You are here

உல‌க‌ம்

சாண்டர்சை தாக்கிப் பேசிய ஹிலரி

சாண்டர்சை தாக்கிப் பேசிய ஹிலரி

சார்ல்ஸ்டன்: அமெ­ரிக்­கா­வின் ஜன­நா­யகக் கட்­சி­யைச் சேர்ந்த ஹிலரி கிளிண்டன், துப்­பாக்­கிக் கட்­டுப்­பாடு குறித்து மது முக்­கி­யப் போட்­டி­யா­ள­ரான பெர்னி சாண்டர்ஸ் அதிக முக்கியத்துவம் காட்­ட­வில்லை நேற்று சாடி­யுள்­ளார். அண்மை­யில் ஐயோவா, ஹேம்ப்­ஷயர் உள்­ளிட்ட மாநிலங் களில் நடத்­தப்­பட்ட தேர்தல் கருத்­துக்­க­ணிப்­பு­களில் ஹிலரி பின் தங்­கி­யி­ருந்ததை அடுத்து அவர் இவ்வாறு கருத்து தெரி­வித்­தார்.

காலணி வடிவில் 17 மீட்டர் உயரக் கண்ணாடி தேவாலயம்

காலணி வடிவில் 17 மீட்டர் உயரக் கண்ணாடி தேவாலயம்

அழகிய பெண்கள் காலணி வடிவில் ஒரு தேவாலயம் தென் தைவானில் உள்ள சியாயி என்ற ஊரில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் கண்கவர் நீல வண்ணக் கண்ணாடியால் 17 மீட்டர் உயரத்திற்குக் கட்டப்பட்டுள்ளது. 11 மீட்டர் அகலத்தில் இருக்கும் இந்த தேவாலயத்தைக் கட்ட 685,000 டாலர் செலவிடப்பட்டது. இந்த தேவாலயம் அடுத்த மாதம் சந்திரப் புத்தாண்டுக்கு முன்பு திறக்கப்படும் என்று அந்த ஊர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோலாலம்பூர் நூலகத்தில் தீ

கோலாலம்பூர் நூலகத்தில் தீ

பெட்­­­டா­­­லிங் ஜெயா: கோலா­­­லம்­­­பூர் நூல­­­கத்­­­தில் நேற்று காலையில் தீவி­­­பத்து ஏற்­­­பட்­­­டதைத் தீயணைப்பு, மீட்புத் துறை இயக்­­­கு­­­நர் அஸிசான் இஸ்­­­மா­­­யில் உறுதி செய்தார். டாட்டரான் மெர்­­­டே­­­கா­­­வில் இந்த நூலகம் அமைந்­­­துள்­­­ளது. இந்தத் தீவி­­­பத்­­­தால் எந்த உயி­­­ரி­­­ழப்­­­பும் இல்லை என்று தெரி­­­விக்­­­ கப்­­­பட்­­­டது. காலை மணி சுமார் 10.18 க்கு ஓர் அவசர அழைப்பு வந்த­­­தாக தீயணைப்பு, மீட்புத் துறையின் தலைமை தளபதி அம்டான் மஹாட் தெரி­­­வித்­­­தார். அடுத்த ஏழாவது நிமி­­­டத்­­­தில் மீட்புக் குழு சம்பவ இடத்தை அடைந்தது.

ஒபாமா: பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்துலக ஒத்துழைப்பு தேவை

அமெரிக்க அதிபர் ஒபாமா

வா‌ஷிங்டன்: உலகம் முழுவதும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை துடைத்தொழிக்க அனைத்துலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் ஐஎஸ் அமைப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கையைத் தொடரும்படி திரு ஒபாமா தேசிய பாதுகாப்பு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

‘கோலாலம்பூர் பாதுகாப்பானதே’

கோலாலம்பூர் தலைமை போலிஸ் ஆணையாளர் தாஜுடின் முகம்மது இசா

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் பல இடங்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல்கள் வெளிவந்தபோதிலும் மக்கள் தங்களின் வழக்கமான பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்படி போலிசார் ஆலோசனை கூறியுள்ளனர். பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் கோலாலம்பூர் மாநகரம் பாதுகாப்பான இடம்தான் என்று கோலாலம்பூர் தலைமை போலிஸ் ஆணையாளர் தாஜுடின் முகம்மது இசா தெரிவித்தார்.

புதிய அத்தியாயத்தை தொடங்கியது ஈரான்

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி வியன்னாவில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவாத் ஸரீஃப்

டெஹ்ரான்: ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளியல் தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து உலக நாடுகளுட னான ஈரான் உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்று ஈரானிய அதிபர் ஹசன் ரெளஹானி கூறியுள்ளார். ஈரானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இதைத் தெரிவித்தார். ஈரான் அதன் அணுசக்தி செயல்பாடுகளை மட்டுப் படுத்தியுள்ளது என்பதை அனைத்துலக அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு உறுதிசெய்த பிறகு ஈரான் மீது விதிக் கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன.

தைவான் வரலாற்றில் முதல் பெண் அதிபர்

ஜனநாயக முன்னேற்றக் கட்சியின் ஆதரவாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

தைவான் வரலாற்றில் முதல் பெண் அதிபர் தைப்பே: தைவானில் எதிர்க்கட்சி வேட்பாளர் சாய் இங் வென் அந்நாட்டின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். தைவானில் நேற்று நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் திருவாட்டி சாய், வாக்குகள் எண்ணப் பட்டபோதே கிட்டத்தட்ட 6 மில்லியன் வாக்கு வித்தியாசத் தில் முன்னிலையில் இருந்தார். ஆளும் கட்சித் தலைவர் எரிக் சூ தோல்வியை ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவுடன் உடன்பாடு காண வடகொரியா விருப்பம்

சோல்: அமெரிக்காவுடன் அமைதி உடன்பாடு காண விரும்புவதாக வடகொரியா மீண்டும் தெரிவித் துள்ளது. அத்துடன் தென்கொரி யாவும் அமெரிக்காவும் சேர்ந்து மேற்கொள்ளும் ராணுவப் பயிற்சி நிறுத்தப்பட வேண்டும் என்றும் வடகொரியா வலியுறுத்தியுள்ளது. வடகொரியா அதன் அணுவாயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்றால் மேலே குறிப்பிட்ட அதன் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

பர்கினா ஃபாசோ தாக்குதலில் 23 பேர் பலி

குவாகாடோகு: மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா ஃபாசோவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 23 பேர் பலியான தாகவும் 15 பேர் காயமடைந்த தாகவும் ஒரு மருத்துவமனையின் தலைவர் கூறினார். அந்த ஹோட்டலில் இருந்த பலரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத் திருந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் அந்த ஹோட்டலை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

ஜகார்த்தாவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதல் களில் எழுவர் மாண்டனர்; 19 பேர் காயமடைந்தனர். மாண்டோரில் தற்கொலைப் படை யினர் இருவர் உட்பட ஐந்து பயங்கர வாதிகளும் அடங்குவர். மற்ற இருவரில் ஒருவர் போலிஸ் அதிகாரி; இன்னொருவர் கனடாவைச் சேர்ந்தவர்.

Pages