You are here

உல‌க‌ம்

ஜப்பானை உலுக்கிய 6.7 ரிக்டர் நிலநடுக்கம்

ஜப்பானின் ஹொக்கைடோ

தோக்கியோ: ஜப்பானின் ஹொக்கைடோவுக்கு அருகில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்- பட் டது என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் நேற்று தெரி- வித் துள் ளது. எனினும், ‌ஷிசுனை நகருக்குத் தென் கிழக் கில் 51 கிலோ மீட்டர் தொலைவில் ஏற் பட்ட அந்த நில நடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. ஜப்பானியத் தலைநகர் தோக்கி யோவுக்கு வடக்கில் 750 கிலோ மீட்டர் தொலைவில் வடக்குக் கடற்கரையில் நேற்று சிங்கப்பூர் நேரப்படி முற்பகல் 11.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலைப் பிரிவு தெரிவித்தது.

பயங்கரவாதம்: மலேசியாவில் உச்சகட்டப் பாதுகாப்பு

மலேசிய போலிஸ் உயர் அதிகாரி காலிட் அபு பக்கர்

கோலாலம்பூர்: கடந்த சில மாதங் களில் பல பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள், ஜகார்த்தாவில் அண்மையில் நடந்து உள்ள பயங்கரவாதத் தாக்குதல் ஆகிய வற்றை அடுத்து, மலேசியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் உச்ச கட்டத்தை எட்டியுள்ளன என்று மலேசிய போலிஸ் உயர் அதிகாரி காலிட் அபு பக்கர் தெரிவித்து உள்ளார். ஜகர்த்தாவில் நடந்ததைப் போன்ற தாக்குதல் மலேசியாவில் நடக்காமல் தடுக்க பல்வேறு தற்காப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ள தாகக் கூறினார் காலிட் அபு பக்கர்.

“வணிக வளாகங்கள், கடைத் தொகுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப் பட்டுள்ளன,” என்றும் அவர் கூறினார்.

‘வடகொரியாவின் சோதனைக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்’

தென்கொரிய அதிபர் பார்க் கியுன்- ஹை

சோல்: வடகொரியவின் அணு ஆயுத பரிசோதனைக்கு அனைத்துலக நாடுகள், குறிப்பாக சீனா சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று தென்கொரிய அதிபர் பார்க் கியுன்- ஹை கோரிக்கை விடுத்துள்ளார். பல்லாயிரம் உயிர்களை ஒரே நேரத்தில் அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ஹைட்ரஜன் குண்டை கடந்த 6 ஆம் தேதி வடகொரியா சோதனை செய்தது. அத்துடன் வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை மேலும் விரிவுப்படுத்துவோம் என வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அறிவித்திருந்தார்.

போலியோ தடுப்பு நிலையத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் 15 பேர் பலி

போலியோ தடுப்பு நிலையத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் 15 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி நிலையத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவெட்டா நகரில் அரசாங்கம் நடத்தி வரும் போலியோ தடுப்பூசி மருந்தகத்திற்கு அருகே நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக போலிசார் கூறினர்.

குண்டு வெடிப்பில் உயிரிழந்த வர்களில் பெரும்பாலானோர் அந்த மருந்தகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலி சாரும் சுகாதாரப் பணியாளர் களும் ஆவர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் இவர் களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனைத் தகவல்கள் கூறின.

அரசியலை சீர்செய்யுங்கள் - அதிபர் ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா

வா‌ஷிங்டன்: அமெரிக்க அரசியல் கட்சி அடிப்படையில் பிளவுபட்டு இருக்கும் நிலையில் அதைச் சீர்செய்ய வேண்டும் என்று அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு ஆற்றிய கடைசி உரையில் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க அரசியலில் உள்ள பிளவு அதிபர் ஒபாமாவின் பதவிக் காலத்தில் அதிகரித்துள்ள வேளை யில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கியில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி

அங்காரா: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான வட்டாரப் பகுதியில் நேற்று குண்டு வெடித்ததில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்குள்ள புகழ்பெற்ற ஒரு பள்ளிவாசலுக்கு அருகே உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுல்டானாமெட் வட்டாரத்தில் குண்டு வெடித்ததாக இஸ்தான்புல் நகர ஆளுநர் கூறினார்.

சிரியா: அவசரமாக 400 பேர் வெளியேற்றம்

நியூயார்க்: சிரியாவில் போராளிகள் வசம் உள்ள மடாயா நகரில் வசிக்கும் மக்கள் பசி, பட்டினியால் வாடும் வேளையில் பலருக்கு மருத்துவ சிகிச்சை உடனடியாகத் தேவைப்படுவதால் சுமார் 400 பேர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும் என்று ஐநா தூதர்கள் தெரிவித்துள்ளனர். உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகள் மடாயா நகரைச் சென்றுசேர்ந்துள்ள நிலையில் பலருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க தளவாடங்கள்

சோல்: தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பதற்றம் நிலவும் வேளையில் தென்கொரியாவுக்கு கூடுதலாக அமெரிக்க விமானங்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் அனுப்பு வது குறித்து தென்கொரியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வடகொரியா சென்ற வாரம் சோதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா அதன் நட்பு நாடான தென்கொரியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பி=52 ரக போர் விமானத்தை தென்கொரியாவுக்கு உயரே பறக்கவிட்டது.

புதர் தீயை அணைக்க போராடும் தீயணைப்பாளர்கள்

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் பற்றி எரியும் புதர் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் பரவும் புதர் தீயை அணைக்க போராடும் தீயணைப்பாளர்களுக்கு தற்போது நிலவும் சாதகமான பருவநிலை கைகொடுத்துள்ளது. அப்பகுதியில் குளுமையான தட்பவெப்ப நிலை காணப்படுவதாலும் மிதமான தென்றல் காற்று வீசுவதாலும் தீயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று தீயணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐவரை விடுவிக்கக் கோரி ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்

ஹாங்காங்கில் போராட்டம்

ஹாங்காங்: சீன அரசாங்கத்தை விமர்சித்து புத்தகங்களை வெளியிட்ட ஒரு பதிப்பகத்தின் ஐந்து பேர் காணாமல் போனதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டம் நடைபெறுகிறது. நேற்று நடந்த ஆர்ப்பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஹாங்காங்கில் உள்ள சீன அரசாங்கப் பிரதிநிதியின் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

Pages