You are here

இளையர் முரசு

100 மடங்கு சிறிய ராடார் கேமரா உருவாக்கம்

100 மடங்கு சிறிய ராடார் கேமரா உருவாக்கம்

நன்யாங் தொழில்­­­நுட்பப் பல்­­­கலைக்­­­க­­­ழ­­­கத்தைச் சேர்ந்த அறி­­­வி­­­ய­­­லா­­­ளர்­­­கள் மிகச் சிறிய ராடார் கேம­­­ராக்­­­களைத் தயா­­­ரிப்­­­ப­­­தற்­­­கான சிறிய ‘மைக்­­­ரோ­­­சிப்’பை உரு­­­வாக்­­­கி­­­யுள்­­­ள­­­னர். தற்போது பயன்­­­பாட்­­­டில் இருக்­­­கும் சிறிய வகைச் சில்­­­லு­­­களை­­­விட 100 மடங்கு சிறி­­­யவை­­­யாக இவை உள்ளன. ராடார் கேம­­­ராக்­­­கள் பொதுவாக துணைக்­­­கோள்­­­களில் பயன்­­­படுத்­­­தப்­­­படு­­­கின்றன.

எஸ்யுடிடி: அதிகமானோருக்கு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்பு

எஸ்யுடிடி: அதிகமானோருக்கு வெளிநாட்டு பயிற்சி வாய்ப்பு

சிங்கப்­பூர் தொழில்­நுட்ப, வடி­வமைப்­புப் பல்­கலைக்கழ­கத்தைச் சேர்ந்த 75% மாண­வர்­கள் அடுத்த ஆண்­டுக்­குள் மாணவர் பரி­மாற்­றம், கோடைக்­கா­லப் பாடத்­திட்­டம், நிறுவன உள்­ள­கப் பயிற்சி ஆகி­ய­வற்­றின்கீழ் வெளி­நா­டு­களில் உள்ள பல்­கலைக்­ க­ழ­கங்களில் பயில்­வதற்­கான வாய்ப்­புகளைப் பெறுவர். ஒன்பது பல்­கலைக்­க­ழ­கங்கள், அமைப்­பு­களு­டன் புதிய பங்கா­ளித்­து­வத்தை ஏற்­படுத்­து­வதன் மூலம் மாண­வர்­களுக்­கான இத்­தகைய அனைத்­து­லக வாய்ப்­பு­கள் எதிர்­வ­ரும் மே மாதம் முதல் 40 விழுக்­காடு வரை உயரவி­ருப்­ப­தா­கப் பல்­கலைக்­க­ழ­கம் நேற்று அறி­வித்­தது.

சிரிப்பில் ஆழ்த்திய ‘அபாயம்’

படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி

ரிப்­பப்­ளிக் பல­துறைத் தொழில் கல்­லூ­ரி­யின் இந்திய கலா­சார மன்றம் 2009ஆம் ஆண்­டி­லி­ருந்து ஆண்­டு­தோ­றும் நடத்­தி­வ­ரும் நாடக நிகழ்ச்­சி­யான ‘நக்­ஷத்­திரா’வில் இவ்­வாண்டு ‘அபாயம்’ எனும் நகைச்­சுவை கலந்த மர்ம நாடகம் அரங்­கேற்­றப்­பட்­டது. எழுத்­தி­லி­ருந்து இயக்­கம் வரை இப்­படைப்­பின் ஒவ்வொரு அம்­ச­மும் பள்ளி ஆலோ­ச­கர்­கள், முன்னாள் மாண­வர்­களின் வழி­காட்­டு­த­லின்­படி மாண­வர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்­டது.

ஆய்­வு: பாதிப்பை ஏற்படுத்தும் ‘உருவ அமைப்பு’ பற்றிய கண்ணோட்டம்

நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழத்­தில் உள்ள வீ கிம் வீ தொடர்பு, தகவல் பள்ளி

பெற்றோர் எதிர்­பார்ப்­ப­தற்கு முன்­ன­தா­கவே பிள்ளை­களிடையே உருவ அமைப்பு பற்றிய கண்­ணோட்­டம் ஏற்­பட்­டு­வி­டு­வ­தா­க­வும் ஊட­கங்கள் அவர்­க­ளது கண்­ணோட்­டத்தை பெரிதும் பாதிக்­கின்றன என்றும் நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழத்­தில் உள்ள வீ கிம் வீ தொடர்பு, தகவல் பள்ளி மேற்­கொண்ட ஆய்­வில் கண்ட­றி­யப்­பட்­டுள்­ளது.
சிங்கப்­பூ­ரில் இளம் வய­தி­லேயே ஊட­கங்களுக்கு பழக்­கப்­பட்­டு­வி­டும் பிள்ளை­கள் தினமும் சரா­ச­ரி­யாக 4.7 மணி நேரத்தை சமூக ஊட­கங்கள் உள்­ளிட்ட ஊடக நட­வ­டிக்கை­களில் செல­வி­டு­வது ஊடக மேம்பாட்டு ஆணையம் மேற்­கொண்ட ஆய்வில் தெரி­ய­வந்­துள்­ளது.

‘எம்பிஏ’ கல்வியில் ‘இன்சியட்’ வர்த்தகப் பள்ளிக்கு முதலிடம்

‘இன்­சி­யட்’ வர்த்­த­கப் பள்­ளி

‘ஃபைனான்­சி­யல் டைம்ஸின்’ முது­நிலைப் பட்டக் கல்­விக்­கான அண்மைய உலகத் தர­வ­ரிசைப் ­பட்டியலில் சிங்கப்­பூ­ரில் ‘இன்­சி­யட்’ வர்த்­த­கப் பள்­ளிக்கு முத­லி­டம் கிடைத்­துள்­ளது. ஆயர் ராஜா அவென்­யூ­வில் அமைந்­துள்ள இப்­பள்ளி, ஹார்­வர்ட், லண்டன் வர்த்­த­கப் பள்­ளி­களை­விட மூன்று நிலை கள் உயர்ந்து முதல் இடத்தைப் பிடித்­துள்­ளது. ஹார்­வர்ட் வர்த்­தகப் பள்ளி இரண்டா­வது நிலையை­யும் லண்டன் வர்த்­தகப் பள்ளி மூன்றா­வது நிலையை­யும் பெற்­றுள்­ளன. ‘இன்­சி­யட்’ வர்த்­த­கப் பள்­ளி­யின் வளா­கங்கள் பாரிஸ், அபுதாபி ஆகிய நக­ரங்களி­லும் அமைந்­துள்­ளன.

Pages