You are here

உல‌க‌ம்

கியூபாவில் ஒபாமா

அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமாவும் கியூபாவின் அதிபர் ரால் காஸ்ஸ்ட்ரோவும் ராணுவ மரியாதை அணிவகுப்பைப் பார்வையிடுகின்றனர். ஏஎஃப்பி

ஹவானா: கியூபாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வருகை புரிந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேசவுள்ளார். இரு தலைவர்களும் வர்த்த கம், அரசியல் சீர் திருத்தம் குறித்து முக்கியமாக விவாதிப் பார்கள் என்று தெரிகிறது. ஆனால் பதவி ஓய்வு பெற்ற கியூபா முன்னாள் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவை திரு ஒபாமா சந்திக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. திரு ஒபாமா, தன் மனைவியுடனும் இரு மகள் களுடனும் கியூபா வந்துள்ளார். அவர்களை கியூபா நாட்டு வெளியுறவு அமைச்சர் வரவேற்றார்.

ஸ்பெயின் விபத்தில் 14 பேர் பலி

ஸ்பெயின் விபத்தில் 14 பேர் பலி

பார்சிலோனா: ஸ்பெயினில் வெளிநாட்டு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் காயம் அடைந்தனர் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நிகழ்ந்த விபத்தில் ஐரோப்பிய பரிமாற்றத் திட் டத்தின் கீழ் பார்சிலோனா பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவர்கள் விபத்தில் சிக்கியதாக கேடாலோனியா வட்டார உள்துறை விவகாரங் களுக்கான தலைவர் ஜோர்டி ஜேன் சொன்னார். பார்சிலோனாவுக்கு தெற்கே 150 கி. மீட்டர் தொலைவில் ஃபிரெகினல்ஸ் என்ற சிறு நகரில் விபத்து நிகழ்ந்தது.

கவிழ்ந்து கிடக்கும் பேருந்து. படம்: இபிஏ

செய்தியாளர்களுக்கு வீட்டைக் காட்டிய பினாங்கு முதல்வர்

 பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், செய்தியாளர்களுக்கு வீட்டை சுற்றிக் காண்பித்தார்.

ஜார்ஜ் டவுன்: பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், சச்சரவில் சிக்கி யிருக்-கும் தனது 2.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வீட்டை நேற்று செய்தியாளர்-களுக்கு சுற்றிக் காட் டினார். ஜாலான் பின்-ஹோர்னில் 4,000 சதுர அடி பரப்பளவில் கட்டப் பட்டுள்ள அந்த பங்களாவுக்குள் நுழைய சுமார் 30 செய்தியாளர் களுக்கு அனுமதி வழங்கப் பட்டது. வீட்டின் வரவேற்பு அறை, உணவு அறை, சமையல் அறை உட்பட பல இடங்கள் செய்தியாளர் களுக்கு காண்பிக்கப்பட்டது. சந்தை விலையைவிட குறைவான விலைக்கு அந்தப் பங்களாவை லிம் குவான் எங் வாங்கியிருப்பதாக அம்னோ குற்றம் சாட்டியதால் பிரச்சினை வெடித்தது.

பாரிசில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் சிக்கினான்

அதிரடிச் சோதனை மேற்கொண்ட பெல்ஜிய காவல் துறையினர், அப்துசலாமின் காலில் சுட்டு பிடித்தனர்.  ஏஎஃப்பி

பாரிசில் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் சிக்கினான் புருகெஸ்: பாரிஸ் நகரில் பயங்கர வாதத் தாக்குதலை நடத்தி தலை மறைவாக இருந்த சாலா அப்து சலாம், தன்னைத்தானே வெடிக்கச் செய்யவும் திட்டமிட்டிருந்தான் என்ற விவரம் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் அவன் கடைசி நேரத் தில் மனதை மாற்றிக் கொண்டான். சென்ற வெள்ளிக்கிழமை அன்று புருஸ்ஸல்ஸ் நகரில் அதி ரடிச் சோதனை நடத்திய காவல் துறையினர், அப்டிஸ்லாமின் காலில் சுட்டுப் பிடித்தனர்.

இரு ஏவுகணைகளை சோதித்தது வடகொரியா

வா‌ஷிங்டன்: அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு மற்றும் அணுவாயுதத்தை ஏந்திச்செல் லும் ஆற்றல் கொண்ட இரு ஏவுகணைகளை வடகொரியா நேற்று சோதனை செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்விரு ஏவுகணைகளும் கிழக்கு கடலோரப் பகுதி யிலிருந்து செலுத்தப்பட்டதாக வும் அந்த ஏவுகணைகள் கடலில் விழுவதற்கு முன்பு சுமார் 800 கி.மீட்டர் வரை சென்றதாகவும் அமெரிக்காவும் தென்கொரியா வும் தெரிவித்துள்ளன. வடகொரியா மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்த ஒரு சில நாட்களில் அந்நாடு மீண்டும் இத்தகைய ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது.

பிரேசிலில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

பிரேசிலில் அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் அதிபருக்கு எதிராக கடந்த சில நாட்களாகவே ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. பிரேசில் அதிபர் டில்மா ருசெஃப் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக் கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்கு முன்பு திரண்டனர். பல்வேறு ஊழல் விவகாரங்களில் திருமதி டில்மா சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக் காரர்கள் வலியுறுத்தினர்.

மியன்மாரில் புதிய அமைச்சரவை

தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவி ஆங் சான் சூ சி

யங்கூன்: மியன்மார் புதிய அமைச்சரவையில் 18 அமைச்சர்களே இருப்பர் என்றும் மியன்மார் அரசாங்கம் 21 அமைச்சுகளைக் கொண்டிருக்கும் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை தற்போது இருப்பதைவிடக் குறைவு என்று அவர் சொன்னார். தற்போது 36 அமைச்சுகள் உள்ளன. சுமார் 20 அமைச்சர்கள் உள்ளனர்.

குடியேறிகள் பிரச்சினை: துருக்கியுடன் உடன்பாடு காண பிரசல்ஸில் பேச்சு

துருக்கிக்கு திருப்பி அனுப்பப்பட்ட பாகிஸ்தானிய குடியேறிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி

பிரசல்ஸ்: குடியேறிகள் பிரச்சினைக்குத் தீர்வு காண துருக்கி யுடன் உடன்பாடு காண்பது குறித்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் பிரசல்ஸில் பேச்சு தொடங்கி யுள்ளனர். ஐரோப்பிய நாடுகளை நாடி வரும் குடியேறிகள் மற்றும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து துருக்கியுடன் பேச்சு நடத்தி வருகின்றன. இருப்பினும் இது தொடர்பாக உடன்பாடு காண்பதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது. குடியேறிகளை ஏற்பதற்கு துருக்கி சில நிபந் தனைகளை முன்வைத்துள்ளது.

மாணவரை விடுவிக்க அமெரிக்கா வலியுறுத்தல்

மாணவரை விடுவிக்க அமெரிக்கா வலியுறுத்தல்

வா‌ஷிங்டன்: வடகொரியாவில் 15 ஆண்டு கடுங்காவல் விதிக் கப்பட்டுள்ள அமெரிக்க மாணவர் ஒட்டோ வாம்பியரை உடனடியாக விடுவிக்குமாறு வடகொரியாவை அமெரிக்கா கேட்டுக்கொண் டுள்ளது. அந்த மாணவருக்கு சிறப்பு பொது மன்னிப்பு வழங்கி அவரை உடனடியாக விடுவிக்குமாறு வடகொரிய அரசாங்கத்தை அமெரிக்கா வலுவாக ஊக்கு விக்கிறது என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜோஸ் எர்னெஸ்ட் கூறினார்.

பாகிஸ்தான்: அரசாங்க ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் குண்டுவெடித்து 15 பேர் பலி

 வெடிகுண்டு தாக்குதலால் உருக்குலைந்து கிடக்கும் பேருந்து.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நேற்று அரசுப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் குண்டு வெடித்ததில் 15 பேர் மாண்டனர்; 25 பேர் காயமடைந்தனர். மர்டான் நகரிலிருந்து தலை மைச் செயலக ஊழியர்கள் பெஷா வருக்கு வந்தபோது இச்சம்பவம் அரங்கேறியது. அந்தப் பேருந்தின் பின்புறம் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகச் சொன் னார் போலிஸ் கண்காணிப்பாளர் முகம்மது கா‌ஷிஃப். இரவு நேரத்தில் அந்தப் பேருந்து அங்குள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப் படுவது வழக்கம் என்றும் காலை தொழுகைக்குப் பின் அது இயக் கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டது.

Pages