சிம்ப்ளிகோ

‘சிம்ப்ளிகோ’ கணக்கு அடிப்படையிலான முறையை, எதிர்காலத்தில் மோட்டார் வாகனம் தொடர்பான கட்டணங்களைச் செலுத்தப் பயன்படுத்துவதற்குத் திட்டம் உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றம் வரும் திங்கட்கிழமை (பிப்ரவரி 5) கூடும்போது, சிம்ப்ளிகோ, முன்னாள் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் ஊழல் வழக்கு, சிங்கப்பூரில் ஆட்குறைப்பு நடைமுறைகள் போன்ற அம்சங்கள் விவாதிக்கப்படவிருக்கின்றன.
சிம்ப்ளிகோ அம்சம் இல்லாத பெரியோருக்கான ஈசி-லிங்க் அட்டைகளையும் நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளையும் பொதுப் போக்குவரத்துக் கட்டணம் செலுத்துவதற்காகக் குறைந்தது 2030ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட் தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து கட்டணத்தைச் செலுத்த சிம்ப்ளிகோ தளத்துடன் சேர்த்து பெரியோருக்காக ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் கட்டண அட்டைகளைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெட்ஸ் ஃபிளாஷ்பே அட்டைகளுக்கு, முன்கூட்டியே பணம்செலுத்தப்பட்ட நெட்ஸ் அட்டைகள் இலவச பரிமாற்றம் செய்துகொள்வது ‘மறு அறிவிப்பு வரும் வரை’ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.