சிங்க‌ப்பூர்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), செயற்கை நுண்ணறிவில் புதிய பட்டக்கல்வித் திட்டத்தை வழங்கவிருக்கிறது.
காஸாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை குறித்து அனைத்துலக நீதிமன்றம் அறிவித்துள்ள தற்காலிக நடவடிக்கைகளின் சட்ட தாக்கங்களை சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் முன்னணி வங்கிகள் சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் அதிக லாபம் ஈட்டியதாகக் கருதப்படுகிறது.
வங்கி ஆவணங்கள், வழக்கறிஞர் கடிதங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களின் போலி நகல்களைக் காட்டி, வீட்டில் உடன் தங்கியிருந்தவரிடம் கடன் வாங்கி மோசடி செய்த பெண்ணுக்கு 20 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 செப்டம்பர் 30ஆம் தேதி முதல் 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனியார் வீடுகளை விற்ற 940 முதியோர் குடும்பங்கள், 15 மாத காலம் காத்திருக்காமல் நான்கறை அல்லது அதற்கும் சிறிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டை வாங்கியுள்ளன.