You are here

உல‌க‌ம்

போலியோ தடுப்பு நிலையத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் 15 பேர் பலி

போலியோ தடுப்பு நிலையத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் 15 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலியோ தடுப்பூசி நிலையத்திற்கு அருகே குண்டு வெடித்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவெட்டா நகரில் அரசாங்கம் நடத்தி வரும் போலியோ தடுப்பூசி மருந்தகத்திற்கு அருகே நேற்று சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக போலிசார் கூறினர்.

குண்டு வெடிப்பில் உயிரிழந்த வர்களில் பெரும்பாலானோர் அந்த மருந்தகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலி சாரும் சுகாதாரப் பணியாளர் களும் ஆவர். இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் இவர் களில் பலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனைத் தகவல்கள் கூறின.

அரசியலை சீர்செய்யுங்கள் - அதிபர் ஒபாமா

அமெரிக்க அதிபர் ஒபாமா

வா‌ஷிங்டன்: அமெரிக்க அரசியல் கட்சி அடிப்படையில் பிளவுபட்டு இருக்கும் நிலையில் அதைச் சீர்செய்ய வேண்டும் என்று அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு ஆற்றிய கடைசி உரையில் கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்க அரசியலில் உள்ள பிளவு அதிபர் ஒபாமாவின் பதவிக் காலத்தில் அதிகரித்துள்ள வேளை யில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

துருக்கியில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி

அங்காரா: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரபலமான வட்டாரப் பகுதியில் நேற்று குண்டு வெடித்ததில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்குள்ள புகழ்பெற்ற ஒரு பள்ளிவாசலுக்கு அருகே உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுல்டானாமெட் வட்டாரத்தில் குண்டு வெடித்ததாக இஸ்தான்புல் நகர ஆளுநர் கூறினார்.

சிரியா: அவசரமாக 400 பேர் வெளியேற்றம்

நியூயார்க்: சிரியாவில் போராளிகள் வசம் உள்ள மடாயா நகரில் வசிக்கும் மக்கள் பசி, பட்டினியால் வாடும் வேளையில் பலருக்கு மருத்துவ சிகிச்சை உடனடியாகத் தேவைப்படுவதால் சுமார் 400 பேர் அங்கிருந்து அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும் என்று ஐநா தூதர்கள் தெரிவித்துள்ளனர். உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உதவ உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு சென்ற லாரிகள் மடாயா நகரைச் சென்றுசேர்ந்துள்ள நிலையில் பலருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமெரிக்க தளவாடங்கள்

சோல்: தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பதற்றம் நிலவும் வேளையில் தென்கொரியாவுக்கு கூடுதலாக அமெரிக்க விமானங்களையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் அனுப்பு வது குறித்து தென்கொரியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

சக்திவாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வடகொரியா சென்ற வாரம் சோதித்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா அதன் நட்பு நாடான தென்கொரியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பி=52 ரக போர் விமானத்தை தென்கொரியாவுக்கு உயரே பறக்கவிட்டது.

புதர் தீயை அணைக்க போராடும் தீயணைப்பாளர்கள்

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரிலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் பற்றி எரியும் புதர் தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். மேற்கு ஆஸ்திரேலியாவில் பரவும் புதர் தீயை அணைக்க போராடும் தீயணைப்பாளர்களுக்கு தற்போது நிலவும் சாதகமான பருவநிலை கைகொடுத்துள்ளது. அப்பகுதியில் குளுமையான தட்பவெப்ப நிலை காணப்படுவதாலும் மிதமான தென்றல் காற்று வீசுவதாலும் தீயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று தீயணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐவரை விடுவிக்கக் கோரி ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டம்

ஹாங்காங்கில் போராட்டம்

ஹாங்காங்: சீன அரசாங்கத்தை விமர்சித்து புத்தகங்களை வெளியிட்ட ஒரு பதிப்பகத்தின் ஐந்து பேர் காணாமல் போனதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங்கில் போராட்டம் நடைபெறுகிறது. நேற்று நடந்த ஆர்ப்பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் ஹாங்காங்கில் உள்ள சீன அரசாங்கப் பிரதிநிதியின் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

ஜெர்மன்: ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ஜெர்மன் போலிசார் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

ஜெர்மனி

ஜெர்மனியின் கொலோன் நகரில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் மீது ஒரு கும்பல் நடத்திய பாலியல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நகரில் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது கூட்டத்தினரைக் கலைக்க போலிசார் முயன்றபோது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போலிசார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களையும் பட்டாசு வெடிகளையும் வீசியதாகவும் பதிலுக்கு கூட்டத்தினர் மீது போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளையும் பட்டாசு வெடிகளையும் வீசியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

சீனாவில் மருத்துவர், நோயாளியுடன் மருத்துவமனை இடிக்கப்பட்டது

பெய்ஜிங்: சீனாவில் மருத்துவர் களுடனும் நோயாளியுடனும் மருத்துவமனையின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இதனால் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த பல உடல்கள் புதைக்கப்பட்டன என்று சீனா வின் அதிகாரபூர்வ ஊடகமான ‘சிசிடிவி’ தெரிவித்தது. வியாழக்கிழமை அன்று ஹெ னான் மாநிலத்தின் ஹுயூஜியில் உள்ள ஷெங்ஷோவ் பல்கலைக் கழக மருத்துவமனையின் ஒரு பகுதி இடித்துத் தள்ளப்பட்டதாக அது கூறியது.

போதைப் பொருள் கடத்தல் மன்னன் ‘எல் சாப்போ’ மீண்டும் சிக்கினான்

 ‘எல் சாப்போ’

மெக்சிகோ நகரம்: போதைப் பொருள் கடத்தல் மன்னன் ‘எல் சாப்போ’ குஸ்மான் மீண்டும் சிக்கியிருக்கிறான். ஹோட்டலில் பதுங்கியிருந்த அவனை கடற்படை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். “குஸ்மான் கைது செய்யப் பட்டான்,” என்று மெக்சிகோ அதிபர் என்ரிக் பெனா நியடோ அறிவித்தார். “அவனைப் பிடிப்பதற்காக தீட்டப்பட்ட செயல்திட்டம் வெற்றி கரமாக நிறைவேறியது,” என்றும் அவர் சொன்னார்.

Pages