You are here

தலைப்புச் செய்தி

வாழ்நாள் கற்றல் நிகழ்ச்சியில் மாணவர்களுடன் அமைச்சர் ஓங் யி காங்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மார்க்கெட் பிளேசில் நேற்று நடைபெற்ற ‘ஃபியூச்சர் ஆஃப் அஸ்’ கண்காட்சியில் ‘எஸ்ஜி ஃபியூச்சர்’ வாழ்நாள் கற்றல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங். இதில் பங்கேற்ற மாணவர்கள் கற்றலின் ஊக்கம், கற்றல் சவால்கள், இளையர்களிடையே திறன்களை பகிர்ந்து கொள்வதில் உதவுதல் போன்றவை குறித்து விவாதித்தனர்.

டாக்சி மோதியது, காயமில்லை

பிராடல் ரோட்டில் நேற்றுக் காலை நேரத்தில் ஒரு டாக்சி வீதி விளக்குக் கம்பம் ஒன்றில் மோதியது. கம்ஃபர்ட் நிறுவனத்தின் அந்த டாக்சியை ஓட்டி வந்தவர் திரு டோ என்று மட்டும் தன்னைக் குறிப்பிட்டுக் கொண்டார். டாக்சியில் இருந்த ஆடவரும் காயமின்றித் தப்பினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய பாணியில் யானைத் தந்தங்கள் கடத்தல்

கைப்பற்றப்பட்ட தந்தங்களுடன் மலேசிய சுங்கத் துறை அதிகாரிகள்.

கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 159 கிலோ எடையுள்ள யானைத் தந்தங்களை மலேசிய சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் காட்டினர். இவற்றின் மதிப்பு சுமார் US$382,000 என மதிப்பிடப்படுகிறது. கடந்த சனிக்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மூன்று வியட்னாமியரிடமிருந்து யானைத் தந்தங்கள் பிடிபட்டன. இரு வியட்னாமியர் கைது செய்யப்பட்டுள்ள வேளையில், மூன்றாமவர் தேடப்பட்டு வருகிறார்.

முதல் ஜோடி சிறுநீரக மாற்று சிகிச்சை

சிறுநீரக தானம் செய்த தாய் நூர் ரஃபிடா நசிர்

தனது மகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் கூறியபோது உடனடியாக தனது சிறுநீரகத்தைக் கொடுக்க முன்வந்தார் தாயாரான நூர் ரஃபிடா நசிர். நம்பிக்கையுடன் பரி சோதனைக்குச் சென்றபோது அவருடைய சிறுநீரகம் அவரது மகள் சித்தி ரசிடா லோக்மான் ஹடானுக்குப் பொருந்தாது என்று தெரிய வந்தது. இருவரும் துவண்டு போயினர். வேறொருவரிடமிருந்து உறுப்பு தானம் கிடைக்கும் வரை ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மேற் கொண்டார் குமாரி சித்தி. ஆனால் நிலைமை சீரடையவில்லை. அப்போது ஒரு புதிய யோச னையை மருத்துவர்கள் முன் வைத்தனர். அதற்கு ஜோடி சிறு நீரக பரிமாற்ற ஏற்பாடு என்று பெயர்.

முழுநேர தமிழ்ப் பட்டக்கல்வி

உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில்

சிங்கப்பூரில் முதன்முறையாக முழு நேர தமிழ்மொழி இளங்கலைப் பட்டப்படிப்பு (B.A. Ed) இவ்வாண்டு தொடக்கம் காணவிருக்கிறது. கல்வி அமைச்சும் தேசிய கல்விக் கழகமும் ஒன்றிணைந்து நீண்டகால கூட்டு முயற்சியின் பயனால் புதிய கல்வி ஆண்டில், அதாவது எதிர்வரும் ஜூலை மாதத்தில் பட்டப்படிப்பு தேசிய கல்விக் கழகத்தில் தொடங்கும். உமறுப் புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நேற்றுக் காலை நடத்தப்பட்ட தமிழ்மொழி கற்பித் தல் தொடர்பான தகவல் நிகழ்ச்சியில் இவ்விவரங்கள் அளிக்கப் பட்டன.

சிங்கப்பூர் குடும்பங்களின் வருமானம் அதிகரிப்பு

படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் குடும்பங்களின் வருமானம் கடந்த ஆண்டில் 4.9 விழுக்காடு உயர்வு கண்டதாக அரசாங்கப் புள்ளிவிவரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. வேலைக்குச் சென்று பொருள் ஈட்டும் சிங்கப்பூர் குடும்பங்களின் இடைநிலை மாத வருமானம் 2015ஆம் ஆண்டில் $8,666 ஆக அதிகரித்தது என்றும் முந்தைய 2014ஆம் ஆண்டில் இது $8,292 ஆக இருந்தது என்றும் புள்ளி விவரத் துறையின் ‘முக்கிய குடும்ப வருமானப் போக்குகள்’ ஆய்வு கூறுகிறது.

பள்ளித் துப்புரவுப் பணியில் மாணவர்கள்

பள்ளியைச் சுத்தம் செய்யும் ஸிங்னான் தொடக்­கப் பள்­ளி மாணவர்களுடன்  தற்­கா­லிக கல்வி அமைச்­சர் (பள்­ளி­கள்) இங் சீ மெங். படம்: தி நியூ பேப்பர்

இவ்­வாண்டு இறு­திக்­குள் தொடக்­கப் பள்­ளி­யி­லி­ருந்து தொடக்கக் கல்­லூ­ரி ­வரை பயிலும் அனைத்து மாண­வர்­களும் தங்கள் பள்ளியின் சுற்றுப்­ பு­றத்­ துப்­பு­ர­வுப் பணியில் அன்றாடம் ஈடு­படுத்­தப்­படு­வர். மாண­வர்­களிடையே பராமரிப்பு, பொறுப்­பு­ணர்வை வளர்க்கும் நோக்கத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்­வி­யமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்கை­யில் தெரி­வித்­தது. துப்­பு­ர­வுப் பணி பள்­ளி­யில் முதல் பாடம் தொங்கும் முன் னரோ, இடை­வேளை­யின் போதோ, பாடங்களுக்கு நடுவி லேயோ அல்லது பள்ளி முடியும் தறு­வா­யிலோ மேற்­கொள்­ளப்­ப­ட­லாம் என்று அமைச்சு கூறியது.

கவிழ்ந்து வங்கிக்குள் நுழைந்த பாரந்தூக்கி

உட்லண்ட்சில் பிஓஎஸ்பி கிளை அலுவலகத்தை துளைத்துக்கொண்டு விழுந்து கிடக்கும் பாரந்தூக்கி

பெரிய பல சக்கர பாரந்தூக்கி வாகனம் நேற்று காலை நேரத்தில் உட்லண்ட்சில் ஒரு வங்கிக் கிளை அலுவலகத்துக்குள் விழுந்து விட்டது. அந்த வாகனத்தை ஓட்டிவந்த வர் அதை திருப்பி ஓட்டியபோது வாகனம் கட்டுப்பாடை மீறிவிட்டது. ஓட்டுநருக்கு காயம் இல்லை, தப்பிவிட்டார் என்று சம்பவ இடத்தில் இருந்த போலிசார் தெரிவித்தனர். வாகனத்துக்கு அடியில் ஒரு மோட்டார் சைக்கிள் காணப் பட்டது. என்றாலும் யாருக்கும் காயம் எதுவுமில்லை.

Pages