தனியார் வீடு

சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலை இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் மிதமடைந்துள்ளது.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டின் (2023) இரண்டாம் பாதியில் ஆடம்பர அடுக்குமாடி வீடுகள், உயர்ரக (ஜிசிபி) பங்களாக்களின் விற்பனை சரிந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
அலெக்சாண்டிரா சாலையின் தெற்குப் பகுதியில் உள்ள கலை, வளமான வாழ்க்கை முறைக்கு அடையாளமாக விளங்கும் முன்னாள் கில்மன் ராணுவ வீரர்கள் குடியிருப்புப் பகுதியை பொது, தனியார் வீடமைப்புப் பகுதியாக மாற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் சிங்கப்பூரில் கூட்டுரிமை வீடுகளுக்கான தேவைகள் அதிகமாக இருந்ததால் வாடகை ஏறுமுகமாக இருந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறிவருகிறது.
கடந்த 2022 செப்டம்பர் 30ஆம் தேதி முதல் 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனியார் வீடுகளை விற்ற 940 முதியோர் குடும்பங்கள், 15 மாத காலம் காத்திருக்காமல் நான்கறை அல்லது அதற்கும் சிறிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீட்டை வாங்கியுள்ளன.