You are here

சிங்க‌ப்பூர்

சில்லறை விற்பனை ஏற்றம் கண்டது

கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்பார்த்ததற்கு மாறாக, இவ்வாண்டு ஜனவரியில் சில்லறை விற்பனை சற்று ஏற்றம் கண்டது. கடந்த ஆண்டு ஜனவரியை ஒப்புநோக்க, 2016 ஜனவரியில் மோட்டார் வாகனங்கள் தவிர்த்த சில்லறை விற்பனை 1.4% கூடியது. புளூம்பெர்க் நடத்திய கருத்தாய்வில் சில்லறை விற்பனை 3.8% சரியும் என எதிர் பார்ப்பதாக ஆய்வாளர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்டு அடிப்படையில் ஒப்புநோக்க, ஒட்டுமொத்த சில்லறை விற்பனை 7.5% உயர்வு கண்டது. வாகன விற்பனை 50.9% அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் என புள்ளியியல் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. முன்னதாக, இந்த உயர்வு 3.1% இருக்கும் என்று புளூம்பெர்க் முன்னுரைத்திருந்தது.

ஆர்ச்சர்ட் சாலையில் அமைந்துள்ள ஹோட்டலில் தீ

ஆர்ச்சர்ட் சாலையில் அமைந்துள்ள ஹோட்டலில் தீ

ஆர்ச்சர்ட் சாலையில் அமைந்துள்ள மெரியட் டேங் பிளாசா ஹோட் டலில் நேற்றுக் காலை திடீரென தீ பிடித்தது. அந்த ஹோட்டலின் மூன்றாம் தள கூரையில் காலை சுமார் 9 மணியளவில் தீப்பற்றியதாகவும் இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் தெரிவிக்கப் பட்டது. அந்த ஹோட்டலின் பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் முதலில் தீயைக் கண்டதாகவும் அது பற்றி உடனே அவர் ஹோட்டலின் தீ கட்டுப்பாட்டு நிலையத்திற்குத் தெரிவித்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. உடனடியாக நிலையத்தின் ‘நிறுவன அவசரகால மீட்புக் குழு’ தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது.

எல்டிஏ: புதிய தலைவராக ஆலன் சான் நியமனம்

எஸ்பிஹெச் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆலன் சான். படம்: போக்குவரத்து அமைச்சு

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆலன் சான் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்து வரும் திரு மைக்கல் லிம் சூ சேனின் பதவிக்காலம் இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிகிறது. சிங்கப்பூர் கணக்கியல் ஆணை யத்தின் தலைவரும் பொதுச் சேவை ஆணையத்தின் உறுப் பினருமான திரு லிம் பயணிகளை மையமாகக் கொண்ட நிறுவனமாக நிலப் போக்குவரத்து ஆணையத்தை மாற்றியதில் பெரும்பங்காற்றினார் என்று போக்குவரத்து அமைச்சு நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த சிங்கப்பூரருக்கு சிறை

மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த சிங்கப்பூரருக்கு சிறை

கடவுச்சீட்டு இல்லாமல் கடற்பாலத்தைக் கடந்து மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த சிங்கப்பூரருக்கு மலேசிய நீதிமன்றம் 12 மாதம் சிறைத்தண்டனை விதித்தது. நேற்று முன்தினம் குற்றத்தை ஒப்புக்கொண்ட 47 வயது டான் ஹோக் சியேவுக்கு நீதிபதி சலாவட்டி ஜம்பாரி சிறைத் தண்டனை விதித்தார். டானிடம் சீன மொழியில் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அப்போது சிங்கப்பூரில் தாம் தேடப்படுவதையும் ஆயுதக் கொள்ளை, போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்பதையும் அவர் ஒப்புக் கொண்டார்.

மருத்துவமனையில் ஆடவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது

 காம்பஸ்வேல் கிரசெண்டில் உள்ள வீட்டில்

சாங்கி பொது மருத்துவமனையில் நேற்று பிற்பகல் 68 வயது நபர் மீது மனைவியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. கோங் பெங் யீ என்ற அந்த நபரிடமிருந்து இதுவரை ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படவில்லை என்று நம்பப்படுகிறது. சம்பவத்தில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்ற ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணிக்கும் மாலை 4.35 மணிக்கும் இடையே காம்பஸ்வேல் கிரசெண்டில் உள்ள வீட்டில் மனைவி திருமதி வோங் சிக் இயோக்கை, 63, அவர் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

மசெகவிலிருந்து வெண்டி லிம்மும் விலகினார்

வெண்டி லிம்

புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியின் முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் ஓங்குடன் திருமணத்துக்குப் பிந்திய தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் வெண்டி லிம் தாமாகவே முன்வந்து மக்கள் செயல் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார் என்று சேனல் நியூஸ் ஏசியா செய்தி மூலம் அறியப்படுகிறது. சென்ற சனிக்கிழமை சொந்தக் காரணங்களுக்காக கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப் பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக திரு ஓங் அறிவித்தார். இந்த நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புகொண்டிருப்பதாகக் கூறப்பட்ட வெண்டி லிம்மும் கட்சியிலிருந்து விலகிய தாகக் கூறப்படுகிறது.

2020க்குள் 20,000 குழந்தைப் பராமரிப்பு இடங்கள்

பொங்கோல் வாட்டர்வே பாயிண்டில் என்டியுசி தலைமைச் செயலாளர் திரு சான் சுன் சிங். படம்: என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்

சிங்கப்பூரில் வேலை செய்யும் குடும்பங்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, தனது குழந் தைப் பராமரிப்புக் கட்டமைப்பை மேலும் வளர்க்கவிருப்பதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) ‘மை ஃபர்ஸ்ட் ஸ்கூல்’ நிறுவனம் அறிவித்து உள்ளது. தற்போது 13,000 ஆக உள்ள அதன் குழந்தைப் பராமரிப்பு இடங் கள் வரும் 2020ஆம் ஆண்டுக் குள் 20,000 இடங்களுக்கு உயர்த்த அது திட்டமிட்டுள்ளது. இது, அடுத்த ஐந்து ஆண்டு காலத்தில் சுமார் 50 விழுக்காடு வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக் கது.

வாகன காப்புறுதி மோசடிகளை அரங்கேற்ற உதவிய ஆடவருக்கு 6 ஆண்டு சிறை

 37 வயது ரஹ்­மத் முக­மது

திட்­ட­மிட்டு வாகன விபத்­து­களை அரங்­கேற்றி அதன்­மூ­லம் மில்­லி­யன் கணக்­கான தொகையைக் காப்­பு­று­தி­யா­கப் பெறு­வ­தற்கு உத­வி­ய­தாக ஆட­வர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் நேற்று 74 மாதச் சிறைத் தண்டனை விதித்­துத் தீர்ப்­ப­ளித்­தது. முன்னாள் விநியோகிப்புப் பணி­யா­ள­ரா­’கப் பணி­யாற்­றிய 37 வயது ரஹ்­மத் முக­மது, தன் மீது சுமத்­தப்­பட்ட 25 ஏமாற்ற உடந்தை­யாக இருந்தது, ஏமாற்றத் தூண்­டி­யது போன்ற குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்டார். இவ­ருக்கு தண்டனை வழங்­கும்­போது இவர் மீது இருந்த குற்­றச்­சாட்­டு­களும் கவ­னத்­தில் எடுத்­துக் கொள்­ளப்­பட்­டன.

தோற்றுவிப்பாளர்களுக்கு நினைவிடம் அமைக்க இரு இடங்கள் பரிந்துரை

ஃபோர்ட் கேனிங் பூங்கா (மேல் படம்:), ‘கார்டன்ஸ் பை த பே

சிங்கப்­பூ­ரின் தோற்­று­விப்­பா­ளர்­களைக் கௌர­விக்­கும் வகை­யில் அவர்­களுக்கு நினை­வுச் சின்­னங்களை நிறு­வு­வ­தற்கு ஃபோர்ட் கேனிங் பூங்கா, கார்­டன்ஸ் பை த பே ஆகிய இரண்டு இடங்களை ‘தோற்­று­விப்­பா­ளர்­களைக் கொண்டா­டும் குழு’ அடை­யா­ளம் கண்­டுள்­ளது. கடந்த நான்கு மாதங்களாக நடந்த பலதரப்பட்ட கலந்தாய்வுக் குப் பின் இதனை அக்­கு­ழு­வின் தலை­வர் திரு லீ சு யாங் அறி­வித்­தார். இந்த இடங்களில் நினை­வுச் சின்ன கட்­ட­டங்கள் எழுப்­பு­வது நாட்­டின் மையப்­ப­கு­தி­யில் இருப்­ப­தோடு வருங்கா­லச் சந்த­தி­யி­னரைக் கவ­ரும் வித­மா­க­வும் இருக்­கும்.

தவணை முறையில் ராய் $150,000 கட்ட உத்தரவு

வலைப்பதிவாளர் ராய் ஙெர்ங்

வலைப்பதிவாளர் ராய் ஙெர்ங் (படம்) மீது பிரதமர் தொடுத்த அவதூறு வழக்கில் பிரதமருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையான $150,000ஐ ராய் தவணை முறையில் செலுத்த அனுமதிக்கப்படுவார் என்று ராய் ஙெர்ங்கின் வழக்கறிஞர் இயூஜின் துரைசிங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். முன்னதாக, தான் செலுத்த வேண்டிய $150,000க்கு பதிலாக தாம் $36,000யும் அதனுடன் வழக்கு செலவினத் தொகையையும் சேர்த்துக் கட்டத் தயார் என்றும் அதை பிரதமர் ஏற்றுக் கொண்டு தம்மை இந்த வழக்கி லிருந்து விடுவித்து விடவேண்டும் என்றும் ராய் கேட்டுக்கொண்டிருந்தார்.

Pages