சிங்க‌ப்பூர்

அனைத்து நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட்டால் விலங்குகளின் உயிரணுக்கள் மூலம் தயாரிக்கப்படும் இறைச்சி பொதுவாக ‘ஹலால்’ என்பதையும் முஸ்லிம்கள் அவற்றை உட்கொள்ளமுடியும் என்பதையும் முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது.
உடைந்த குடும்பங்கள், குறைந்த வருமானம் என பாதிக்கப்பட்ட பின்னணிகளைக் கொண்ட குழந்தைகள் அவர்களுக்கு உதவ வருவோரை பொதுவாக சந்தேகத்தோடும் தயக்கத்தோடும் அணுகுவதுண்டு. அவர்களின்மீது நம்பிக்கை ஏற்பட்டு நல்லுறவு கொள்வதற்கு ஒரு சில மாதங்கள் ஆகலாம். அந்நிலையில், தங்களின் ஓரறை வீட்டில் அடியெடுத்து வைத்த குழந்தைநல பாதுகாப்பு சேவையாளர் சுபாஷினி விஜயமோகனை பார்த்த உடனேயே ஆற கட்டித் தழுவிக் கொண்டனர் அண்ணன் தங்கையான தாமஸும் லில்லியும் (உண்மை பெயர்களல்ல). 
நாடாளுமன்றம் வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 5) கூடும்போது, சிம்ப்ளிகோ, முன்னாள் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஊழல் வழக்கு, சிங்கப்பூரில் ஆட்குறைப்பு நடைமுறைகள் போன்ற அம்சங்கள் விவாதிக்கப்படவிருக்கின்றன.
ஜனவரி மாதம் 27ஆம் தேதி மாலை, தேசிய நூலக வாரிய கட்டடத்தின் ‘தி பாட்’ அறையில் கவிஞர் இன்பாவின் ‘கடல் நாகங்கள் பொன்னி’ நூல் வெளியீடு கண்டது. இந்த நூலிலிருந்து தேர்ந்தெடுத்தக் கவிதைகளை ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மாணவர்கள் வாசித்தனர்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தால் முன்மொழியப்பட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் கெம்பாங்கான் ரயில் நிலையத்திற்கு அருகே 340 தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகள் (பிடிஓ) கட்டப்படவுள்ளன.