தமிழ்மொழிப் போட்டிகள்

திருக்குறளின் 133 அதிகாரங்களையும் கதை, கவிதை, பாடல் அல்லது ஆடலாக 133 படைப்பாளர்கள் மொத்தம் 133 நிமிடங்களுக்குள் காணொளியாகப் படைத்த சாதனை நிகழ்வு ஏப்ரல் 28, ஞாயிற்றுக்‌கிழமை, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூரில் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு, ‘இடம் பொருள் தமிழ்’ எனும் தலைப்பில் தமிழ் சொற்கள் தொடர்பான குதூகலப் போட்டி ஒன்றுக்குச் சிற்பிகள் மன்றம் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவுடன் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில், ஏப்ரல் 20ஆம் தேதி ‘ஆற்றல் வளர்க்க விரும்பு!’ எனும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 29ஆம் ஆண்டு முத்தமிழ் விழா, ஏப்ரல் 21ஆம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் நடந்தேறியது.
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10 முதல் 12 மணி வரை நடைபெற்றது மார்சிலிங் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாடு செய்த ‘தமிழர் திருநாள் - நவரச மேடை 2024’.