You are here

இளையர் முரசு

பிறர் நலம் பேணும் தாதியர் பணியில் விருப்பம்

சித்தி சஃப்ரின் ஃபாரா.

வில்சன் சைலஸ்

சாதாரணநிலைத் தேர்வுக்கான முன்னோட்டத் தேர்வில் ஃபாரா பெற்றது 30 புள்ளிகள். ‘ஓ’ நிலைத் தேர்வு எழுத இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில், தேர்வுக்காகத் தீவிரமாகத் தயா ராகிக்கொண்டிருந்த 17 வயது சித்தி சஃப்ரின் ஃபாரா, அந்தக் காலகட்டத்தில் தந்தையை இதய நோய்க்குப் பலிகொடுத்தார். உலகமே இடிந்துபோனதற்கு ஒப்பான துயரத்தில் ஆழ்ந்திருந்த ஃபாராவுக்கு ‘கல்வி ஒன்றே பக்கபலம்’ என்ற தந்தையின் சொற்கள் உத்வேகம் அளித்தன. வாழ்வில் உற்ற தோழனாக தமது தந்தையார் இருந்ததாகச் சொன்ன ஃபாரா, அவரது கூற்றை நன்கு உணர்ந்து செயல்பட்டு, ‘ஓ’ நிலைத் தேர்வில் மொத்தம் 10 புள்ளிகள் பெற்றார்.

உபகாரச் சம்பளத்தோடு வரலாறு கற்க விழையும் சதிஷ்

சதிஷ் குமார் சுகுமார், 19

ராணுவத் துறை மீதும் நாட்டின் வரலாற்றின் மீதும் அதீத ஆர்வத்தைச் சிறு வயதிலிருந்தே வளர்த்துக்கொண்டார் சதிஷ் குமார் சுகுமார், 19 (படம்). ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளியில் சென்ற ஆண்டு அனைத்துலக பெக்கலரேட் பட்டயப் படிப்பைச் சிறந்த தேர்ச்சியுடன் முடித்த இவர், சிங்கப்பூர் ஆயுதப் படையின் உபகாரச் சம்பளத்தை வென்று லண்டன் கிங்ஸ் கல்லூரியில் போர் ஆய்வு, வரலாறு பட்டப்படிப்பை மேற்கொள்ள உள்ளார். “வரலாற்றை முடிந்துபோன ஒன்றாகக் கருதாமல், அனுபவப் பாடமாக எடுத்துக்கொண்டால் அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடியவை பல இருக்கும்,” என்றார் சதிஷ்.

புத்தாக்கத்தைப் புகுத்தும் ‘சங்கே முழங்கு’

காலத்திற்கேற்ற வகையில், சிந்திக்க வைக்கும் படைப்பாகத் திகழும் ‘சங்கே முழங்கு’ கலைநிகழ்ச்சி ‘குறைந்த பிறப்பு விகிதம்’, ‘செயற்கை நுண்ணறிவு’ ஆகிய இரு முக்கிய அண்மைக் காலத்து கருத்துகளை மைய மாகக் கொண்டு இவ்வாண்டு மேடையேற உள்ளது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தனது இருபதாம் ஆண்டு நிறைவை இம்முறை கொண்டாடுகிறது. நிகழ்ச்சியில் மட்டுமின்றி நிகழ்ச்சிக்கு முன்னர் நடைபெறும் தயாரிப்பின் போதும் பல புதிய கூறுகள் இவ்வாண்டு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.

முப்படைக் குழுக்களுக்கிடையே போட்டிகள்

நிலத்தள ஆகாய தற்காப்புப் படையில் இருக்கும் சக்திவேல் கண்டியர்.

தொடர்ந்து 14ஆவது முறை சிங்கப்பூர் ஆயுதப் படையின் போர் பிரிவுப் போட்டியில் சிறந்த பிரிவு விருதை வென்றுள்ளது முதலாம் மின்னல் படைப் பட்டாளம் (1st commando battalion). இத் தொடர் வெற்றிக்குப் பங்காற்றிய மின்னல் படை வீரரான திரு கிரண் பிரபாகரன், 20, இந்த வெற்றிக்கு நல்ல படைத் தலைவர்களின் வழிக்காட்டுதலும் மனந்தளரா மனப்போக்குமே மிக முக்கிய காரணங்களாய் அமைந் தன என்றார். தமது பட்டாளத்தின் உறுப்பினர்களுடைய சகோதரத் துவமும் ஒற்றுமையும் மற்றொரு காரணமாய் அமைந்தது என்றும் அவர் சொன்னார். துணைப் படைப் பிரிவைத் தலைமை ஏற்று நடத்திச்சென்ற சார்ஜண்ட் கிரண் பிரபாகரன்,

புத்தாக்க முயற்சியில் இளையர்களை ஈடுபடுத்திய அனைத்துலக போட்டி

வகாப் இர்ஃபான்

ரவீணா சிவகுருநாதன்

பதினைந்து வயதிலேயே அறிவியல் துறையின் மீது அதீத ஆர்வம் காட்டி தொலைநோக்கியை மேலும் துல்லியமாக்குவது, ஒருவித நுண்ணுயிர்களைக் கொண்டு சுத்தமான குடிநீர், மின்சாரம் தயாரிப்பது என்பன போன்ற மேம்பட்ட ஆராய்ச்சிகளில் மாணவர்கள் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது ஆராய்ச்சி களை சிங்கப்பூர் அனைத்துலக அறிவியல் சவாலில் மற்ற நாடு களைச் சார்ந்த மாணவர்களோடு பகிர்ந்துகொண்டனர். அத்துடன், அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றியும் ஒரு வார காலம் நடைபெற்ற கருத்தரங் குகள், அறிவியல் போட்டி ஆகிய வற்றின் மூலம் அறிந்துகொண் டனர்.

இளையரின் கைவண்ணத்தில் உடைகளில் புத்தாக்கம்

சிந்து, ஷ்ருதி சகோதரிகள். படம்: திமத்தி டேவிட்

மாதங்கி இளங்கோவன்

தமிழ் இலக்கியம், வரலாறு, அரசியல் ஆகியவற்றின் பின்னணியே சிந்து, ஷ்ருதி சகோதரிகள் விரும்பும், விற்கும் சேலைகளுக்கான கரு. தங்களது தாயார் அணிந்த விதவிதமான சேலைகளைப் பார்த்து சேலையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக சகோதரிகள் குறிப்பிட்டனர். தங்களது பாட்டி வெள்ளி சரிகைகள் கொண்ட சேலையை தாமே வடிவமைத்து அவரது திருமணத்துக்கு உடுத்திய சுவையான சம்பவத்தையும் பகிர்ந்து, பல தலைமுறைகளாக சேலையுடனான தங்கள் தொடர்பு பற்றிக் குறிப்பிட்டனர் இவர்கள்.

நாட்டின் கொடியைத் தாங்கிச் சென்ற ஹெலிகாப்டரில் பயணம்

 படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய தின அணிவகுப்பு ஒத் திகையின்போது நாட்டின் கொடி யைத் தாங்கிச் செல்லும் சிங்கப்பூர் ஆகாயப்படை ஹெலிகாப்டரில் அமர்ந்து சிங்கப்பூரின் பல பகுதி களைச் சுற்றிப் பார்க்கும் அரிய வாய்ப்பை கடந்த செவ்வாய்க் கிழமை பெற்றனர் இளையர் சிலர். ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஸ்கூல் பாக்கெட் மணி’ நிதியுதவி பெறும் மாணவர்களில் ஏழு பேருக்கு இந்த வாய்ப்பு கிட்டியது. அந்த ‘சூப்பர் பியூமா’ ரக ஹெலிகாப்டரில் செம்பவாங் விமானத் தளத்தில் தொடங்கிய ஒரு மணி நேரப் பயணத்தின்போது புக்கிட் தீமா குன்று, கரையோரப் பூந்தோட்டங்கள், மரினா பே சேண்ட்ஸ், செந்தோசா போன்ற இடங்களை மாணவர்கள் ஹெலி காப்டரில் இருந்தே பார்த்து மகிழ்ந்தனர்.

Pages