You are here

சிங்க‌ப்பூர்

அரசு ஆணைபெற்ற இரு புதிய கழகங்கள்

ஊழி­யர் திறன் மேம்பாடு, வேலை­வாய்ப்பு போன்ற­வற்­றில் தேசிய அள­வில் கவ­னம் செலுத்­தும் வகை­யில் ‘ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர் சிங்கப்­பூர் (எஸ்­எஸ்ஜி), ஊழி­யர்­அணி சிங்கப்­பூர் (டபிள்­யூ­எஸ்ஜி) என அர­சாங்க ஆணை­பெற்ற இரண்டு கழ­கங்கள் அறி­மு­கப்­படுத்­தப்­படு­கின்றன. ஸ்கில்ஸ்­ஃ­பி­யூச்­சர் சிங்கப்­பூர் எனப்­படும் எதிர்­கா­லத் திறன் வளர்ச்­சித் திட்­டத்திற்­கான கழ­கம் கல்வி அமைச்­சின் கண்­ கா­ணிப்­பி­லும் ‘டபிள்­யூ­எஸ்ஜி’ எனப்­படும் ‘ஊழி­யர் அணி சிங்கப்­பூர்’ எனும் கழ­கம் மனித வள அமைச்­சின் கண்­கா­ணிப்­பி­லும் செயல்­படும்.

கடந்த வாரத்தில் 554 பேருக்கு டெங்கி பாதிப்பு

டெங்கி விழிப்புணர்வுப் பதாகை.

கடந்த வாரம் ஜன­வரி 3 - 9ஆம் தேதி வரை டெங்­கி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்­ணிக்கை புதிய உச்­ச­மான 554ஐ தொட்­டுள்­ளது. இதனை தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் தனது இணை­யப் பக்கத்தில் வெளி­யிட்­டுள்­ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27 முதல் ஜன­வரி 2ஆம் தேதி வரை ஆக அதி­க­மாக 448 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். இந்த ஆண்டு ஜன­வரி 10ஆம் தேதி 50 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். அதற்கு மறுநாளான திங்கட்­ கி­ழமை பிற்­ப­கல் 3.30 மணிக்கு 71 பேர் பாதிக்­கப்­பட்­டி­ருந்த­தா­க­வும் வாரி­யம் தெரி­வித்­தது.

வசதி குறைந்த மாணவர்களுக்காக நிதி திரட்டிய மலையாளிகள் சங்கம்

சிங்கப்­பூ­ரின் SG50 கொண்டாட் டங்களை ஒட்டி கடந்த ஆண்டு சிங்கப்­பூர் மலை­யா­ளி­கள் சங்கம் வசதி குறைந்த மாண­வர்­களின் உயர்­கல்­விக்கு உத­வு­வதற்­காக $500,000 நிதி திரட்­டி­யி­ருந்தது. அந்த நிதி சிங்கப்­பூர் மலையாளி நிதி உதவி­யாக ஒதுக்­கப்­பட்டு, தேசியப் பல்­கலைக் கழகம் அதைத் தகு­தி­யுள்ள மாண­வர்­களுக்கு வழங்­கும். வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சிங்கப்­பூர் அல்லது நிரந்த­ர­வா­சி­கள் இந்த நிதி உதவிக்­குத் தகுதி பெறலாம். எனினும் இந்திய மாண­வர்­களுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும்.

மருத்துவம் தொடர்பான வழக்குகளில் புதிய திட்டங்கள்

மருத்­து­வச் செல­வு­கள், அதன் தொடர்­பிலான உயர்ந்த காப்­பு­று­திச் செல­வு­களைத் தவிர்க்­கும் வகையில் மருத்­து­வம் தொடர்­பான வழக்­கு­களில் புதிய திட்­டங்களை தலைமை நீதிபதி சுந்த­ரேஷ் மேனன் நேற்று அறி­வித்­தார். 2016 சட்ட ஆண்டை நேற்றுக் காலை தொடங்கி வைத்து உரை யாற்றிய திரு சுந்த­ரேஷ், தற்போது உள்ள நடை­முறை­களுக்கு மாற்றாக மூன்று புதிய நடை­முறை­கள் பற்றி பேசினார்.

கௌரவ மூத்த வழக்கறிஞர் நியமனம்

சிங்கப்­பூ­ரின் இரண்டா­வது கௌரவ மூத்த வழக்­க­றி­ஞ­ராக சிங்கப்­பூர் தேசியப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் சட்டப் பேரா­சி­ரி­யர் இங் லோய் வீ லூன் நேற்று நிய­ம­னம் செய்­யப்­பட்­டார். சட்டத் துறையில் அவரது சிறப்பு அறிவுத்திற­னுக்­கும் சட்டத் துறை, சட்ட நிபு­ணத்­து­வம் ஆகி­ய­வற்­றின் மேம்பாட்­டிற்­காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்­கீ­க­ரிக்­கும் நோக்கில் இந்தப் பதவி வழங்­கப்பட்டிருப்­ப­தாக சிங்கப்­பூர் சட்டப் பயி­ல­கம் தனது ஊடகச் செய்­தி­யில் குறிப்­பிட்­டது. முத­லா­வது கௌரவ மூத்த வழக்­க­றி­ஞ­ராக திரு இயோ டியோங் மின் 2012ஆம் ஆண்டில் நிய­ம­னம் செய்­யப் ­பட்­டார்.

83.8% மாணவர்கள் குறைந்தது ஐந்து பாடங்களில் தேர்ச்சி

தினேஷ் பழனி

சுதாஸகி ராமன்

குடும்பச் சூழ்நிலை எந்த வகையிலும் தனது கல்வியைப் பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொண்ட உட்லண்ட்ஸ் உயர் நிலைப் பள்ளி மாணவர் ம. தினேஷ் பழனி, கடந்த ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் (‘ஜிசிஇ’) சாதாரண நிலைத் (‘ஓ’) தேர்வில் நல்ல தேர்ச்சி பெற்று ஒற் றைப் பெற்றாரான தனது தாயாருக்கும் தாத்தாவுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

11வது மாடியிலிருந்து பொருட்கள் வீச்சு; ஆடவர் கைது

பூன் கெங் ரோட்டில் உள்ள புளோக் 16இன் 11வது மாடியிலிருந்து நேற்றுக் காலை ஏழு மணியளவில் 60 வயதான ஆடவர் சமையல் பாத்திரங்கள், பூந்தொட்டிகள், பொருட் களைக் கொண்டு செல்ல உதவும் ‘டிராலி’ போன்ற கனமான பொருட்களைக் கீழே வீசியதில் மூன்று கார்கள் சேதமுற்றன. அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை. காலை 8.45 மணியளவில் போலிசாரால் அழைத்துச் செல்லப்பட்ட அவர் இந்தச் சம்பவத்தின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. படங்கள்: வான்பாவ்

‘தொண்டூழியர்களின் பங்களிப்புக்கு குடும்ப ஆதரவு இன்றியமையாதது’

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில் குடும்ப தினம்.

வீ. பழனிச்சாமி

தொண்டூழியர்கள் தங்கள் சேவையை ஆற்றுவதற்கு முக்கிய ஆதரவு தருபவர்கள் அவர்களின் குடும்பத்தார். அவர்களின் ஆத ரவும் ஊக்கமும் இல்லாவிட்டால் தொண்டூழியர்கள் தங்கள் சேவையை முழுமனதுடன் வெளிக் கொணர முடியாது என்று தெரிவித்துள்ளார் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங்.

சிங்கப்பூரிலும் ஆலயங்கள் கடைப்பிடிக்கும் ஆடைக்கட்டுப்பாடு

தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில்

ப. பாலசுப்பிரமணியம்

முறையான, பாரம்பரிய ஆடைகள் அணிந்துதான் இந்துக் கோயில்களுக்குச் செல்லவேண்டும் எனும் சட்டம் சிங்கப்பூரில் இல்லை என்றாலும் மக்கள் முறையான ஆடைகளுடன் கோயில்களுக்கு வருவதை இங்குள்ள பல இந்துக் கோயில்கள் பக்தர்களையும் சுற்றுப் பயணிகளையும் ஊக்குவித்து அதனை எடுத்துரைத்தும் வந்து உள்ளன. தமிழ்நாட்டில் இம்மாதம் 1ஆம் தேதி இது குறித்த சட்டம் அமலாக்கப்பட்டதை இங்குள்ள ஆலயங்களும் பொதுமக்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

‘ஒருநாள் துப்புரவாளராக’ அனுபவம் பெற்ற நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் லுயிஸ் இங்

நகர மன்றத் துப்­பு­ர­வா­ளர்­களின் பணி எத்­தகை­யது என்பது பற்றிய அனு­ப­வத்தைப் பெற்றார் நீ சூன் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் லுயிஸ் இங். முதல் முறையாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கி­யி­ருக்­கும் அவர், நேற்று முன்­தி­னம் தெருக்­களைப் பெருக்­கு­தல், குப்பைத் தொட்­டி­களில் உள்ள குப்பை­களைச் சேக­ரித்­தல் போன்ற பணிகளை நீ சூன் நகர மன்றத் துப்­பு­ர­வா­ளர்­களு­டன் இணைந்து மேற்­ கொண்டார். அது தொடர்பிலான படங்கள் அவரது ‘ஃபேஸ்­புக்’ பக்­கத்­தில் இடம்பெற்றன.

Pages