சிங்க‌ப்பூர்

tm logo
Sunday, April 15th, 2012
சிங்கப்பூர் டிஸ்லெக்சியா சங்கம் தனது முதல் கல்வி மையத்தை தெமபனிஸில் நேற்று திறந்தது.
இங்கு கல்வியில் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்கள் மதிப் பீடு செய்யப்படுகின்றனர்.
அத்துடன், பாலர் பள்ளிக் கல்விப் பாடங்களையும், கல்விப் பயிற்சித் திட்டங்களையும் இந்த மையம் வழங்குகிறது.

விவரம்: அச்சுப் பிரதியில்
tm logo
Sunday, April 15th, 2012
சிங்கப்பூரின் கிழக்கு-மேற்கு ரயில் சேவையில் நேற்று வெள்ளிக்கிழமை 40 நிமிட தாமதம் ஏற்பட்டது. இதற்கு அந்தத் தடத்தில் தெம்பனிஸ், சிமே நிலையங் களில் ஏற்பட்ட ரயில் தடங் கலே காரணம் என்று கூறப் படுகிறது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரயில் சேவையில் ஏற் பட்ட மந்தத் தடங்கலால் பாசிர் ரிஸ், தானா மேரா நிலையங்களுக்கு இடையி லான ரயில் சேவையில் 30 நிமிட தாமதம் ஏற்பட்டது.
இதனால், சிட்டி ஹால், பாசிர் ரிஸ் நிலையங்களுக்கு இடையி லான கிழக்கே போகும் ரயில் சேவையிலும் கிட்டத்தட்ட 40 நிமிட தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விவரம்: அச்சுப் பிரதியில்
tm logo
Friday, May 18th, 2012

இவ்வாண்டின் முதல் கால் ஆண்டில், ஆண்டு அடிப்படை யில் சிங்கப்பூரின் மொத்த உள் நாட்டு உற்பத்தி 1.6 விழுக் காடு வளர்ச்சி கண்டுள்ளது. முந்தைய காலாண்டில் இது 3.6 விழுக்காடாக இருந்தது.
காலாண்டு அடிப்படையில், கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டு உடன் ஒப்புநோக்கு கையில் பொருளியல் 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2011ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் பொருளியல் 2.5 விழுக்காடு சுருங்கியது.

விவரம்: அச்சுப் பிரதியில்

hougang candidates - bye election2012
Thursday, May 17th, 2012

- வீ. பழனிச்சாமி, செய்தி ஆசிரியர் -

இம்மாதம் 26ம் தேதியன்று நடைபெறும் ஹவ்காங் தொகுதி இடைத் தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் டெஸ்மண்ட் ச்சூ வுக்கும் பாட்டாளிக் கட்சியின் பிங் எங் ஹுவாட்டுக்கும் இடையே நேரடிப் போட்டி இடம்பெறவிருக் கிறது.
தேர்தல் அதிகாரி திரு யாம் ஆ மீ நேற்றுப் நண்பகல் 12.35 மணிக்கு அவர்கள் இருவரையும் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவித்தார்.
சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் நேற்று நண்பகல் 12.00 மணிக்குள் திரு ச்சூவும் திரு பிங்கும் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து காலியாக இருக்கும் ஹவ்காங் தொகுதியின் நாடாளுமன்ற இருக்கைக்காக வரும் 24ம் தேதி வரை வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டுவார்கள்.


ஹவ்காவ் தேர்தல் சிறப்புப் பகுதி: அச்சுப் பிரதியில்

tm logo
Thursday, May 17th, 2012
ரயில் இயங்குவதற்குத் தேவைப் படும் மின்சாரத்தை வழங்கும் மூன்றாவது தண்டவாளம், பாதிக் கப்பட்ட இடங்களில் உடனடியாக மாற்றியமைக்கப்பட உள்ளது.
அந்தத் தண்டவாளத்தில் தெளிவாகத் தெரியுமளவிற்கு விரிசல்கள் ஏற்பட்டுள்ள இணைப்புப் பகுதிகளை எஸ்எம்ஆர்டி நிறுவனம் மாற்றும் என நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவரம்: அச்சுப் பிரதியில்
tm logo
Thursday, May 17th, 2012
சிறப்புத் திறன்கள் மற்றும் சாதனைகளைக் கொண்ட மாண வர்கள் உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள் மற்றும் பலதுறைத் தொழிற் கல்லூரி களுக்கும் நேரடியாக விண்ணப் பிக்கலாம்.
இதற்கென உள்ள உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகியவற்றின் நேரடித் திட்டங் களின்  கீழ் அவர்கள் விண்ணப் பிக்கலாம்.

விவரம்: அச்சுப் பிரதியில்
tm logo
Thursday, May 17th, 2012
சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை காணாமற்போன முக்குளிப்பாளர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
சியுடெக் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த அவரது பெயர் டி ரமேஷ், 35, என்றும் அவருக்கு சாந்தி என்ற மனைவியும் பிரிய தர்ஷிணி, 7, ஹரிகிஷோர், 5, ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.
கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றை சுத்தம் செய்து கொண்டிருந்த வேளையில் அவர் காணமாற்போய்விட்டதாக கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.55 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விவரம்: அச்சுப் பிரதியில்
shanmugam
Thursday, May 17th, 2012
பூகிஸ் பகுதியில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் மரண மடைந்த டாக்சி ஓட்டு நரின் குடும்பத்துக்குத் தேவை யான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று சட்ட, வெளி யுறவு அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
திரு சண்முகத்தின் நீ சூன் குழுத் தொகுதியில்தான் மரண மடைந்த டாக்சி ஓட்டுநர் செங் டெக் ஹாக்கின் வீடு உள்ளது.
கேன்பரா ரோட்டிலுள்ள புளோக் 306ல் நேற்று முன் தினம் நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் திரு சண்முகம் பங்கேற்று திரு செங்கின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

விவரம்: அச்சுப் பிரதியில்
siswaran-opanneerselam
Thursday, May 17th, 2012
பிரதமர் அலுவலக அமைச்சரும், இரண்டாவது உள்துறை, வர்த்தக, தொழில் அமைச்சருமான
எஸ் ஈஸ்வரன் தமிழ்நாடு சென்றார். நேற்று தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் (இடம்), தொழில் துறை அமைச்சர் பி தங்கமணி (படத்தில் இல்லை) ஆகியோரைச் திரு ஈஸ்வரன் சந்தித்தார்.
விவரம்: அச்சுப் பிரதியில்
gurupeyarchi 2012
Thursday, May 17th, 2012
நந்தன ஆண்டு வைகாசி மாதம் 4ம் நாள், ஆங்கிலத் தேதி 17ம் தேதி வியாழக்கிழமையான இன்று குரு பகவானின் இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இம்முறை வாக்கிய, திருக்கணிதம் பஞ்சாங்கங்களின்படி ஒரே நாளில் குருப் பெயர்ச்சி நிகழ்வது இந்நாளிதல்தான். திருக்கணிதப்படி சென்னை நேரப்படி காலை 9.37 மணிக்கு எனில் வாக்கியப்படி மாலை 6.11 மணிக்கு நிகழ்கிறது. எந்தப் பஞ்சாங்கமாக இருப்பினும் அவர் தரும் பலன்கள் ஒன்றே. குருவின் பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்களை தமிழ் முரசில் தொடர்ந்து காணலாம். ஒரு நாளைக்கு மூன்று ராசிகள் வீதம் நான்கு நாள்கள் பலன்கள் வெளியிடப்படும். இன்று மேஷம், ரிஷபம், மிதுனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கான பலன்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விவரம்: அச்சுப் பிரதியில்
Syndicate content