உல‌க‌ம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) அன்று தமது தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் மீது முழு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். ஆனால், அவருக்கு பெருஞ்சுரப்பி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறித்து தமக்கு தெரிவிக்காமல் இருந்தது தவறுதான் என்று கூறியுள்ளார்.
கீவ்: பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் புதிய பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடவும், ஆளில்லா வானூர்திகளை வாங்க உக்ரேனுக்கு ராணுவ நிதியுதவியை அதிகரிக்கவும் ஜனவரி 12ஆம் தேதி கீவ் சென்றார்.
வாஷிங்டன்: அமெரிக்காவின் மத்திய விமானத்துறை நிர்வாகம் போயிங் 737 ‘மேக்ஸ் 9’ ரக விமானங்கள் பறப்பதற்கு விதித்துள்ள தடையை நீட்டித்துள்ளது.
சோல்: தென்கொரியாவில் உள்ள தனது வேவு அதிகாரிகளுக்குக் குறிமுறை மூலம் செய்திகளை அனுப்பும் வானொலி நிலையம் ஒன்றின் செயல்பாட்டை வடகொரியா நிறுத்தியுள்ளது.
நியூயார்க்: செங்கடல் வட்டாரத்தில் கொந்தளிப்பான சூழ்நிலையை இன்னும் சூடாக்க வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் மன்றத்தின் தலைமைச் செயலாளர் அன்டனியோ குட்டரஸ் எல்லாத் தரப்புகளையும் கேட்டுக்கொண்டு உள்ளார்.