You are here

உல‌க‌ம்

பிரெஞ்சு பிரதமர்: ஐஎஸ் தோற்கடிக்கப்படும் வரை அவசரநிலை நீடிக்கும்

பிரெஞ்சுப் பிரதமர் மெனுவல் வேல்ஸ்

பாரிஸ்: ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டம் வெற்றி பெற்று ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்படும் வரை பிரான்சில் அவசரநிலை தொடர்ந்து நடப்பில் இருக்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் மெனுவல் வேல்ஸ் கூறியுள்ளார். கடந்த நவம்பர் 13ஆம் தேதி ஐஎஸ் போராளிகள் பாரிஸ் நகரில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவை மிரட்டும் கடும் பனிப்புயல்

நியூயார்க்: அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதி களில் கடுமையான பனிப்புயல் தாக்கும் என எச்சரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அச்சம் அடைந் துள்ளதாக தகவல்கள் கூறின. மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பனிப்புயல் வீசக்கூடும் என்பதால் சாலைகளில் இரண்டு அடி உயரத்திற்கு உறைபனி மூடலாம் எனவும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

42 மில்லியன் ரிங்கிட் விவகாரம்: நஜிப் மறுப்பு

திரு நஜிப்

கோலாலம்பூர்: 1எம்டிபி நிறு வனத்தின் துணை நிறுவனம் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து 42 மில்லி யன் ரிங்கிட் தொகை தமது சொந்த வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதை பிரதமர் நஜிப் ரசாக் மறுத் திருப்பதாக அவரின் வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியோங் சிக்கிற்கு எதிராக திரு நஜிப் தொடுத்த அவதூறு வழக்கு தொடர்பில் அவர் அளித்த வாக்குமூலத்தில் அந்த நிதியை பெற்றுக்கொண்டதை அவர் ஒப்புக்கொண்டதாகக் கூறப் படுகிறது. ஆனால், 42 மி.

முக்ரிஸ் நீக்கப்பட்டால் அம்னோ பிளவுபடும்

 கெடா மாநில முதலமைச்சர் முக்ரிஸ்

கோலாலம்பூர்: கெடா மாநில முதலமைச்சர் முக்ரிஸ் மகாதீரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கெடா கட்சித் தலைவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டால் அம்னோ கட்சி மிகப் பெரிய பிளவை எதிர் நோக்கும் என்று அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் எச்சரித்துள்ளார்.

லிட்வினென்கோ கொலை: அநேகமாக புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம்

 லிட்வினென்கோ. படம்:(கோப்புப் படம்) நியூயார்க் டைம்ஸ்

லிட்வினென்கோ கொலை: அநேகமாக புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம் லண்டன்: ரஷ்ய முன்னாள் உளவுத் துறை அதிகாரி அலெக்சாண்டர் லிட்வினென் கோவை 2006ஆம் ஆண்டு கொலை செய்வதற்கு அநேகமாக ரஷ்ய அதிபர் புட்டின் ஒப்புதல் அளித்திருக்கலாம் என்று விசாரணைக் குழு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. திரு புட்டினை கடுமையாகக் குறை கூறிவந்த லிட்வினென்கோ அவரது 43 வயதில் ரஷ்ய உளவுத் துறையினரால் லண்ட னில் கொலை செய்யப்பட்டார். லண்டன் ஹோட்டலில் லிட்வினென்கோ தங்கியிருந்த போது விஷம் கலந்த தேநீரைக் குடித்த மூன்று வாரங்களுக்குப் பின்னர் அவர் மரணம் அடைந்தார்.

பத்துமலையில் தீவிர பாதுகாப்பு

படம்: த நியூஸ்ட்ரெய்ட்ஸ்டைம்ஸ் டுவிட்டர்

வரும் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. “எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் போதுமானதற்கும் அதிகமான போலிசார் அங்கு குவிக்கப்பட்டுள் ளனர்,” என்று சிலாங்கூர் போலிஸ் தலைவர் அப்துல் சமா மட் தெரிவித்தார். இதுவரை மிரட்டல் எதுவும் வரவில்லை என்றாலும் போலிஸ் அப்பகுதியில் அதிக கவனம் செலுத்தும் என்று திரு அப்துல் செய்தியாளர்களிடம் கூறினார்.

முக்ரிஸை வெளியேற்ற கெடா அம்னோ முயற்சி

அலோர் ஸ்டார்: கெடா மாநில முதலமைச்சர் முக் ரிஸ் மகாதீரின் தலைமைத்துவத்தில் தாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அம்மாநில அம்னோ தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். கெடா மாநில தலைமைத்து வத்தில் மாற்றம் செய்யக் கோரி அனைத்து அம்னோ பிரிவு தலைவர்களும் பிரதமர் நஜிப் ரசாக்கிடம் கேட்டுக் கொண் டிருப்பதாக கெடா அம்னோ துணைத் தலைவர் அகமட் பாஷா, செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.

பயங்கரவாத சட்டத்தில் மாற்றம்; அதிபர் விடோடோ விருப்பம்

ஜகார்த்தா: பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கேட்டுக்கொண்டுள்ளார். இந்தோனீசியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள சந்தேகப் பேர்வழிகளை அதிகாரிகள் சுலபமாக கைது செய்தற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங் கள் வழிவகுக்கும் என்றும் அவர் சொன்னார். ஜகார்த்தாவில் சென்ற வாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை கருத்தில் கொண்டு பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம் என்று திரு விடோடோ கூறியுள்ளார்.

பாகிஸ்தான் பல்கலையில் பயங்கரவாதத் தாக்குதல்; 21 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நேற்று திடீரென நுழைந்து பயங்கரவாதி கள் நடத்திய தாக்குதலில் மாண வர்கள் உட்பட குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர்; 30க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். 2014 டிசம்பரில் பெஷாவரில் உள்ள ராணுவப் பள்ளியில் புகுந்து 134 மாணவர்களைக் கண்மூடித் தனமாக சுட்டுக்கொன்ற தெஹ்ரீக்- =இ-=தலிபான் அமைப்பே இந்தத் தாக்குதலுக்கும் பொறுப்பேற்று இருக்கிறது.

உலகிலேயே ஆக வயதான 112 வயது முதியவர் ஜப்பானில் மரணம்

தோக்கியோ: உலகிலேயே ஆக வயதான முதியவர் தமது 112வது வயதில் மரணம் அடைந்ததாக அதிகாரிகள் கூறினர். யாசுடாரோ கோய்டி என்ற அந்த ஜப்பானியர் 1903 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவர். உலகிலேயே ஆக வயதான முதியவர் என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர்.

கின்னஸ் சாதனை விருதைப் பெற்றுக்கொண்டபோது அந்த முதியவர் தமது நீண்ட கால ஆயுளுக்கான ரகசியம் பற்றிக் கூறினார். “சிகரெட் புகைக்கும் பழக்கம் இல்லை. மதுபானம் எதுவும் அருந்துவதில்லை. மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன். இவைதான் எனது நீண்ட கால ஆயுளின் ரகசியங்கள்,” என்று யாசுடாரோ அப்போது கூறினாராம்.

Pages