fontsize: 60% 70% 80% 90%

ம‌லேசியா

பாலாவைக் கண்டுபிடிக்க அனைத்துலக உதவி நாடப்படுகிறது

கோலாலம்பூர்
மலேசியாவில் தனியார் புலன்விசாரணையாளரான பாலசுப்ரமணியம் பெருமாள், மங்கோலியப் பெண் கொலை தொடர்பில் மாறுபட்ட இரு சத்யப் பிரமாண வாக்குமூலங்களை கொடுத்திருக்கிறார்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரையும் அவர் மனைவி மற்றும் 3 குழந்தை களையும் காணவில்லை.
சுப்பிரமணியத்தின் இரண்டு மாடி பங்ளா வீடு பூட்டிக் கிடக்கிறது.
அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது அண்டை வீட்டாருக்குக் கூட தெரியவில்லை.
சனிக்கிழமை காலையே அவர்கள் வீட்டை வீட்டுச் சென்று விட்டதாகவும் அவர்கள் அனைவரும் ஒரே காரில் சென்றதாகவும் அக்கம்பக்க குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.

மலேசியாவில் விலைவாசி உயர்வு :எதிர்ப்புப் பேரணிகள்

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக மலேசியாவில் நேற்று பல இடங்களில் பேரணிகள் நடைபெற்றன.
சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா உள்ளிட்ட இடங்களில் நடந்த பேரணிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிளானா ஜெயா விளையாட்டரங்கில் மிகப்பெரிய பேரணிக்காக ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அவர்களில் பலர் சிவப்பு நிற டி சட்டை அணிந்திருந்தனர்.
இந்தப் பேரணியில்தான் மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் நேற்றிரவு உரை நிகழ்த்தவிருந்தார்.
அன்வர் மீது புதிதாக ஓரினப் புணர்ச்சி புகார் கூறப்பட்டுள்ளது.

ராஜா பெட்ராவிடம் விசாரணை

மலேசியாவின் புகழ்பெற்ற வலைப்பதிவாளரான ராஜா பெட்ராவை, மலேசியப் போலிசார் சனிக்கிழமை 2 மணி நேரம் விசாரணை செய்ததாக என்எஸ்டி தகவல் கூறியது.
மங்கோலியப் பெண் அல்டன்துயா கொலை தொடர்பில் ராஜா பெட்ரா செய்த சத்திய பிரமாணம் குறித்து போலிசார் அவரை விசாரித்தனர்.
ராஜா பெட்ரா, செந்தூல் போலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது அவரது வழக்கறிஞரையும் உடன் அழைத்துச் சென்றதாக போலிஸ் வட்டாரங்கள் கூறின.
அல்டன்துயா கொலை செய்யப்பட்ட இடத்தில் துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் உள்பட மூவர் இருந்ததாக ராஜா பெட்ரோ, ஜூன் 18 ஆம் தேதி சத்யப் பிரமாண வாக்குமூலம் கொடுத்தார்.

அல்டன்டுயா கொலை வழக்கு: மூத்த மலேசிய அரசியல்வாதிக்குத் தொடர்புண்டு

பெட்டாலிங் ëஜயா
மொங்கோலிய மொழிபெயர்ப்பாளர் அல்டன்டுயா ஷரிபூவின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மலேசிய அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பகிண்டாவின் தனிப்பட்ட புலன் விசாரணையாளர், மூத்த அரசியல்வாதி ஒருவருக்கும் கொலை செய்யப்பட்ட அல்டன்டுயாவுக்கும் இடையிலான தொடர்பு குறித்த விவரத்தைப் போலிசார் தவிர்த்துவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
தனியார் புலன் விசாரணையாளர் P.பாலசுப்ரமணியம் (படம்) தனது அறிக்கையில் அரசியல்வாதியைப் பெயரிடவில்லை என்று தி ஸ்டார் பத்திரிகை அதன் இணையத் தளத்தில் நேற்று கூறியது.

துருக்கி தூதரகத்தை விட்டு வெளியேறினார் அன்வர்

கோலாலம்பூர்
கோலாலம்பூரில் உள்ள துருக்கி தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்த மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம், தூதரகத்தை விட்டு நேற்று வெளியேறினார்.
அவர் மீது அவரின் உதவியாளர் ஓரினப் புணர்ச்சி புகார் கொடுத்ததைத் தொடர்ந்து அன்வர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அங்கு இருந்து வந்தார்.
தூதரகத்தை விட்டு அன்வர் வெளியேறிய போது அவரின் மனைவியும் மகளும் உடன் இருந்தனர்.

உறவினரின் உடலைப் பெற இந்து குடும்பம் போராட்டம்

கோலாலம்பூர்
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்த ஒருவரின் உடலைப் பெற அவரின் குடும்பத்தினர் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்ட 34 வயதான இலங்கேஸ்வரன் கடைசி வரையில் இந்துவாகவே வாழ்ந்து இறந்தார் என்று அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஆனால் இலங்கேஸ்வரன் இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்றும் ஆகவே முஸ்லீம் முறைப்படி அவரது உடலை புதைக்க வேண்டும் என்றும் இஸ்லாமிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கேஸ்வரனின் உடலைப் பெற அவரின் குடும்பத்தினர் விரும்புகின்றனர்.

‘நஜீப்பை சந்திக்கவில்லை’

அம்னோவும் பாஸ் கட்சியும் இணைவதற்கான சாத்தியங்களை ஆராய்வதற்கு துணைப்பிரதமர் நஜீப்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியதாக கூறப்படுவதை பாஸ் கட்சியின் துணைத்தலைவர் நசாருதின் இசா மறுத்துள்ளார்.
நஜீப்பை தான் லண்டனிலோ வேறு எந்த இடத்திலுமோ சந்திக்கவில்லை என்றார் அவர். பாசுப் அம்னோவும் இணைந்து செயற்படும் சாத்தியம் இல்லை என்று அவர் உறுதியாகக் கூறினார்.

அனைத்து திட்டங்களும் தொடரும்: பிரதமர் படாவி

மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து அமலாக்கம் செய்யும் என மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறினார்.
“மலேசிய ஒன்பதாவது திட்டத்தின் கீழ் அமலாக்கம் செய்யப்படவுள்ள வளர்ச்சித் திட்டங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தையும் தேசிய பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.
“மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களிலும் ஒன்பதாவது மலேசிய வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து அமலாக்கம் செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்,” என்று பிரதமர் சொன்னார்.
ஒன்பதாவது மலேசிய திட்டம் குறித்த ஆய்வு அறிக்கையை திரு படாவி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசினார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: சாபா எம்பிக்கள் வரவில்லை

கோலாலம்பூர்
மலேசியப் பிரதமர் அப்துல்லா அகமது படாவிக்கு எதிராக படாவிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாகக் கூறிய சாபா முற்போக்குக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நேற்றைய கூட்டத்திற்கு வரவில்லை.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எரிக் என்சின் மஜிபன், சுவா சூன் பூய் ஆகிய இருவரும் நாடாளுமன்றக் கூட்டத்திற்கு வரவில்லை.
பிரதமர் படாவிக்கு எதிராக தமது கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் என்று கூறிய சாபா முற்போக்குக் கட்சியின் தலைவர் யோங் டெக் லீயும் கூட்டத்திற்கு வரவில்லை.

சாமிவேலுக்கு எதிரான மறியல் போராட்டம் ரத்து

மஇகா தலைவர் சாமிவேலு பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக மஇகா தலைமையகத்தின் முன் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவிருந்த மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
ஆனாலும், சிலர் தலைமையகத்தின் முன் கூடியிருந்தனர் என்றும் போலிசாரும் கலகத்தடுப்பு படையினரும் அங்கு குழுமியிருந்தனர் என்றும் மலேசியாகினி தகவல் கூறியது.
நீண்டகாலமாக மஇகாவின் தலைவர் பதவியில் இருந்துவரும் சாமிவேலு இந்தியர்களுக்கு போதுமானவற்றை செய்யத் தவறி விட்டார். ஆகவே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காக இந்த மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Syndicate content
Copyright © 2006 Singapore Press Holdings Ltd. Co. Regn. No. 198402868E. All rights reserved.
82, Genting Lane, Singapore 349567 Tel: 6388 3838