You are here

உல‌க‌ம்

ஒரு பில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு

படம்: ராய்ட்டர்ஸ்

தென்கிழக்காசிய நாடுகளான மியன்மார், தாய்லாந்து, கம்போடியா ஆகிய மூன்று நாடுகளும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போதைப் பொருட்களை நேற்று அழித்துள்ளன. இந்த வட்டாரத்தில் போதைப் பொருள் அதிகரித் துள்ளநிலையில் போலிசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உலக போதைப் பொருள் ஒழிப்பு நாளை ஒட்டியும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மியன்மார், லாவோஸ், வட தாய்லாந்து, தென்சீனா ஆகியவற்றில் அதிக நடமாட்டமில்லாத எல்லைப் பகுதிகளில் சாதனை அளவில் போதைப் பொருட்கள் இந்த ஆண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சீனாவில் நிலச்சரிவு: பலர் உயிரோடு புதைந்தனர்

டெய்ஸி: சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள மலையடிவாரக் கிராமம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரோடு புதைந்தனர் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை நிலச்சரிவுக்குப் பத்து பேர் பலியாகிவிட்டனர் என்று அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நேற்று  மும்முரமாகத் தொடர்ந்தது. ஏராளமான மீட்புப் படை ஊழியர்கள்  பாறைகளைக் குடைந்தும் நிலத்தைத் தோண்டியும் காணாமல் போனவர்களைத் தேடினர்.

சிறுபான்மை அரசாங்கத்தைக் காப்பாற்ற பிரிட்டி‌ஷ் பிரதமர் புதிய ஒப்பந்தம்

லண்டன்: பிரிட்டி‌ஷ் பிரதமர் தெரேசா மே, தமது சிறுபான்மை அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக வடஅயர்லாந்து கட்சியுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொண்டார். இம்மாதம் 8ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையை இழந்த தெரேசா மேயின் கட்சிக்கு ஜனநாயக ஐக்கிய கட்சியின் ஆதரவு தேவைப்படுகிறது.

நோபெல் பரிசு பெற்றவரை விடுதலை செய்தது சீனா

பெய்ஜிங்: 2010ஆம் ஆண்டின் நோபெல் பரிசை வென்ற சீன அரசாங்க எதிர்ப்பாளரான ஸியோபோவை உடல்நலக்குறைவு காரணமாக நேற்று அரசாங்கம் தற்காலிக பிணையில் விடுவித்தது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று நேற்று வெளியான தகவல்கள் தெரிவித்தன.

மக்களோடு தொழுகையில் பங்கேற்ற சிரியா அதிபர் அசாத்

டமாஸ்கஸ்: சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் நேற்று மத்திய ஹமாவில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டார். கடந்த ஓராண்டில் தலைநகருக்கு வெளியே அதிபர் காணப்படுவது இதுவே முதல் முறை. ஒளி வெள்ளத்தில் மிதந்த அல் நூரி பள்ளிவாசலில் நேற்று அதிகாலை வேளையில் நடைபெற்ற தொழுகையில் கலந்துகொள்ளச் அதிபர் சென்றபோது எடுத்த படங்களை அசாத்தின் அலுவலர் கள் வெளியிட்டுள்ளனர். அவரு டன் அமைச்சர்கள், அதிகாரிகள், முஸ்லிம் தலைவர்கள், பொது மக்கள் ஆகியோர் தொழுகையில் ஈடுபட்டனர்.

கம்போடிய உள்ளாட்சி தேர்தல் முடிவு: எதிர்க்கட்சி முன்னேற்றம்

நோம்பென்: கம்போடியாவில் இந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பது கம்போடிய தேர்தல் அதிகாரிகள் நேற்று அறிவித்த முடிவுகளில் தெரியவந்துள்ளது. ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் இம்மாதம் நான்காம் தேதி வாக்களித்தனர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பிரதமாக இருந்துவரும் ஹுன் சென்னை தோற்கடிக்கும் நோக்கில் எதிர்க்கட்சியினர் தீவிரப் பிரசாரம் மேற்கொண் டிருந்தனர். நேற்று வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின்படி மொத்தமுள்ள 1,646 தொகு திகளில் ஆளும் கட்சி 1,156 இடங்களில் வெற்றிபெற்றது.

சுமத்ரா: பயங்கரவாதத் தாக்குதலில் போலிஸ் பலி

ஜகார்த்தா: மில்லியன் கணக்கான இந்தோனீசியர்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடத் தயா ராகிக்கொண்டிருந்த வேளையில், பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் போலிசார் ஒருவர் கொல்லப்பட்டார். வடக்கு சுமத்ராவில் அவர் கத்தியால் குத்தப்பட்டார். இம்மாதம் 21ஆம் தேதி அமெரிக்காவின் மிச்சிகன் விமான நிலையத்தில் பயங்கரவாதி ஒருவன் போலிஸ் அதிகாரி ஒருவரைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவத்தைப் போன்று இது அமைந்தது. மேடன் நகரில் உள்ள வடக்கு சுமத்ரா போலிஸ் தலைமையகத்தில் அதிகாலை மூன்று மணியளவில் இருவர் வேலி தாண்டிக் குதித்த தாக தேசிய போலிஸ் பேச்சாளர் செட்யோ வசிஸ்டோ குறிப்பிட்டார்.

லண்டனில் 5 உயர்மாடிக் கட்டடங்களில் தீ மூளும் அபாயம்

லண்டன்: லண்டனில் ஐந்து உயர் மாடிக் கட்டடங்களில் தீ மூளும் அபாயம் இருப்பதால் முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக அந்த கட்டடங்களில் உள்ள 800 வீடுகளிலிருந்து சுமார் 4,000 பேர் வெளியேற்றப்பட்டனர். கேம்டென் எஸ்டேட் பகுதியில் உள்ள 5 அடுக்குமாடி குடி யிருப்புக் கட்டடங்களை சோதனை செய்த தீயணைப்புப் பிரிவு அதிகாரிகள், அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களின் பாது காப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியதைத் தொடர்ந்து கேம்டென் மன்றம் இந்த நடவடிக்கையை எடுத் துள்ளது.

‘அமெரிக்கா தேடும் பயங்கரவாதி தப்பிச் சென்றிருக்கக்கூடும்’

மணிலா: பிலிப்பீன்சின் தென் பகுதி மராவி நகரில் போராளி களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே கடந்த ஐந்து வாரங்களாக சண்டை நீடிக்கும் வேளையில் அமெரிக்கா தேடி வரும் பயங்கரவாதிகளில் ஒரு வரான இஸ்னிலான் ஹெபிலான் அந்நகரிலிருந்து தப்பிச் சென் றிருக்கலாம் என்று பிலிப்பீன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஐஎஸ் குழுவுக்கு தலைவன் என்று கூறப்படும் பிலிப்பீன்ஸ் போராளியான இஸ்னிலான் ஹெபிலானை மராவியில் சண்டை நடக்கும் பகுதியில் காணவில்லை என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நிலச்சரிவு: 120 பேரைக் காணவில்லை

பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாநில மலைப்பகுதியில் நேற்று மண் மற்றும் பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து குடியிருப்பாளர்கள் பலர் அதில் சிக்கிக்கொண்டதாகக் கூறப்படு கிறது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ள நிலையில் நிலச்சரிவில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்ததாகவும் இன்னும் 120க்கும் அதிக மானோரைக் காணவில்லை என்றும் மீட்புக் குழுவினர் தெரி வித்தனர். அவர்கள் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Pages