Tamilmurasu த‌மிழ் முர‌சு - விளையாட்டு http://tamilmurasu.com.sg/taxonomy/term/11/0 ta கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின் http://tamilmurasu.com.sg/node/8500
காற்பந்து உலகின் ஆக உயரிய பரிசை முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்துள்ளது ஸ்பெயின்.
ஆட்டம் தொடங்கியதுமே ஸ்பெயின¬ன் ஆதிக்கம் திடல் முழுதும் தென்பட்டது. தனது வழக்கமான கவர்ச்சியான ஆட்டத்தாலும் திடமான மத்தியத் திடல் ஆட்டக்காரர்களாலும் ஹாலந்து அணியினரைத் திணற வைத்தனர்.
ஹாலந்து வீரர்களால் காற்பந்தை நெடு நேரம் தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியவில்லை.

பதிலுக்கு இதுவரை உலகம் பார்க்காத முரட்டு ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஹாலந்து. பந்து கிடைக்காத ஆதங்கத்தில் தவறு இழைக்கக் கூடாது எனும் பதற்றத்தில் ஸ்பெயின் வீரரகளைக் கண்டபடி இடித்தும் உதைத்தும் ஸ்பெயின் வீரர்களை வதைத்தனர்.

இந்த இறுதி ஆட்டத்தில் மொத்தம்
14 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் காண்பிக்கப்பட்டதும் ஒரு புதிய சாதனை.
ஸ்பெயின¬ன் தாக்குதல்களை முறியடித்த ஹாலந்துக்கே ஆட்டத்தின் மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது.
ஆர்யன் ராபன் தமது அதீத வேகத்தால் ஸ்பான¬ய தற்காப்பைத் தகர்த்து முன்னேற கோல்காப்பாளர் ஐக்கர் கசியாஸ் மட்டுமே நந்தி போல் நின்றார். ஆனால் ராபன் அடித்த பந்தைத் தடுத்து நிறுத்தி ஸ்பெயினைக் காப்பாற்றினார் கசியாஸ்.
இது போல் ஒரு சில வாய்ப்புகளை ஹாலந்து நழுவ விட்டாலும் அதிகமான வாய்ப்புகள் ஸ்பெயினுக்கே வந்து விழுந்தன. ஹாலந்தின் முரட்டு தற்காப்பே ஸ்பெயினைக் கோல் போட விடாமல் தடுத்தது.

ஆட்டம் 0-0 என்று முடிய கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் மற்றுமொரு தப்பாட்டத்தால் இரண்டாவது மஞ்சள் அட்டையையும் அதனால் கிடைக்கும் சிவப்பு அட்டையையும் வாங்கிக் கொண்டு ஆட்டத்தை விட்டு வெளியேறினார் ஹாலந்தின் ஜான¬ ஹைடிங்கா.

இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆட்டம் முடிய நான்கே நிமிடங்கள் இருக்கும் போது அனைத்து ஹாலந்து ரசிகர்களின் இதயங்களையும் உடைத்தார் ஸ்பெயின¬ன் இன¬யெஸ்டா.

தற்காப்பில் ஏற்பட்ட விரிசலில் நுழைந்த இன¬யெஸ்டா லாவகமாக அடித்த பந்து வலையை முத்தமிட ஸ்பெயின¬ன் மில்லியன் கணக்கான ரசிகர்களின் கரகோஷம் காதைப் பிளந்தது.
ஆட்டத்தை முடிப்பதற்காக நடுவர் விசில் ஊதி சமிக்ஙை செய்தபோது 80 ஆண்டு கால ஸ்பெயின¬ன் காத்திருப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. உலகக் கிண்ண வெற்றியாளார் பட்டியலில் ஸ்பெயினும் சேர்ந்தது.
விளையாட்டு Tue, 13 Jul 2010 01:18:03 +0000 tamilmurasuweb 8500 at http://tamilmurasu.com.sg நடுவர் மீது பழி போடும் ஹாலந்து http://tamilmurasu.com.sg/node/8499
இவ்வாண்டின் இறுதி ஆட்டத்தோடு மொத்தம் மூன்று உலகக் கிண்ணப் போட்டிகளில் தோற்றுள்ளது ஹாலந்து அணி. இம்முறை தோல்விக்கு இங்கிலாந்து நடுவர் ஹவர்ட் வெப்பின் மீது பழி சுமத்தி வருகின்றனர் ஹாலந்து பயிற்றுவிப்பாளரும் விளையாட்டாளர்களும்.

இங்கிலாந்து நடுவர் வெப் இந்த ஆட்டத்தில் மொத்தம் 13 ஆட்டக்காரர்களுக்கு மஞ்சள் அட்டை காண்பித்தார். 9 பேர் ஹாலந்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் ஹாலந்தின் தற்காப்பு ஆட்டக்காரர் ஜான¬ ஹைடிங்கா இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று, ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

இதனால் ஆக அதிகமான மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்ட ஆட்டம் எனும் புதிய வினோத சாதனையும் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால் அத்தனை மஞ்சள் அட்டைகளும் நியாயமானவையே. திராட்சை கிடைக்காத நரி “சீ இந்தப் பழம் புளிக்கும்,’’ என்று சொல்வதைப் போல நடுவர் மீது காட்டம் காட்டுகிறது ஹாலந்து.
விளையாட்டு Tue, 13 Jul 2010 01:17:36 +0000 tamilmurasuweb 8499 at http://tamilmurasu.com.sg தங்கப் பந்து விருது பெற்றார் ஃபோர்லான் http://tamilmurasu.com.sg/node/8498
தென் ஆப்பிரிக்காவில் நிறைவு பெற்ற உலகக் கிண்ணப் போட்டியின் தலை சிறந்த வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருதை உருகுவேயின் அணித் தலைவர் டியேகோ ஃபோர்லான்,31 (படம்) வென்றுள்ளார்.
உருகுவே அரை இறுதி ஆட்டம் வரை முன்னேற ஃபோர்லான¬ன் பங்கு இன்றியமையாததாக அமைந்தது. இந்தத் தொடரில் இவர் ஐந்து கோல்களை அடித்திருந்தார். 2வது இடம் நெதர்லாந்தின் ஷினைடருக்கும், 3வது இடம் ஸ்பெயினின் டேவிட் வியாவுக்கும் கிடைத்தது.
ஆக அதிக கோல்கள் அடித்தவருக்கான தங்கக் காலணி விருதை ஜெர்மன¬யின் தாமஸ் முல்லர் வென்றார். இவரும் ஸ்பெயின¬ன் டேவிட் வியாவும், ஹாலந்தின் ஷினைடரும் தலா ஐந்து கோல்கள் அடித்திருந்தாலும் மேலும் மூன்று கோல்களுக்குக் காரணகர்த்தாவாக இருந்துள்ளார் முல்லர். அதன் அடிப்படையில் இவருக்கு விருது வழங்கப்பட்டது.
தாமஸ் முல்லர் (20) சிறந்த இளம் வீரர் விருதையும் வென்றார்.
விளையாட்டு Tue, 13 Jul 2010 01:17:16 +0000 tamilmurasuweb 8498 at http://tamilmurasu.com.sg ஸ்பெயினை பழி வாங்கத் துடிக்கும் ஜெர்மனி http://tamilmurasu.com.sg/node/8437
- தமிழவேல்-

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தோமானால், ஆஸ்திரியாவின் வியென்னா நகரில் ஐரோப்பிய கிண்ண இறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஸ்பெயினும் ஜெர்மனியும் மோதிய அந்த ஆட்டத்தில் ஃபெர்னான்டோ டொரெஸ் போட்ட ஒரே கோலினால் ஜெர்மன் இதயங்களை உடைத்துவிட்டு கிண்ணத்தைக் கைப்பற்றியது ஸ்பெயின்.

இன்று உலகக் கிண்ண அரை இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினுடன் மோதும் ஜெர்மன¬யின் அந்த தோல்விக்குப் பழிவாங்கும் தருணம் வந்துவிட்டது.

அன்றும் ஜெர்மனியின் பயிற்றுவிப்பாளாராக இருந்தவர் ஜோக்கின் லோ. அந்த தோல்விக்குப் பின்னர் தமது அணியை அதிரடியாக மாற்றி இளம் ரத்தத்தை அணியில் பரவவிட்டார். அதற்குக் கை மேல் பலனும் இதுவரை கி£ந்த்துள்ளது.

இந்த உலகக் கிண்ணத்திலேயே மிகவும் அற்புதமான, கவர்ச்சியான ஆட்டத்தை ஜெர்மனியின் இளையர்கள் வெளிக்காட்டி வருகிறார்கள். இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்திய ஜெர்மனி கால் இறுதியில் அர்ஜென்டினாவை 4-0 என்ற கோல் எண்ணிக்கையில் பதம் பார்த்தது.

கண் இமைக்கும் நேரத்தில் தற்காப்பிலிருந்து எதிர்த்தாக்குதல் நடத்தக்கூடிய வல்லுனர்களாகத் திகழ்கின்றனர் ஜெர்மானியர்கள்.
ஆனால் இதுவரை மொத்தம் 4 கோல்கள் அடித்த தோமஸ் முல்லர் தடை காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறாதது ஜெர்மனிக்கு பெரிய பின்னடைவைத் தரும்.

ஆனால் ஸ்பெயின் அணியிலும் திறமையான ஆட்டக்காரர்களுக்குப் பஞ்சமில்லை. இன¬யெஸ்டா, அலோன்_ஸ„, ஸ„வி, புயோல் போன்ற அனுபவமிக்க ஆட்டக்காரர்கள் ஸ்பெயின் அணியில் உண்டு.

இந்த உலகக் கிண்ணத்தில் ஆக அதிகமான கோல்களைப் போட்ட டேவிட் வியாவின் கோல் வேட்டை தொடர வேண்டும் என்பது ஸ்பெயின் ரசிகர்களின் வேண்டுதல்.

ஏனென¬ல் இதுவரை ஸ்பெயின் அடித்த மொத்தம் ஆறு கோல்களில் ஐந்தைப் போட்டவர் வியா.
எப்போதெல்லாம் நெருக்கடியாக இருக்கிறதோ அப்போதெல்லாம் கோல் அடித்து ஸ்பெயினைக் காப்பாற்றி வருகிறார் வியா.
பதிலுக்கு ஜெர்மனி குழுவில் அதன் அனுபவமிக்க முன்னணி ஆட்டக்காரர் மிரசோவ் கிளோசர் இதுவரை நான்கு கோல்களைப் போட்டுள்ளார்.

இரு அணிகளின் தத்தம் எதிர்த்தரப்பினரைக் கட்டுப்படுத்தும் வியூகங்களுடன் களம் இறங்குகின்றன. இந்த ஆட்டம் காற்பந்து ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் அதே நேரத்தில் காற்பந்து கணிப்பாளர்களுக்குப் பெரும் தலைவலியைக் கொடுக்கும் என்பது திண்ணம்.
விளையாட்டு Tue, 06 Jul 2010 16:00:00 +0000 tamilmurasuweb 8437 at http://tamilmurasu.com.sg இங்கிலாந்து நிர்வாகியாகவே இருக்க விரும்புகிறேன்: கப்பெல்லோ http://tamilmurasu.com.sg/node/8003
இங்கிலாந்துக் காற்பந்துக் குழுவின் நிர்வாகியாக தற்பொழுது இருக்கும் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஃபேபியோ கப்பெல்லோ தாம் இத்தாலி நாட்டின் பயிற்றுவிப்பாளராக இருப்பதைக் காட்டிலும் இங்கிலாந்துக் குழுவுக்குப் பணியாற்றுவதையே பெருமையாகக் கருதுவதாகக் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் பிரபல வெம்பிளி மைதானத்தில் திங்கள்கிழமையன்று மெக்சிகோ நாட்டுடனான நட்பு முறை காற்பந்து ஆட்டத்தில் இங்கிலாந்து நம்பிக்கையூட்டும் விதத்தில் விளையாடவில்லை.
முதல் பாதி ஆட்டத்தில் சற்று தட்டுத் தடுமாறிய பின்னர் இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து மெக்சிகோவை வெற்றி கொண்டது.

மேலும்
விளையாட்டு Thu, 27 May 2010 00:00:06 +0000 tamilmurasuweb 8003 at http://tamilmurasu.com.sg சான¬யாவுக்கு திடுதிப் என நேற்றே திருமணம் http://tamilmurasu.com.sg/node/7476
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்ஸா- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் திருமண அறிவிப்பு வெளியானதில் இருந்து ஏகப்பட்ட கலாட்டாக்கள். ஆயிஷா என்ற பெண் ஏற்படுத்திய குழப்பத்துக்கு விவாகரத்து மூலம் முற்றுப் புள்ளி வைத்த நிலையில், 15ந்தேதி திருமணத்துக்காக ஷோயப் மாலிக்கின் குடும்பத்தினர் ஹைதராபாத் வந்தனர். இந்நிலையில் திருமணம், சான¬யா வ~ட்டில் திடுதிப் என நேற்று இரவே நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆயிஷாவை விவாகரத்து செய்ததால் சானியா, ஷோயபின் 2வது மனைவி ஆகிறார்.

மேலும்
விளையாட்டு Sat, 10 Apr 2010 14:08:43 +0000 tamilmurasuweb 7476 at http://tamilmurasu.com.sg மற்றொரு புற்றுநோய் மையம் http://tamilmurasu.com.sg/node/6859
சிங்கப்பூரில் கவலையளிக்கும் அளவுக்கு அதிகரித்து வரும் புற்றுநோயை எதிர்கொள்ள மற்றோரு புற்றுநோய் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள இந்த புற்றுநோய்க் கழகம் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதுடன், நோயாளிகளுக்குச் சிகிச்சையும் வழங்கும். சிங்கப்பூரின் நான்கில் ஒரு பங்கு புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்.
தற்போது தேசிய புற்று மையம் 70% புற்றுநோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குகிறது.
தேசிய பல்கலைக்கழக புற்றுநோய் கல்விக் கழகத்தை மூத்த அமைச்சர் கோ சோக் டோங் இன்று அதிகாரபூர்வமாகத் திறந்து வைப்பார்.
விளையாட்டு Tue, 09 Feb 2010 10:21:09 +0000 tamilmurasuweb 6859 at http://tamilmurasu.com.sg தூதரக அதிகாரியை ருமேனியா விசாரிக்கும் http://tamilmurasu.com.sg/node/6513
புக்கிட் பாஞ்சாங்கில் டிசம்பர் 15ம் தேதி நடந்த வாகன விபத்து தொடர்பாக விசாரணை செய்யுமாறு ருமேனிய வெளியுறவு அமைச்சு அதன் அரசாங்க வழக்கறிஞர் அலுவலகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள ருமேனியத் தூதரகத்தின் பொறுப்பாளர் இந்த விபத்துடன் சம்பந்தப்படுத்தப்படுவது இதற்குக் காரணம்.
ருமேனிய வெளியுறவு அமைச்சு நடத்திய உள் விசாரணையின் முடிவில், இச்சம்பவம் குறித்து சட்டப்படி குற்றவாளியை அடையாளம் காணவும், விபத்தின் சூழ்நிலையை அறியவும் வெளியுறவு அமைச்சால் இயலாது என தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சு செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

மேலும்
விளையாட்டு Thu, 07 Jan 2010 10:14:11 +0000 tamilmurasuweb 6513 at http://tamilmurasu.com.sg சிங்கப்பூர்: வெற்றி மீது வெற்றி http://tamilmurasu.com.sg/node/6278
தென் கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றியுடன் துவக்கிய சிங்கப்பூர் நீர்ப்பந்துக் குழு (வாட்டர் போலோ), 3வது போட்டியிலும் நேற்று தொடர்ந்து வெற்றி கண்டது. 25வது தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் லாவோஸின் வியந்தியன் நகரில் நடக்கின்றன. இம்மாதம் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை அப்போட்டிகள் நடைபெறும். அப்போட்டிகளின் குழுப் பிரிவு ஆட்டங்கள் சில முன்னதாகவே துவங்கிவிட்டன. அவற்றில் சிங்கப்பூர் நீர்ப்பந்துக் குழு, நேற்றைய மூன்றாவது போட்டியில் தாய்லாந்து அணியை 8-5 என்ற கோல் கணக்கில் வென்றது.
விளையாட்டு Wed, 09 Dec 2009 02:42:47 +0000 tamilmurasuweb 6278 at http://tamilmurasu.com.sg தரவரிசையில் முதலிடம்: தலைக்கு ரூ. 25 லட்சம் http://tamilmurasu.com.sg/node/6277
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2- 0 என்று வெற்றி பெற்று ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதன் முறையாக முதலிடம் பிடித்த இந்திய அணி வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தலா ரூ.25லட்சம் பரிசு அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு ஞாயிற்றுக்கிழமை பொன்னான நாள். தனது 77 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக ஐசிசி அனைத்துலகத் தர வரிசையில் ‘நம்பர்-1’ இடம் பெற்றுச் சாதித்தது.
இப்பெருமையைப் பெற இலங்கைக்கு எதிரான மும்பை டெஸ்ட் வெற்றி முக்கியக் காரணமாக அமைந்தது.

மேலும்
விளையாட்டு Wed, 09 Dec 2009 02:42:36 +0000 tamilmurasuweb 6277 at http://tamilmurasu.com.sg