You are here

சிங்க‌ப்பூர்

உயிரைக் காத்த அதிகாரிக்குப் பாராட்டு

படம்: சிங்கப்பூர் ராணுவம்

சோமர்செட் எம்ஆர்டி நிலையத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உடல் அசைவில்லாமல் இருந்த ஒரு குழந்தைக்கு உதவி, அந்த ஆண் குழந்தையைக் காப்பாற்றிய சிங்கப்பூர் ஆயுதப்படை மருத்துவ அதிகாரி ஒருவருக்குப் பாராட்டு கடிதம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. சுவா செங் யான் என்ற அந்த அதிகாரி, பிப்ரவரி 13ஆம் தேதி ரயிலில் ஏறிச் செல்லவிருந்த நேரத்தில் மருத்துவ உதவி தேவை என்று பொது ஒலிப்பெருக்கியில் குரல் ஒலித்தது. உடனடியாக அவர் அந்த ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்தார். அங்கு அந்த நிலைய நிர்வாகி ஒரு குழந்தையைத் தூக்கிவந்தார்.

பூனைகளைக் காத்த நல்லுள்ளங்கள்: சங்கத்தின் $100 மதிப்புள்ள அன்பளிப்பு

சிங்கப்பூரில் பூனைகள் துன்புறுத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த போராடிய ஆறு பூனை காப்பாளர்களுக்கு நேற்று $100 மதிப்புள்ள அன்பளிப்புப் பொருள் வழங்கப்பட்டது. அவர்களில் ‘யீ‌ஷூன் 326 டாபி கேட்’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கிய திருவாட்டி ஜானட் சும்மும் ஒருவர். திருவாட்டி ஃபியோனா ஹோ, டாக்சி ஓட்டுநரான முகம்மது இலியாஸ் ஆகிய மற்றவர்களும் அந்தப் பரிசைப் பெற்றனர்.

6 வீவக கடைத்தொகுதிகளில் $48 மி. மேம்பாடு, வசதிகள்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஆறு கடைத்தொகுதிகள் $48 மில்லியன் செலவில் புதுப்பிக்கப் பட்டு இருக்கின்றன. சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் வகை யில் அந்தக் கடைத்தொகுதி களில் துடிப்புமிக்க பல புதிய அம்சங்கள், வசதிகள் ஏற்படுத்தப் பட்டு இருக்கின்றன. வீவக, 1990களின் தொடக்கத் தில் இருந்து கடைத்தொகுதிகளை கட்டிவருகிறது. அவை தீவு முழு வதும் பரவலாக அமைந்திருக்கின்றன.

கார் மீது லாரி மோதியது; 61 வயது ஆடவர் காயம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

குலிமார்ட் ரோட்டில் நேற்று அதி காலை நேரத்தில் 26 வயது ஆட வர் ஒருவர் குடிபோதையில் லாரியை ஓட்டிவந்து ஒரு கார் மீது மோதிவிட்டார். அந்தக் காரை ஓட்டிவந்த 61 வயது ஆடவர் காய மடைந்தார். சுயநினைவுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். கருப்புநிற கார், ஒரு லாரி, ஒரு மருத்துவ வாகனம், போலிஸ் வாகனங்கள் ஆகியவை சாலைப் பகுதியில் நின்றிருந்ததை காட்டும் ஒரு காணொளி தனக்கு அனுப்பப் பட்டதாக நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

போதைப்புழங்கிகள் எண்ணிக்கை சிங்கப்பூரில் கூடிவருகிறது

சிங்கப்பூரில் சோதனைச்சாவடிகளில் கைதுசெய்யப்பட்ட போதைப் புழங்கிகளின் எண்ணிக்கை பல ஆண்டு காலமாகவே அதிகரித்து வந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2012ல் 49 பேராக இருந்தது. சென்ற ஆண்டு 81 பேர் கைது செய்யப்பட்டனர். சாங்கி விமான நிலையம், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி போன்ற நாட்டு நுழைவாயில்களில் 2013ல் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின்போது போதைப்புழங்கிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் 47 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

பிரச்சினைகள் இருந்தாலும் இன்னமும் மாதச் சம்பள முறை

பிரச்சினைகள் பல இருந்தாலும் ஹெச்டிடி நிறுவனம் தொடர்ந்து டாக்சி ஓட்டிகளுக்கு நிலையான சம்பளத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. சில டாக்சி ஓட்டிகள் வசூலான தொகையுடன் ஓடி விட்டார்கள். சிலர் சரியாகச் செயல்படுவதில்லை. சிலர் தில்லு முல்லு செய்கிறார்கள். இருந்தாலும் கூட இந்த நிறுவனம் டாக்சி ஓட்டிகளுக்கு மாதாந்திர சம்பளத் திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்தி வரு கிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் டாக்சி ஓட்டு நர்களுக்கு மாதச் சம்பளம் தரும் ஒரே நிறுவனம் ஹெச்டிடி சிங்கப் பூர் டாக்சி நிறுவனம்தான்.

தேசிய நாள் அணிவகுப்பு: அமைச்சர் கலந்துரையாடல்

தேசிய நாள் அணிவகுப்பு 2017ன் முதலாவது முழு ஒத்திகை சனிக்கிழமை மரினா பே மிதவை மேடையில் நடந்தது. அந்த அணிவகுப்பில் கலந்து கொண்ட சிலரிடம் தற்காப்பு மூத்த துணை அமைச்சர் முகம்மது மாலிக்கி ஓஸ்மான் பேசினார். கடந்த இரண்டு மாத காலமாக கடும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ள அவர்களுக்கு அமைச் சர் நன்றி கூறினார். இந்த ஆண்டு தேசிய நாள் அணி வகுப்பு நல்ல காட்சியாக அமையும் என்றும் அதைக் காண தான் ஆவலாக இருப்பதாகவும் டாக்டர் மாலிக்கி குறிப்பிட்டார். “அணிவகுப்பில் கலந்து கொள்ளும் பலரும் மிகவும் ஊக்கத்துடன் இருக்கிறார்கள். நல்ல திறமைகளை அரங்கேற்ற அவர்கள் தயாராக இருக்கிறார் கள்.

சீனாவில் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம்

ஐந்து நாள் பயணமாக சீனா சென்றிருக்கும் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நேற்று டியான்ஜின் நகரத்தில் கட்டப் பட்டுள்ள டீ யீ ஜியா குழுமத்தின் உணவுத் தொழிற்சாலையின் இரண்டாம் கட்ட தொடக்க விழாவில் பங்கேற்றார். சிங்கப்பூர் - சீனா இரு அரசாங்கங்களும் இணைந்து மேற்கொள்ளும் மூன்று திட்டங்களில் டியான்ஜின் பசுமை நகரத் திட்டமும் ஒன்று. பெய்ஜிங்கிலிருந்து டியான் ஜின் நகரத்திற்கு நேற்று திரு தர்மன் அதிவிரைவு ரயிலில் சென்றார். இந்தப் பயணத்தின்போது பெய்ஜிங், டியான்ஜின், டாலியன் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் துணைப் பிரதமர், டாலியன் நடகரத்தில் நடைபெறவுள்ள உலக பொருளியல் ஆண்டு கலந்துரையாடலில் பங்கேற்பார்.

ரமலான்: பசி அகலும், நட்பு மலரும்

வில்சன் சைலஸ்

முஸ்லிம்கள் பலரும் உற்றார் உறவினர்களுடன் நோன்புப் பெருநாளை இன்று கொண்டாடும் வேளையில், சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டு ஊழியர்கள், தங்கும் விடுதியில் சமைத்து நண்பர்களுடன் அளவளாவி பெருநாள் பொழுதை மகிழ்ச்சியாகக் களிக்கின்றனர். அன்புக்குரியவர்கள் அருகில் இல்லாதது வருத்தமளித்தாலும் தொழில்நுட்பத்தின் உதவியால் பண்டிகை நாட்களை உற்சாகமாகக் கழிப்பதில் சிரமமில்லை என்பது ஊழியர்களின் கருத்து.

Pages