இந்தியா

இந்தியா
Friday, February 3rd, 2012

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் அடுத்த அதிரடியாக,  2008ஆம் ஆண்டுக்குப் பிறகு முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா காலத்தில் வழங்கப்பட்ட 122 தொலைத் தொடர்பு உரிமங்களை இந்திய உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்துள்ளது.
மேலும் 2ஜி உரிமங்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக புதிதாக விதிமுறைகளை உரு வாக்குமாறு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன் 2ஜி உரிமங்கள் பெறுவதில் தங்கள் தகுதியை மறைத்து செயல்பட்டதற்காக, தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பால் யுனிடெக் வயர்லெஸ், டாடா, ஏர்செல், ஐடியா உள்ளிட்ட பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, 2ஜி ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு உள்ள பங்கு குறித்து விசாரிப்பதா, வேண்டாமா என்பதை சிறப்பு  நீதிமன்றமே  தீர்மானிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2ஜி ஊழலில்    ப.சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிர மணிய சுவாமி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்றுத் தீர்ப்பளித்தனர்.

முழு விவரம் 3.2.2012 தமிழ் முரசில்

Thursday, February 2nd, 2012

தமிழகத்திற்குச் செல்லும் தமது உறவினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு தமிழக அரசு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்சே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் நிருபமா ராஜபட்சேயை திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்துக்காகவே திரு திருக்குமரன் தாக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர் ஒரு இந்து என்றும், வட பகுதியைச் சேர்ந்த தமிழர் என்றும் கூறிய அவர், திருக்குமரன் நடேசன் மீதான தாக்குதலுக்கு இந்திய மீனவர்கள் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் கடலோரப் பாதுகாப்பு பற்றி ஆலோசனை நடத்த இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சே ரகசியமாக இந்தியா சென்றுள்ளதாகக் கூறப்படு கிறது. அவர் புதுடெல்லியில் இந்திய பாதுகாப்பு செயலாளர் சசிகாந்த் சர்மா தலைமை யிலான குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

Thursday, February 2nd, 2012
கோயம்புத்தூரில் கத்தியைக் காட்டி மிரட்டி 100 ரூபாய் வழிப்பறி செய்த இருவருக்கு ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் 10,000 அபராதமும் விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு கோயம்புத்தூர் மக்களை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.
இந்தத் தீர்ப்பு சாலைகளில் திரியும் வழிப்பறித் திருடர் களுக்கு பெரிய அச்சத்தைத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Wednesday, February 1st, 2012
புதுடெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிறையில் இருக்கும் முன்னாள் இந்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கோரியது தொடர் பாகவும், கால தாமதம் ஏற்பட்ட தால் உரிய விதிமுறைகள் கொண்டு வருவது குறித்தும் ஜனதா கட்சி தலைவர் சுப்பிர மணியன் சாமி உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது 2ஜி ஊழல் விவகாரத்தில் 16 மாத காலமாக ஆ. ராசாவுக்கு எதிராக எந்த வித நடவடிக்கையும் பிரதமர் எடுக்காதது ஏன் என்று மத்திய அரசின் சட்ட அதிகாரிகளிடம் கேள்வி கேட்கப்பட்டது. சூடான விவாதத்திற்கு பிறகு கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறி வித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான ஏ.கே. கங்குலி இம் மாதம் 2ம் தேதி ஓய்வு பெறவிருப்பதால் இந்த வழக்குக்கு நேற்று தீர்ப்பு வழங் கப்பட்டது.
பிரதமர் அலுவலகத்திற்கு எதிரான சாமியின் மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

tm logo
Saturday, January 28th, 2012

சசிகலா குழுவினரை தமிழக அரசியலிருந்து அடியோடு துடைத் தொழிக்கும் வகையில் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.

அதனையொட்டி,  தமிழக அமைச்சரவையிலிருந்து இரு அமைச்சர்கள் திடீரென நீக்கப் பட்டுள்ளனர். ஒருவருக்கு அமைச் சரவைப் பொறுப்பு மாறியுள்ளது.

பள்ளிக்கல்வி, விளையாட்டு இளையர் நலன் அமைச்சராக இருந்த அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி நீக்கப்பட்டுள்ளார். அந்தப் பொறுப்பு வழங்கப்படும் என்.ஆர்.சிவபதிக்கு கூடுதலாக தொல்லியல், தமிழ் கலாசாரத் துறையும் சேர்த்து வழங்கப்படுகிறது.

வருவாய்த்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி நீக்கப் பட்டு, கே.ஏ.செங்கோட்டையனுக்கு அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக என்.சுப்பிர மணியன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர்.

இதற்கிடையே, சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன்  நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முழு விவரம் 28.1.2012 தமிழ் முரசில்

pune-bus-27-1-2012
Friday, January 27th, 2012

இந்தியாவின் மேற்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் அரசாங்க பஸ்ஸைக் கடத்திச் சென்று, கூட்டம் மிக்க நெரிசலான தெருக் களில் வேகமாக ஓட்டி, எட்டு பேரைக் கொன்று ஏராள வாகனங்களை நொறுக்கிவிட்ட ‘கொலவெறி ஓட்டுநர்’ இப்போது போலிஸ் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
  சந்தோஷ் மனே, 30, என்ற அந்த ஓட்டுநரை பிப்ரவரி 3ம்தேதி வரை உள்ளே வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
 புனே நீதிமன்றத்தில் போலிஸ் அவரை நேற்று  முன்னிலைப்படுத் தியது. நீதிபதி அவரிடம் கேள்வி கேட்டபோது அவர் மவுனமாக இருந்தார்.
   சந்தோஷ் மனே சார்பில் வாதாட  முடியாது, வாதாடக் கூடாது என்று வழக்கறிர்கள் எல்லாருமே ஒரே குரலில் மறுத்துவிட்டார்கள்.
இவ்வேளையில், கொலை வெறியுடன் சாலைகளில் பஸ்ஸை ஓட்டிச் சென்றபோது அந்த ஆசாமியை விடாமல் விரட்டி அவரை மடங்கியது 21 வயது மாணவர் என்பது தெரியவந்து உள்ளது.

முழு விவரம் 27.1.2012 தமிழ் முரசில்

abudlkalam
Thursday, January 26th, 2012
இந்திய அரசியலிலும் எந்தப் பிரச்சினையிலும் இதுவரையிலும் சிக்காமல் இருந்து வந்த இந்தியாவின் முன்னாள் அதிபர் அப்துல் கலாம்,  முதன்முறையாக இப்போது கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பது குறித்த பிரச் சினையில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.

 அணுமின் நிலையம் பற்றிய திரு கலாமின் கருத்தைக் கண்டிக்கும் வகையில் கோயம்புத்தூரில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒன்றுதிரண்டு அவரது உருவ பொம்மையை தீயிட்டுக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அந்தப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்திய காவல்துறை யினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கைது செய்து சிறிது நேரம் காவலில் வைத்து விட்டு விடுவித்தனர். இளையருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த முன்னாள் அதிபர் கலாமுக்கு மாணவர்களிடையே எதிர்ப்புக் கிளம்பியுள்ளது இதுவே முதல் முறை.
முழு விவரம் 26.1.2012 தமிழ் முரசில்

pune-bus-incident
Thursday, January 26th, 2012
இந்தியாவின் புனே நகரில் நேற்றுக் காலை பரபரப்பான வர்த்தகப் பகுதியில் உள்ள சாலையொன்றில் ஓட்டுநர் ஒருவர் பேருந்தை கண்டபடி ஓட்டி ஒன்பது பேரின் உயிரை வாங்கியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 50-க்கும் அதிகமான வாகனங்கள் சேத மடைந்துள்ளன.
திரைப்படங்களில் அமைக் கப்படும் திகில் காட்சி போல் பார்ப்பதற்கே பயங்கரமாக இருந்தது என்றனர் அக் காட்சியைப் பார்த்த புனேவாசிகள்.
அரசுக்குச் சொந்தமான இந்த பேருந்தை ஓட்டி வந்த சந்தோஷ் மனே (30 வயது) என்பவர் மனநலம் குன்றியவர் என்று விசாரணையில் தெரியவந் துள்ளது.

tm logo
Monday, January 23rd, 2012

தமிழக சிறைகளில் தங்கி இருக்கும் கைதிகளிடம் செல்பேசி களும் சிம் கார்டுகளும் தாராளமாகப் புழங்குவதைத் தடுக்க முடியாமல் அதிகார வர்க்கம் தடுமாறுகிறது.

இநத்ச் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மாநிலத்தில் இருக்கும் மத்திய சிறைகளில் தொலைபேசிக் கூடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பிஎஸ்என்எல் என்ற இந்தியாவின் அரசாங்க தொலைத்தொடர்பு நிறுவனமும் தமிழ்நாட்டின் மின்னணுக் கழகமும் சேர்ந்து தொலை பேசிக் கூடங்களை அமைக்கும். இதனால் 20,000 பேருக்கும் அதிக கைகதிகள் பலன் பெறுவர் என்று இந்த இரண்டு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.

மொத்தம் 1.58 கோடி ருபாய் (சுமார் $375,000) செலவில் 54 கூடங்கள் அமைக்கப்படும் என் றும் பெண்கள் சிறைச்சாலை களிலும் கூடங்கள் இருக்கும் என்றும் இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

tm logo
Monday, January 23rd, 2012

உலகுக்கு பூஜ்ஜியத்தைக் கண்டு பிடித்துக் கொடுத்த நாடு இந்தியா.

இந்திய மாணவர்கள் கணக் கிலும் அறிவியல் படிப்பிலும் அமெரிக்க மாணவர்களை முந்தி விடும் நிலை ஏற்படுவிட்டது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கவலை தெரிவித்த நிலைகூட இருந்தது.
ஆனால் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கணக்கில் தடுமாடுகிறார்கள் என்பது உலக அளவிலான மதிப்பீட்டில் தெரிய வந்தருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துவிட்ட இந்தியா, இந்தப் பிரச்சினை பற்றி ஆராய்ந்து கணக்கில் மாணவர்கள் பழையபடி சிறந்து விளங்குவதற்கான வழி வகைகளைக் காண ஒரு குழுவை அமைத்துள்ளது.
பொருளியல் ஒத்துழைப்பு மேம் பாட்டு நிறுவனம் (ஒஇசிடி) அண்மையில் 73 நாடுகளைச் சேர்ந்த 15 வயது பிள்ளைகளுக்கு கணக்கு, நூல் வாசிப்பு தொடர்பான ஆய்வை நடத்தியது.
அதில் கலந்துகொள்ள தமிழ் நாடு, ஹிமாச்சலப் பிரதேசத்தில் இருந்து 15 வயது பிள்ளைகள் 4,826 பேர் கலந்துகொண்டனர்.

Syndicate content