Tamilmurasu த‌மிழ் முர‌சு - உலகம் http://tamilmurasu.com.sg/taxonomy/term/3/0 ta பேங்காக்கில் குண்டுவெடிப்பு: ஒருவர் மரணம், 10 பேர் காயம் http://tamilmurasu.com.sg/node/8612
தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கின் பரபரப்பான கடைத் தொகுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை வெடித்த குண்டில் ஒருவர் மரணமமைந்தார், மேலும் 10 பேர் காயமடைந்ததாக சிஎன்என் செய்தித் தகவல் கூறுகிறது.

இந்தக் குண்டு வெடிப்பில் காயமடைந்த 51 வயது ஆடவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் துயரச் சம்பவத்தில் காயமடைந்த 10 பேர் மூன்று மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அரசாங்க அவசர நிலைப் பிரிவு மையம் தெரிவித்தது.

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்திருந்த கடைத் தொகுதியில் குப்பைத் தொட்டியில் இந்தக் குண்டு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே, தாய்லாந்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளர் குறுகிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாக செய்தித் தகவல் கூறுகிறது.
உலகம் Tue, 27 Jul 2010 00:44:20 +0000 tamilmurasuweb 8612 at http://tamilmurasu.com.sg கம்போடியா இனப் பேரழிவு: கெமர் ருஜ் தலைவருக்கு 30 ஆண்டு சிறை http://tamilmurasu.com.sg/node/8610
கம்போடியாவில் 1970களில் அப்போதைய கெமர் ருஜ் ஆட்சியில் இனப் பேரழிவு குற்றங்களுக்காக டுச் என்பவருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கெமர் ருஜ் ஆட்சியில் கம்போடியாவில் பட்டினியாலும், அதிகாமான வேலைப் பளுவாலும், மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தாலும் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் மரணமடைந்தனர்.

கம்போடியாவின் கெமர் ருஜ் ஆட்சியில் நிகழ்ந்த இனப் பேரழிவுக்காக இது வரை இவர் மட்டுமே தண்டிக்கப் பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 15,000 ஆடவர், மாதர் மற்றும் குழுந்தை கள் கொலை செய்யப்பட்டதை S-21 என்ற சிறையில் மேற் பார்வையிட்டார்.
இந்த வழக்கு விசாரணையில் தம் மீது சுமத்தப் பட்ட குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
ஆனால் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் தம்மை விடுவிக்குமாறு கோரினார்.
இவருடைய சிறைக்கு அனுப்பப் படும் அனைவரும் கொல்லப்படு வதற்காகவே அனுப்பப்பட்டனர் என்று ஐநா தலைமையிலான நீதிமன்றம் கூறியது.
உலகம் Tue, 27 Jul 2010 00:42:31 +0000 tamilmurasuweb 8610 at http://tamilmurasu.com.sg ஜெர்மனி: காதலர் விழா நெரிசலில் 19 பேர் மரணம் http://tamilmurasu.com.sg/node/8608
மேற்கு ஜெர்மனியின் டுவிஸ்பர்க் நகரில் நடைபெற்ற, காதலர்கள் இசை விழா நிகழ்ச்சியில் பல்லாயிரக் கணக்கான காதலர்கள் சனிக்கிழமை அன்று கலந்துகொண்டனர்.

இதில் இவர்கள் பாதாள நடைபாதையில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட பதற்றம் காரணமாக பலர் முண்டியடித்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தனர்.

அப்பொழுது ஏற்பட்ட மக்கள் நெரிசலில் 19 பேர் உயிரிழந்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

இவர்கள் தவிர, மேலும் ஏறக்குறைய 100 பேர் வரை காயமடைந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, கூட்டம் அதிகமாக இருப்பதை கண்ட போலிசார் அந்தப் பக்கமாக செல்ல விழைந்தோரைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்து நகர மற்றும் போலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இறந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

“விழாவிற்கு வந்த இளையர்களுக்கு நிகழ்ந்த துயரம், வலி ஆகியவற்றுக் காக நான் வருந்துகிறேன்,” என்று ஜெர்மன் பிரதமர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் டுவிஸ்பர்க் நகர மேயர், முழு அளவிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உலகம் Sun, 25 Jul 2010 23:56:12 +0000 tamilmurasuweb 8608 at http://tamilmurasu.com.sg அமெரிக்க-தென் கொரியப் படைகளின் பயிற்சி தொடங்கியது http://tamilmurasu.com.sg/node/8607
அமெரிக்க-தென் கொரியப் படைகள் வட கொரியாவின் தாக்குதல் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது நேற்று ஜப்பானியக் கடலில் பயிற்சியைத் தொடங்கின.

இந்த மாபெரும் போர்ப் பயிற்சியில் 20 போர்க்கப்பல்கள், 200 விமானங்கள், அமெரிக்கா, தென் கொரியா ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த 8,000 வீரர்கள் கலந்துகொள்கின்றனர்.

இவ்வாண்டு மார்ச் மாதம் தென் கொரியாவின் போர்க்கப்பலை வட கொரியா தாக்கி மூழ்கடித்த சம்பவத்தைத் தொடர்ந்து வட கொரியாவுக்கு இரு நாடுகளும் தெளிவான சமிக்ஙை அனுப்பும் விதமாக இந்தப் போர்ப் பயிற்சி அமையும் என்று பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது.

எனினும், தென் கொரியப் போர்க்கப்பலை மூழ்கடித்ததாகக் கூறப்படுவதை மறுத்த வட கொரியா இந்தப் பயிற்சி தொடருமானால் தான் அணுவாயுதங்களைக் கொண்டு புனிதப் போர் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.

தங்களது இரு நாடுகளின் வலிமையை வெளிப்படுத்தி வட கொரியாவின் அரசியல் மற்றும் ராணுவத் தலைமையை அதிர வைப்பதே இந்தப் போர்ப் பயிற்சியின் நோக்கம் என்று பயிற்சிக் கப்பலில் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஜான் சட்வொர்த் கூறுகிறார்.
ஆனால் இந்தப் போர்ப் பயிற்சியும் அதன் மூலம் வெளிப்படும் ராணுவ வலிமையும் வட கொரியாவின் தீவிரவாதிகளை ஊக்குவிக்கவே பயன்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

வட கொரியாவின் எரிச்சலூட்டும் பிரசாரம் புதிதல்ல என்றபோதிலும் இந்தப் போர்ப் பயிற்சி அந்த வட்டாரத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக, அனைத்துத் தரப்பினரையும் பொறுமையைக் கடைப் பிடிக்கும்படி சீனா அறிவுறுத்தியுள்ளது.
உலகம் Sun, 25 Jul 2010 23:55:47 +0000 tamilmurasuweb 8607 at http://tamilmurasu.com.sg முஸ்லிம் அல்லாத சங்க நடவடிக்கைகள் தொடர அனுமதி: மஇகா வரவேற்பு http://tamilmurasu.com.sg/node/8606
மலேசியப் பள்ளிகளில் முஸ்லிம் அல்லாத சங்கங்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர அரசாங்கம் அனுமதித்துள்ளதை மலேசிய இந்தியர் காங்கிரஸ் வரவேற்றுள்ளது.

இதுபற்றி மலேசியத் துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முஹிதின் யாசின் அளித்துள்ள உறுதி இவ்விவகாரத்தில் கருத்துவேறுபாட்டை போக்க உதவும் என்று மஇகாவின் துணைத் தலைவர் பழனிவேல் கூறியதாக மலேசியாவின் சின் சியூ ஜிட் போ பத்திரிகைத் தகவல் கூறுகிறது.

இத்தகைய சங்கங்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர ஏதுவாக அரசாங்கம் ஊக்குவிப்புகள் அளிப்பதுடன் சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யும் எனத் தாம் நம்புவதாகவும் திரு பழனிவேல் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள சில பள்ளிகளில் இதுபோன்ற சங்கங்கள் சில மூடப்பட்டுவிட்டதாக வந்த செய்தித் தகவல்களைத் தொடர்ந்து அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
உலகம் Sun, 25 Jul 2010 23:55:19 +0000 tamilmurasuweb 8606 at http://tamilmurasu.com.sg தாய்லாந்து: அரசியல் நிலவரத்தை எடைபோடும் இடைத்தேர்தல் http://tamilmurasu.com.sg/node/8605
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் ஆளும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் இறந்ததையடுத்து அங்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

அந்தத் தொகுதிக்கு சிறையிலிருந்தபடியே முன்னாள் பிரதமர் தக்சினின் சிவப்புச் சட்டை ஆதரவாளர்களில் ஒருவர் போட்டியிடுகிறார்.

இதனால் இந்த இடைத்தேர்தல் முடிவு தாய்லாந்தின் தற்போதைய அரசியல் நிலவரத்தைப் படம் பிடித்துக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு போட்டியிடும் பேங்காக்கின் முன்னாள் துணை ஆளுநர் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி சிறையில் உள்ளார்.
உலகம் Sun, 25 Jul 2010 23:55:00 +0000 tamilmurasuweb 8605 at http://tamilmurasu.com.sg எண்ணெய்க் கசிவு பகுதியில் பணிகள் தற்காலிக நிறுத்தம் http://tamilmurasu.com.sg/node/8591
‘போனி’ எனும் புயல் காற்று புளோரிடா மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதியை நோக்கி வீசுவதால் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தின் பணிகள் தாமதம் அடைந்துள்ளன.

இதனால் மெக்சிகோ வளைகுடா பகுதியில் எண்ணெய்க் கிணறு இன்னும் இரண்டு வாரங்களுக்கு மூடப் பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

அந்த எண்ணெய்க் கிணற்றிலிருந்து எண்ணெய் வெளியேறாதபடி புதிய மூடியை அந்நிறுவனம் சென்ற வாரம் பொருத்தியது. அந்த எண்ணெய்க் கிணற்றை நிரந்தரமாக மூடும் பணியில் பிரிட்டிஷ் நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
ஆனால் தற்போது வீசும் புயல்காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல்கள் கரைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

புயல் காற்றின் வேகம் தணிந்ததும் எண்ணெய்க் கிணற்றிலிருந்து எண்ணெய் வெளியேறுவதை நிரந்தரமாக நிறுத்துவதற்கான பணிகள் தொடரும் என்று பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனம் கூறியது.
மெக்சிகோ வளைகுடா பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் எண்ணெய் துரப்பண மேடை வெடித்து கடலில் மூழ்கியது முதல் அப்பகுதியில் மோசமான எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க கடலோரப் பகுதிகளில் எண்ணெய்க் கசிவு பரவியுள்ளது.
உலகம் Sun, 25 Jul 2010 15:06:06 +0000 tamilmurasuweb 8591 at http://tamilmurasu.com.sg ஆசியான் தலைவர்களுக்கு ஒபாமா அழைப்பு http://tamilmurasu.com.sg/node/8593
இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவுக்கு வருமாறு ஆசியான் நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அழைப்பு விடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் கூறினார்.
ஆசிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டத்தில் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாண்டு இறுதியில் வாஷிங்டனில் அந்த சந்திப்பு இடம்பெறும் என்றும் அவர் கூறினார். ஆசிய நாடுகளுடன் அமெரிக்காவின் ஈடுபாட்டை அதிகரிக்க ஒபாமா நிர்வாகத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கையின் ஒரு பகுதியே ஹில்லரியின் இந்த வியட்னாம் வருகை என்று கூறப்படுகிறது.
வியட்னாமில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள வட்டாரக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் ஹில்லரி கூறினார்.
உலகம் Fri, 23 Jul 2010 16:00:00 +0000 tamilmurasuweb 8593 at http://tamilmurasu.com.sg வட கொரியாவுக்கு ஹில்லரி எச்சரிக்கை http://tamilmurasu.com.sg/node/8594
வட கொரியா அதன் பக்கத்து நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் உறவை மேம்படுத்திக்கொள்ள விரும்பினால் அதன் ஆபத்தான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லரி கிளின்டன் எச்சரித்துள்ளார்.

வியட்னாமில் ஆசிய பாதுகாப்பு கூட்டத்தில் பேசிய திருவாட்டி ஹில்லரி, இந்த வட்டாரத்தின் அமைதி, வட கொரியாவின் நடத்தையில் ஏற்படும் அடிப்படை மாற்றங்களைப் பொறுத்தே உள்ளது என்று கூறினார்.
வட கொரியாவின் போக்கில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்தே கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ முடியும் என்றும் ஹில்லரி கூறினார்.

வட கொரியாவின் செயல்கள் இந்த வட்டார அமைதிக்கு மிரட்டலாக இருப்பது தெளிவாகத் தெரிவதால் வட கொரியாவுக்கு எதிராக ஆசிய நாடுகள் புதிய தடைகளை விதிக்க வேண்டும் என்றும் ஹில்லரி கேட்டுக்கொண்டார்.
அணுவாயுதத் திட்டத்தை கைவிடவும் தென் கொரியாவுடன் அமைதிப் போக்கை பின்பற்றவும் வட கொரியாவை ஊக்குவிக்க அந்நாட்டுக்கு எதிராக புதிய தடைகளை ஆசிய நாடுகள் விதிப்பது அவசியம் என்றும் அவர் கூறினார். அணுவாயுதத் திட்டத்தை கைவிடுவது தொடர்பில் 6 நாடுகள் பங்கேற்ற பேச்சுவார்த்தையிலிருந்து வட கொரியா அண்மையில் விலகிக் கொண்டது.

அத்துடன் தென் கொரியக் கப்பல் மூழ்கியதற்கு வட கொரியாவே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் தென் கொரியக் கப்பல் மூழ்கியதில் தங்களுக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று வட கொரிய அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் வட கொரியாவுக்கு எதிராக புதிய வர்த்தகத் தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. தென் கொரியக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பில் அத்தடைகள் விதிக்கப்படுவதாக ஹில்லரி அறிவித்தார்.

ஹில்லரி, ஆசிய கூட்டத்தில் உரையாற்றியபோது மியன்மார் ராணுவ ஆட்சியாளர்களையும் குறை கூறினார். மியன்மார் ஜனநாயகப் பாதையில் செல்லவும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தல் நியாயமாக நடைபெறவும் பக்கத்து நாடுகள் அதனை நெருக்க வேண்டும் என்றும் ஹில்லரி கேட்டுக்கொண்டார்.

மியன்மார் ஆட்சியாளர்கள் பின்பற்றும் ஒடுக்குமுறை குறித்து அமெரிக்கா கவலை அடைவதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் கைதிகளை விடுவிக்க மியன்மார் அரசு மறுத்து வருவது குறித்து அமெரிக்கா அதன் அதிருப்தியை தெரிவித்து வருகிறது.
உலகம் Fri, 23 Jul 2010 16:00:00 +0000 tamilmurasuweb 8594 at http://tamilmurasu.com.sg சீன வெள்ளத்தில் 700க்கும் மேற்பட்டோர் மரணம் http://tamilmurasu.com.sg/node/8573
பெய்ஜிங்
சீனாவில் இவ்வாண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 701 பேர் உயிரிழந்ததோடு, 347 பேரைக் காணவில்லை. அதோடு, பல பில்லியன் டாலர் சேதமும் ஏற்பட்டிருப்பதாக மூத்த சீன அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.

பத்தாண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளம் இவ்வாண்டு சீனாவைப் பாதித்திருக்கிறது.
சீன மாநிலங்களில் முக்கால்வாசி வெள்ளத்தால் பாதிப்படைந்தன.

அதோடு 25 ஆறுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்திருப்பதாக அரசாங்க வெள்ளத் தடுப்புப் பிரிவின் தலைமைச் செயலாளர் லியூ நிங் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மாண்டவர்கள், காணாமல் போனவர்கள் தவிர்த்து, 645,000 வீடுகள் வெள்ளத்தில் இடிந்து விழுந்தன. மொத்த சேத மதிப்பு 142.2 பில்லியன் யுவான் (S$28.7 பில்லியன்).

சென்ற 2000ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே ஆக அதிகமான புள்ளிவிவரங்கள் என்றார் திரு லியூ.
வெள்ள அபாயம் இன்னும் தீராததால், நிலைமை மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாங்சி ஆற்றோரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால், நீர்த்தேக்கங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து, நகரங்களுக்குள் வழிந்தோடியது. மலைச்சரிவுகளால் பல சமூகங்கள் தவித்தன.
- ஏஎப்பி
உலகம் Wed, 21 Jul 2010 23:33:54 +0000 tamilmurasuweb 8573 at http://tamilmurasu.com.sg