சிங்க‌ப்பூர்

தமிழும் இசையும், கவிஞர்களும் கானமும் என்ற பெயரில் லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் சித்திரைப் புத்தாண்டு அன்று ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
வட்டார அளவில் நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட நிதித் தேவைகளை மேலும் நன்றாகப் பூர்த்திசெய்யும் நோக்குடன் ஊழியர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவ சிங்கப்பூர் அரசாங்கம், நிதித் துறையில் 35 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவுள்ளது.
நோன்புப் பெருநாள், மே தினக் கொண்டாட்டங்களுக்காக இஸ்தானா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
சிங்கப்பூரில் ஏப்ரல் மாத பிற்பாதியில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் வெப்பநிலையும் அதிகமாக இருக்கும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
செந்தோசா கோவ்வில் உள்ள ‘தி ரெசிடன்ஸ் அட் டபிள்யூ’ கூட்டுரிமை வீடுகளின் விலை 40 விழுக்காடு குறைக்கப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 15, 16ஆம் தேதிகளில் 65 வீடுகள் விற்கப்பட்டன.