You are here

சிங்க‌ப்பூர்

தனியார் வீட்டுவிலை தொடர்ந்து இறங்குமுகம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ்

சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலைகள் தொடர்ந்து 11வது காலாண்டாக இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குறைந்தன. இருந்தாலும் இந்தக் குறைவு முன்பைவிட குறைவாக இருந்தது என்று நகர மறுசீரமைப்பு ஆணையத் தின் மதிப்பீடுகள் காட்டுகின்றன. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் விலைகள் 0.7% சரிந்தன. இரண்டாவது காலாண்டில் இந்தச் சரிவு 0.4% என்று மதிப்பிடப்படுகிறது.

நடிகைக்கு $700 அபராதம்

தொலைக்காட்சி நடிகை ரூய். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கவனமில்லாமல் வாகனம் ஓட்டியதற்காக தொலைக் காட்சி நடிகை ரூய் யென்னுக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டது. தனது பிஎம்டபிள்யூ காரை முறையாகக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக அந்த 35 வயது நடிகை குற்றத்தை ஒப்புக்கொண் டார். இதன் காரணமாக அந்தக் கார் கிளமெண்டி அவென்யூ 2ல் உள்ள 331வது புளோக்குக்கு அருகே இருக்கும் கார் பேட்டையில் தடுப்பில் ஏறி அந்தப் பேட்டையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஒரு மோட்டார்சைக்கிள் மீது இடித்துவிட்டது.

2017 மத்தியில் மின்சார கார் பகிர்வுத் திட்டம்

2017 மத்தியில் மின்சார கார் பகிர்வுத் திட்டம்

சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு நடுப்பகுதியிலிருந்து மின்சார கார் பகிர்வுத் திட்டம் தொடங்கப்பட உள்ளது என்றும் வரும் 2020ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீட மைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டை களும் இத்திட்டத்தின் மூலம் பய னடையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்பில் ‘ப்ளூ எஸ்ஜி’ எனப்படும் பிரஞ்சு ‘போலோர்’ நிறுவனக் குழுமத்தின் துணை நிறுவனம், நிலப் போக்கு வரத்து ஆணையம், பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆகியவை நேற்று அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டன.

டிசம்பர் 1: கார் நிறுத்த கட்டணம் உயர்கிறது

2017 மத்தியில் மின்சார கார் பகிர்வுத் திட்டம்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகமும் (வீவக) நகர மறுசீரமைப்பு ஆணையமும் (யுஆர்ஏ) தங்களின் கார் நிறுத்தக் கட்டணங்களை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் உயர்த்துகின்றன. குறுகிய கால மற்றும் மாதாந்தர கார் நிறுத்தக் கட்டணங்களும் இதில் அடங் கும். இதற்கு முன் 2002ல் கார் நிறுத்தக் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அப்போதிலிருந்து கட்டு மானம், மனிதவளம், இதர பரா மரிப்புச் செலவுகள் அதிகரித்துள் ளதால், கட்டடங்கள் கட்டும் செலவு, கார் நிறுத்தப் பேட்டை களை நடத்துவதற்கும் நிர்வகிப்ப தற்குமான செலவுகளும் அதிக ரித்தன என்றும் கழகமும் ஆணை யமும் நேற்று தெரிவித்தன.

கோ: சமூகத்துக்கு உதவ நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும்

சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் நிறுவனங்கள் தங்கள் வளங்களைத் திரட்டி, மக்களுக்கு உதவுவதற்கு ஒன்றி ணைந்து செயல்பட வேண்டும் என்று ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் தெரிவித்துள்ளார். உள்ளூர் ஹோட்டல் ஒன்றில் நேற்று நடைபெற்ற ‘புரொஜெக்ட் வீ கேர்’ எனும் முதலாவது கருத் தரங்கில் திரு கோ இவ்வாறு பேசினார். 2012ஆம் ஆண்டில் மக்கள் கழகம், நிறுவனங்கள் ஆகியவற் றால் தொடங்கப்பட்ட ‘புரொஜெக்ட் வீ கேர்’ திட்டம், நிறுவனங்கள் தொண்டூழியத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கிறது.

தோழியை அவமானப்படுத்திய உள்துறை அமைச்சின் அதிகாரிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை

ஏட்ரியன் கோ குவான் கியோங்

தோழியை விடா­மல் துரத்தி அவமானப்படுத்திய குற்­றத்­திற்­காக உள்துறை அமைச்சு அதிகாரி ஒரு­வ­ருக்கு நீதி­மன்றம் நேற்று ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்­துத் தீர்ப்­ப­ளித்­தது. ஏட்ரியன் கோ குவான் கியோங் என்ற 38 வயது அதிகாரி கடந்த ஆண்டு இந்தக் குற்­றத்தைப் புரிந்தார். இந்த மாதத்தில் இதுபோன்ற குற்றத்திற்காக தண்டனை பெறும் இரண்டாவது குற்றவாளி ஏட்ரியன் கோ. இதற்கு முன்பு லாய் ‌ஷி ஹெங் என்ற 26 வயது ஆட­வருக்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஓராண்டுச் சிறைத் தண்டனை வழங்கப்­பட்­டது. இது­கு­றித்து அர­சாங்க வழக்­க­றி­ஞர் தியா­கேஷ் சுகு­மா­றன் கூறும்­போது, “தண்டனை பெற்ற கோ திரு­ம­ண­மா­ன­வர்.

வீவக அடுக்கு மாடிச் சுவரில் ஏறியவர் மாயம்

அங் மோ கியோ­வில் வீவக அடுக்­கு­மா­டிக் கட்­ட­டம் ஒன்­றின் வெளிப்­பு­றத்­தில் 12வது மாடி­யி­லி­ருந்து 10வது மாடிக்கு ஆட­வர் ஒரு­வர் இறங்­கினார். நேற்று விடி­யற்­காலை­யில் நடந்த இந்தச் சம்ப­வம் குறித்து போலி­சார் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர். இது­கு­றித்து அந்த அடுக்­கு­மா­டிக் கட்­ட­டத்­தில் வசிக்­கும் 40 வயது திரு­மதி லீ என்­ப­வர் கூறுகை­யில், “நள்­ளி­ரவு நேரம், நான் வர­வேற்­பறை­யில் செய்­தித்­தாள் படித்­துக்­கொண்­டி­ருந்­தேன். அப்­போது என் வீட்டு சமையலறைப் பக்கம் ஏதோ சத்தம் கேட்டது. பக்­கத்து வீட்­டுக்­கா­ரர்­கள் துணி காயப்­போ­ட­லாம் என்று நினைத்­தேன்.

முக்கிய பங்கு வகிக்கும் வழிபாட்டு இடங்கள்

வீ. பழனிச்சாமி

பல்லாண்டு காலமாக சிங்கப்பூர் கட்டிக்காத்து வரும் இன, சமய ஒற்றுமையை நாம் தொடர்ந்து பலப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். நமது சமய, சமூகத் தலைவர்களுடன் நமது ஆலயங்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டு இடங்கள் ஆகியவையும் நமது சமய பன்முகத் தன்மையையும் சமூக ஒற்றுமை யையும் வலுப்படுத்தும் முக்கிய பங்கை ஆற்றிக் கொண்டிருக்கின்றன என்று கலாசார, சமூக, இளை யர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

தளவாடத்துறை திறனாளர்களைப் பயிற்றுவிக்க புதிய திட்டம்

தள­வா­டத் தொழில் துறைக்கு ஏற்ப திறனா­ளர்­களைப் பயிற்­று­விக்க புதிய திட்டம் ஒன்று நேற்று தொடங்கப்­பட்­டது. தள­வா­டத் துறை திறனா­ளர்­கள் மாற்­றுத் திட்டம் (பிசிபி) என்றழைக்­கப்­படும் இந்தத் திட்டம் ஜூலை மாதம் தொடங்­கும். இதில் தள­வா­டத்­துறை அதி­கா­ரி­கள், தள­வா­டத்­துறை நிர்­வா­கிகள் போன்ற பதவி வகிப்­போர், திறனா­ளர்­கள், மேலா­ளர்­கள் ஆகி ­யோ­ருக்­காக 150 இடங்களை அளிக்­கும். ‘தி சப்ளை செயின் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் அகாடமி’ என்ற பயிலகம் இந்தத் திட்­டத்­தின் மேலா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. அது ஊழி­யரணி மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்­படும்.

Pages