய நாடுகள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்­ளன. ஆண்­டுக்கு இரு முறை கருத்­தாய்வு செய்து 160 பொருட்­கள், சேவை­களின் 400 தனிப்­பட்ட விலை களை ஒப்புநோக்கி ‘இஐயூ’ நிறு­வ­னம் உல­க ­ளா­விய வாழ்க்கைச் செலவின அறிக்கையைத் தயா­ரிக்­கிறது.

சிங்டெல், ஸ்டார்ஹப், எம்1 இடையே கட்டணப் போட்டி

படம்:புளூம்பர்க்

நான்காண்டுகளில் முதன் முறை யாக தொலைத்தொடர்பு நிறு வனங்களுக்கிடையே கைபேசிப் பயன்பாட்டுக்கான கட்டணப் போட்டி உருவாகியுள்ளது. ‘சிங்டெல்’ நிறுவனத்தைத் தொடர்ந்து ‘எம்1’ நிறுவனமும் தனது புதிய, மறுஒப்பந்த வாடிக் கையாளர்களுக்கான கூடுதல் தரவுக் கட்டணத்தை மாதத்துக்கு $5.90 ஆக நிர்ணயித்துள்ளது. ‘சிங்டெல்’ இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது. ‘எம்1’ வாடிக்கையாளர்களின் அடிப்படை கைபேசிப் பயன் பாட்டுத் திட்டத்தில் 3ஜிபி தரவுப் பயன்பாடு $42 கட்டணத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

பூட்டிய வீட்டில் தீ; உயிருக்குப் போராடிய மாது

படம்: தி நியூ பேப்பர்

பூட்டப்பட்டிருந்ததால் தீப்பற்றி எரிந்த வீட்டிலிருந்து வெளியேற முடியாமல் 46 வயது மாது உயிருக்குப் போராடியிருக்கிறார். சன்னல் வழியாக மூச்சுக் காற்றுக்கு ஏங்கிய அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது போராட்டத்தை சன்னல் வழியாகப் பார்த்த அண்டை வீட்டுக்காரர்களான பதினெட்டு வயது மாணவியும் தாயும் அவர் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். அதில் மாதுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டது. வீடு முழுவதும் கரும்புகை பரவியதால் மூச்சுத் திணறலுக்கு ஆளான அவர்,

சாலை விபத்தில் 12 பேர் காயம்

விரைவுச் சாலையின் குறுக்கே விபத்தில் சிக்கிய வேனும் காரும். படம்: ஸ்டோம்ப்

ஆயர் ராஜா விரைவுச் சாலையில் நேற்றுக் காலை நிகழ்ந்த மோச மான விபத்தில் 12 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் தனியார் பேருந்து, வேன், செடான் கார் ஆகிய மூன்று வாகனங்கள் சிக்கின. காலை 7.30 மணியளவில் மரினா கோஸ்ட்டல் விரைவுச் சாலை திசையில் கிளமெண்டி அவன்யூ 6க்கு முன்பு விபத்து நிகழ்ந்தது. மலேசியாவில் பதிவான வேனிலிருந்த ஓட்டுநர் உட்பட பத்து பேருடன் செடான் காரின் ஒட்டுநரும் அதில் பயணம் செய்த பயணியும் காயம் அடைந்தனர்.

இவ்வட்டாரம் முழுவதும் தெரிந்த சூரிய கிரகணம்

சூரியக் கிரகணத்தைக் காண சிங்கப்பூர் அறிவியல் நிலையத்திற்குத் திரண்ட மக்கள்.

கண்கள் வானையே உற்றுநோக்க பலர் கைகளில் கேமராக்களுடன் சிங்கப்பூரிலும் இவ்வட்டாரத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நேற்றைய சூரிய கிரகணத்தைக் காண தீவின் பல இடங்களில் ஆவலுடன் படையெடுத்தனர். பல புகைப்பட ஆர்வலர்கள் பல மணி நேரத்திற்கு முன்னதாகவே தங்கள் கேமராக்களை வான் நோக்கி தயாராக வைத்துக் கொண்டனர். சிலர் தங்கள் கண்களை நேரடி சூரியக் கதிர்களிலிருந்து காத்துக் கொள்ள சிறப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்தினர். சிலர் எக்ஸ்=ரே தாட்களைக் கூடப் பயன்படுத்தினர். சிங்கப்பூரில் காலை 7.20க்குத் சூரிய கிரகணம் தொடங்கியது. மெல்ல மெல்ல சூரியனை விழுங்கியது சந்திரன்.

Pages